Wednesday, January 7, 2015

Keerthivasan

தேசபிரிவினையின் சோக வரலாறு - 12

ஒரு கட்டத்தில், பகத் சிங்கை தூக்கிலிட போகிறார்கள் மார்ச் 31 ஆம் தேதி.  நீங்கள் ஒரு வார்த்தை எழுதினால் அதை சாகும்வரை சிறைவாசமாக மாற்றலாம் பிரிடிஷ்காரர்கள், அவனோ இளைஞன், சிறுவன், 23 வயது, என்று கெஞ்சினார்கள்.  அவர் சொன்னார், " பகத் சிங் வன்முறையாளன், வன்முறை பாதையை தேர்ந்தெடுத்த அவனுக்கு அஹிம்சாவாதியான நான் ஆதரவளிப்பதா? முடியாது" என்றார்.



மதத்திற்காக வன்முறை ஏந்திய முஸ்லிம் மத பற்றாளன்.  தேசத்திற்காக வன்முறை எடுத்த பகத் சிங் வன்முறையாளன்.  அது மட்டுமல்ல.  இதை பற்றி இன்னும் 10 நாட்களில் வரக்கூடிய மாநாட்டில் பேசுவார்கள் என்பதால், ஆங்கிலேயருக்கு எழுதிபோட்டு 31ஆம் தேதியை மாற்றி 24ஆம் தேதியே தூக்கில் போட வைத்தார் காந்தி.  இவரை RSS காரர்கள் சுட்டார்கள் சுட்டார்கள் என்று பிதற்றுகிறார்களே, அந்த RSS காரர்கள் இவர் பெயர் தாங்கிய ஏகாத்மாதா ஸ்தோத்திரத்தில் இவரை போற்றி இன்னமும் பாடிக்கொண்டிருக்கிறார்கள். பகத் சிங், சுக தேவ், ராஜகுரு, சிவாஜி மகாராஜ், ரானா பிரதாப் அனைவரும் தவறாக வழி நடத்தப்பட்ட தேச பக்தர்கள் என்றொரு பட்டம் வழங்கினார்.  "MISGUIDED  PATRIOTS". 

பெருமைக்குரிய சிலிர்க்க வைக்கும் பதிவுகள் அடுத்ததாக நாம் காணப்போகும் வீரர்களுடையது.  யார் ‘PATRIOT’ யார் ‘MISGUIDED PATRIOT’ என்று தெரிந்து கொள்ள உதவும் இது.  பகத் சிங், ராஜகுரு, சுகதேவ், ராம்பிரசாத் பிஸ்மில், அஷ்பகுல்லா கான் போன்ற மாபெரும் புரட்சி வீரர்கள் பல நாட்கள் சந்திரசேகர ஆசாத் அவர்களுடன் இனைந்து பணியாற்றினார்கள்.  இவர்கள் முதலில் காந்திஜியுடன்தான் இருந்தார்கள்.  பின் ஒத்துழையாமை இயக்கம் கலைக்கபட்டபின் காங்கிரஸ் மேல் இருந்த நம்பிக்கை குறைந்தது.  பின் லாலா லஜ்பத் ராய் அவர்களை பிரிடிஷார் தாக்கி கொன்றார்கள் என்றவுடன் அனைவருக்கும் வெறி வந்து தீவிரவாதத்தை கையில் எடுத்தார்கள். 

பிரிட்டிஷாருக்கு அஹிம்சை புரியவில்லை.  அமைதியாக போராடுவோர் மீது தடியடி நடத்தி கொன்றால் அடுத்து என்ன செய்வது?  ஆயுதத்தை கையில் எடுத்தார்கள்.  பல பணக்காரர்களிடமிருந்து கொள்ளை அடித்தார்கள்.  கக்கோரி ட்ரைன் கொள்ளை இவரை ஒரு ஹீரோவாக சித்தரித்து.  காவல் நிலையத்தினுள் இருகைகளையும் வீசியபடி சென்று முதுகில் ஓட்டிவந்த எச்சரிக்கை செய்தியை காவல் நிலையத்திலேயே ஒட்டிவிட்டு வந்தார்.  துணிச்சல்காரர்.  மாறுவேடம் போட்டால் எவராலும் கண்டுபிடிக்கவே முடியாதவர். 

சமஸ்கிருதம் படித்த அமைதியான 15 வயது பிராமண சிறுவன் கைதானபோது நீதிபதி முன்னிறுத்தினார்கள்.  நீதிபதியிடம் என் பெயர் ஆசாத் (விடுதலை).  என் வீடு சிறைச்சாலை என்றார்.  இவரது வயதை கண்டு ஒரு இரவு முழுவதும் நடுங்கும் குளிரில் கோவணத்துடன் சிறைவைக்க உத்தரவிட்டார்.  ஆசாத் இரவு முழுவதும் தண்டால், பஸ்கி, சூரியநமஸ்காரம் செய்து உடல் உஷ்ணத்தை கூட்டி எந்த வித சிரமமும் இன்றி வெளியே வந்தார்.  அனைவரும் அவரை தோலிள் சுமந்து "ஆசாத், ஆசாத்" என்று கோஷம் போட்டு பாராட்டினர்.  அன்று முதல் அந்த பெயர் ஒட்டி கொண்டது. 

இவரது சகோதரர் சுகதேவ்.  ஹிந்துஸ்தான் ரிபப்ளிக்கன் அச்சொசியஷன் என்ற அமைப்பை தொடங்கி போராடினார்.  1926 இல் வைசராய் பயணித்த புகைவண்டியை தகர்க்க முயன்றார்.  கடைசியாக அதிகாரி சாண்டர்ஸ் கொலை.  ஜவஹர்லால் நேருவின் தந்தை மோதிலால் இவருக்கு புரட்சி வேலைகளுக்கு ரகசியமாக பணம் கொடுத்து உதவியுள்ளார்.  காடுகளிலும், மலைகளிலும், தங்கி பயிற்சி எடுத்து இரு கைகளாலும் குறிபார்த்து சுடக்கூடிய திறமையை வளர்த்துகொண்டார்.  கோவில் குருக்களாக மறைந்து வாழும்போது அடையாளம் கண்ட ஒரு போலிஸ் காரர், "நீ ஆஜாத்தானே "  என்று கேட்க ஆமாம் நான் ஆஜாத்தான், ஆஞ்சநேயரின் பக்தர்கள் அனைவரும் சுதந்திரமான ஆஜாத்தான் என்று சொன்னார்.  அவர் மேலும் விசாரிக்க முயல, " என்ன கேட்கிறாய் நீ, உன்னை இப்போதே சபித்துவிடுவேன்," என்று மிரட்ட, அந்த போலிஸ்காரர் பயந்து ஓடியே போய்விட்டார். 

தன் தாய் பட்டினியால் வாடுகிறாள், இறக்கும் தருவாயில் உள்ளாள்  என்று தெரிந்தும் கையில் இருந்த பணத்திலிருந்து ஒரு ருபாய் கூட கொடுக்காமல், இது தேசத்திற்கான பணம்.  இது என்னுடையதல்ல.  இதிலிருந்து எடுத்து கொடுக்கும் அதிகாரம் எனக்கோ அல்லது வேறு யாருக்குமோ இல்லை என்றார்.  இறந்ததற்கு போக கூட முடியவில்லை.  தாயின் வீட்டை சுற்றி போலிஸ் கண்காணிப்பு.  அல்லாஹாபாதில் உள்ள ஆல்பிரெட் பூங்காவில் இவரை சுற்றி வளைத்து போலீஸ்.  கையில் இருந்த துப்பாக்கியில் ரவை தீரும் வரை சுட்டார்.  ஆசாத் சுடும்போது அணைத்து தோட்டாக்களும் போலிசின் தோளுக்கு கீழே சென்றன.  போலிஸ் சுடும்போது அனைத்தும் தலைக்கு மேலே சென்றன.  வெள்ளைக்கார போலிஸ் அதிகாரி இவரது குறியை சுட்டபடியே ரசித்தேன் என்று தன்னுடைய கையேட்டில் எழுதி உள்ளான்.  கடைசி தோட்டா கையில் இருக்கும்போது தான் உயிரோடு என்றுமே பிடிபடமாட்டேன் என்ற சபதம் நிறைவேற தன்னை தானே சுட்டுக்கொண்டு பலிதானமானார்.  அவர் எந்த அளவிற்கு சிம்ம சொப்பனம் என்றால் இறந்த பின்னும் வெகு நேரம் அருகே வரவில்லை போலீஸ்.  சற்று நேரம் கழித்து வந்த பின் சுட்டு தள்ளினார்கள்.  பிரேத பரிசோதனையில் அவரது உடலிலிருந்து எடுக்கப்பட்ட குண்டுகள் மொத்தம் 64 என்று சொல்லியது.  ஆஜாத்தின் நினைவாக அந்த துப்பாக்கியையும் எடுத்து சென்று, பின் சமீபத்தில்தான் அது கிடைத்தது.  இவர்களா “MISGUIDED PATRIOTS?”.


ஆக்கம்: ஆனந்த் வெங்கட்

Keerthivasan

About Keerthivasan -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :