Wednesday, January 7, 2015

Keerthivasan

ஒரு தத்வார்த்த பயணம் – 6 – ஒலியில் கடவுளா?

ஒலி பற்றி ஏதாவது விளக்கம் உண்டா? குறிப்பிட்ட மந்திர ஒலிகளுக்கு பல பயன்பாடுகளும் உள்ளதாகக் கூறுகிறார்களே, என்று ஒரு சகோதரி கேட்டிருந்தார்! நானறிந்த அளவில் ஒரு சிறிய விளக்கத்தைத் தருகிறேன்ஒலி பற்றி மட்டும் !

இந்தப் பிரபஞ்ச மண்டலத்தில் எங்கும் நீக்கமற நிறைந்திருப்பது வெளியும் (SPACE), ஒளியும் ( LIGHT) என்பது பற்றி ஒரு விஷயம் நேற்று எழுதியிருந்தேன்! இவ்விரண்டையும் போலவேதான் ஒலி (SOUND) எனப்படும் சப்தமும்! அதுவும் இவ்விரண்டைப் போலவே இந்தப் பிரபஞ்சத்தில் நீக்கமற நிறைந்தே உள்ளது!

நண்பர்கள் நினைக்கலாம்! பிரபஞ்சத்தில் எந்த அசைவும், கடல்கள் போன்ற எந்த இயக்கமும் இல்லாத கிரகங்களில் நிசப்தமாகத்தானே இருக்கும் என்று! ஆம் நிசப்தமாகத்தான் இருக்கும்! ஆனால் நிசப்தம் என்பது குறைந்த சப்தம்! அவ்வளவே! ஆக எந்த இருமையும் உண்மையில் ஒருமையின் அளவுகோலே என்பதைப் அறிந்து கொள்ளுங்கள்! (இது ஆன்மீகத்தில் சிவம் நாராயணத்துக்கும் பொருந்தும்! அதை வேறொரு பதிவில் சொல்கிறேன்!) ஒலியை ஆங்கிலத்தில் 'DECIBEL' டெசிபெல் என்று சொல்லப்படும் அலகினால் அளக்கிறார்கள்! ஆக மனிதர்கள் காதுகளில் விழும் குறைந்தபட்ச ஒலி அளவு இது என்றும், இதற்கு மேல் கடும் சப்தம் கேட்டால் காதுகள் செவிடாகி விடும் என்கிற அதிகபட்ச அளவும் உள்ளன. ( குறைந்த பட்சம் 40 DECIBEL, அதிகபட்சம் 200 டெசிபெல் என்று நினைக்கிறேன்! தெளிவாக தெரியவில்லை!) ஆக நம் காதுகளின் குறைந்தபட்சம் கேட்கும் ஒலி அளவை விட இன்னமும் குறைவான ஒலியலைகளை நம் காதுகளால் கேட்க இயலாது! அந்தச் சூழலை நாம் நிசப்தம் என்று சொல்கிறோமே ஒழிய அது உண்மையில் நிசப்தம் இல்லை! அந்த குறைந்த ஒலியை கேட்கும் திறன் நமது காதுகளுக்கு இல்லை! அவ்வளவே!

குறைந்தபட்ச கேட்கும் திறன் ஒவ்வொரு உயிரினத்துக்கும் ஒவ்வொன்றாக உள்ளது! ஆக பல்வேறு மிருகங்களும் நம்மை விட நுண்ணிய ஒலிகளை கேட்கும் திறனை அதிகமாகக் கொண்டுள்ளன! இது அவைகளுக்கு இயற்கை அளித்த பரிசு! அவ்வளவே! இதன் மூலம் அவைகளுக்கு ஆபத்திலிருந்து பாதுகாத்துக் கொள்ளும் தன்மை கிடைக்கிறது! முகர்வுத் திறனும் அப்படியே! ஆக இதனால்தான் பல காட்டு மிருகங்கள் நமது நுண்ணிய காலடி ஓசையைக் கூட கேட்டு திரும்பிப் பார்க்கின்றன! முகர்வு மூலமும் உணர்ந்து பார்க்கின்றன! (உம்- போலீஸ் நாய்) . இந்த திறனின் மூலம்தான் பூகம்பம் வரும் இடத்தில் மண்ணுக்குள் உண்டாக்கும் நுண்ணிய ஒலி அதிர்வுகளை கரப்பான் பூச்சி உணர்ந்து அமைதியின்றி எங்குமே அமராமல் சட சட வென பறந்துகொண்டே இருக்கிறது!

ஆக ஒலி பிரபஞ்சம் முழுதும் நீக்கமற நிறைந்தே உள்ளது! ஆனால் ஒலி தானாக உள்ளதா இல்லை உருவாக்கப் பட்டதா என்று ஒருகேள்வி வருகிறது. உண்மையில் நம் ஆன்மீக விதிகளின் படி பிரபஞ்சம் அழிந்து போய் மறுபடித் தோன்றிய தோற்றுவாய்த் தருணத்தில் (அதாவது கிரகங்கள் உருவான எல்லா விஷயங்களும் முடிந்து போன தருணம்!) ஒலி என்ற ஒன்று இல்லவே இல்லை என்கின்றனர்! அதுதான் உண்மையான நிசப்தம்! அப்போதும் கூட வேதங்கள் இருந்தன! உண்மையில் 'வெளி'யெங்கும் வேதங்கள் தங்களைத் தாங்களே பாடியபடி உள்ளன என்று சொல்கின்றனர்! ஆனால் நிசப்தம் உண்மையாகவே இருந்தபோது வேதங்களால் தங்களைத் தாங்களே பாடமுடியாமல் மவுனமாக பாடிக் கொண்டிருந்ததாம்! அப்புறம் வேதங்கள் சப்தமாக பாடிக் கொள்ள ஒரு வழி வந்தது! அதாவது உலகில் உண்டான முதல் ஒலியலை! அதுவே 'ஓம்' என்பது! உயிர்கள் எதுவும் உருவாகாத நிலையில் பரப்பிரம்மம் துயில் நிலையில் இருக்கும்போது கூட ஓம் என்னும் சப்தம் கேட்டுக் கொண்டே இருந்தது என்கின்றனர். 'ஓம்' என்பது மூவெழுத்துக் கூட்டு! அதாவது 'ஆ', 'உ ', 'ம்' என்கிற மூன்றெழுத்துக் கூட்டே 'ஓம்' ஆகும்! இதில் ஆ என்னும் ஆகாரம் நாராயணனாகவும், உ என்னும் உகரம் சிவமாகவும், ம என்னும் மகரம் பிரம்மனாகவும் சொல்லப்படுகிறது! இதச் சொல்லில் என்ன சிறப்பெனில் ஆ என்பது அடிப்படை உயிரெழுத்தாகவும், அதே போலவே உ பின் வரும் முதலெழுத்தாகவும் , ம என்பது மெய்யெழுத்தும் சேர்ந்தது என்பதே! இப்படிப் பட்ட சிறப்புகள் உள்ள 'ஓம்' என்னும் ஓங்கார நாதம் பிரபஞ்சமெங்கும் சொல்லப்படுவதாகக் கூறுகிறார்கள்! ஆக இந்த ஓங்கார ஒலியினை நாமும் கேட்க இயலுமா? முடியும்!

ஓங்கார ஒலி மட்டுமல்ல! சில மிருகங்கள் போல நுண்ணிய ஒலி உணரும் திறன், பார்வைத் திறன், முகர்வுத் திறன், தொடு திறன் ஆகிய அனைத்தையும் நம்மால் பெற முடியும் வழி உண்டு! அதுவே மனதை ஒருநிலைப் படுத்தி தியானம் செய்வது! அவ்வாறு செய்பவர் ஒரு கட்டத்தைத் தாண்டிய பின் ஓங்காரம் அவர் காதுகளில் தானே ஒலிக்கத் துவங்கும்! அப்புறம் அது இருந்துகொண்டே இருக்கும் அவர் தியானிக்கும் நேரமெல்லாம்! அதே போல அவர்களுக்கு தியானத்தின் மூலம் அனைத்துப் புலன்களின் செயல்பாடுகளும் அதிகரிக்கும்! இதுதான் ஓங்கார நாதத்தின் பெருமை!

ஒலிகளின் மூலம்தான் மொழிகளும் தோன்றியது! இங்கு அடிக்கடிப் பேசப்படும் விஷயாமாக மந்திரங்கள் தமிழ் சொன்னால் சான்னித்தியம் கிடைக்காதா? சமஸ்கிருதம்தான் சான்னித்தியம் கிடைக்கும் மொழியா என்றெல்லாம் வாதங்களைப் பார்க்கிறேன்! இது அவரவர் மனோநிலையைப் பொறுத்தது என்றுதான் சொல்வேனேயோழிய இதுதான் சிறந்தது அதுதான் சிறந்தது என்று வாதிடும் எண்ணமோ, மொழிப் புலமையோ எனக்கில்லை! எந்த மொழியாக இருந்தாலும் இறையைத்தான் பாடுகிறோம்! அவ்வளவே! ஆனால் எம்மொழியில் இறையைப் பாடினாலும் கூட 'ஓம்' என்னும் அடிப்படை நாதம் சேர்ந்து இருந்தால் சிறப்புதான்! அதற்கு மேல் அது பற்றிக் கருத்துக் கூறும் அளவு நான் பெரிய அறிஞனில்லை!

தொடரும்

Keerthivasan

About Keerthivasan -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :