Monday, January 5, 2015

Keerthivasan

தேசபிரிவினையின் சோக வரலாறு - 11

Swami Shraddhanand
காங்கிரஸ் தலைவர்கள் ஆரம்பத்தில் இந்த வன்முறைகளை பற்றி நம்பவே இல்லை.  இது போன்ற நெஞ்சை உலுக்கும் பயங்கரம் நடக்கவே வாய்ப்பில்லை, சும்மாவேனும் பாதிக்கப்பட்டவர்கள் ஒன்றுக்கு இரண்டாக சொல்கிறார்கள் என்று நினைத்து தங்களையே அசிங்கப்படுத்தி கொண்டார்கள்.  காந்தி ஹிந்து எதிர்ப்பு - இஸ்லாம் ஆதரவு தலைவர் போலவே பேசினார்.  கோகலே துவக்கிய சர்வன்ட்ஸ் சொசைடி ஆப் இந்தியா அமைப்பினர் அறிக்கை சமர்ப்பிக்க நடந்ததை விசாரிக்க சென்றனர். தாக்கலும் செய்தனர்.  3000 பேர் வலுக்கட்டாயமாக மதம் மாற்றப்பட்டதை 4-5 பேர் என்று சுருக்கி மாற்றினார். அதையும் அவர்களே மனமுவந்து மாறியதாக அறிவித்தார்.  அதையும் காங்கிரசில் இருந்த ஒன்றிரண்டு முஸ்லிம்கள் எதிர்க்கவே  அந்த அறிக்கையை குப்பையில் போட்டார். 

இந்த வன்முறைக்கு பிறகு முஸ்லிம்களிடம் உரையாற்றும்போது காந்தியின் மனோபாவம் ஒரு கலீபாவின் மனநிலையை ஒட்டியே இருந்தது.  அவர் ஆக்ரோஷத்துடன் சொன்னார்," மாப்ளாக்கள் தங்களுடைய மதம் என்று எதை கருதுகிறார்களோ, எது அவர்களுக்கு உகந்தது என்று கருதுகிறார்களோ, எதை முறை என்று நினைக்கிறார்களோ அதை காக்க பெரும் வீரத்துடனும், மதப்பற்றுடனும், இறை உணர்வுடனும் போராடுகிறார்கள்," என்றார்.  ஷௌகத் அலி, மொஹமத் அலி போன்றவர்களுக்கு இது போன்ற பேச்சுக்கள் பெரும் தைரியத்தை கொடுத்தது.  ஹிந்துக்களை கொன்று குவித்ததற்கு மாப்பாக்களுக்கு ஆதரவு தெரிவித்து காங்கிரஸ் கூட்டத்திலேயே பாராட்டி தீர்மானம் கொண்டு வர முடிந்தது.

காந்திஜி இந்த குண்டர்களை சுதந்திர போராட்ட தியாகிகளாக சித்தரித்தார்.  உண்மையாகவே சுதந்திரத்திற்காக போராடிய கான் அப்துல் கபார் கான், அஷ்பகுல்லா கான் அனைவரின் தியாகமும் அசிங்க படுத்தப்பட்டது.  அடுத்த கொடுமை இந்திரா காந்தி பிரதரமானபின் இவர்களுக்கு சுதந்திர போராட்ட தியாகி பென்ஷன் தர ஏற்பாடு செய்தார்.

இது போன்ற அற்ப காரணங்களுக்காக இவ்வளவு கோபப்பட்டு மிக பெரிய கொடூரத்தை நிகழ்த்த தயங்காத முஸ்லிம்களோடு ஹிந்துக்கள் நட்பாக இருக்க முடியும் என்ற எண்ணம் கனவாகவே இருந்தது.  ஒரு சிறு பொறி போதுமானதாக இருந்தது முஸ்லிம்களை கோபப்படுத்த.  மதம் தேசாம் இரண்டில் ஒன்றைதான் தேர்ந்தெடுக்க வேண்டுமென்றால் அவர்கள் மதத்தையே தேர்ந்தெடுக்கிறார்கள் என்பது உறுதியானது. 

காங்கிரசின் முடிசூடா மன்னனான பின் காந்தியின் நடவடிக்கையை கேட்க ஆளில்லாமல் போனது.  அனைத்து பொறுப்புகளும் அவர் தலையிலேயே விழுந்தன.  யாரையும் கலந்து ஆலோசிக்காமல் அணைத்து முடிவுகளையும் தன்னிச்சையாகவே எடுத்தார்.  அவருக்கு  மட்டுமே புரிய கூடிய 'இறைகுரல்', அதன் வழிகாட்டுதலிலேயே அனைத்தும் செய்வதாக சொன்னார்.  அஹிம்சையும், சத்தியமும் என்றுமே தன்னை தவறான பாதைக்கு இட்டு செல்லாது என்று எண்ணினார்.

இந்த அமளிதுமளிக்கு இடையில் சுவாமி ஷ்ராத்தானந்தா இந்த நாடு வெகு விரைவில் சுதந்திரம் பெரும், அப்போது இது போல பல மதங்கள் இருந்தால் மாப்ளா கலவரம் போன்றவை உருவாகலாம், ஆகவே அனைவரையும் தாய் மதம் திருப்பி, ஹிந்துவாக்கிவிட்டால் பின் மத கலவரம் என்பது இல்லாமல் இருக்கும் என்று  முஸ்லிம்களை திரும்ப தாய் மதம் திருப்பும் பணியில் ஈடுபட்டிருந்தார். 

எங்கு போய் பேசினாலும் அவர் இஸ்லாமையும் குர்ஆனில் உள்ளவற்றை பற்றி பேசுவார்.  அதை கேட்ட பலர் ஆயிரக்கணக்கில் தாய் மதம் திரும்பினார்கள்.  அனைவரும் அதிசயிக்கும் வண்ணம் 10-15000 பேர் ஒரே நேரத்தில் திரும்புவார்கள்.  இது முஸ்லிம்களுக்கு பெரும் கோபத்தை உண்டாக்கியது.  ஆரிய சமாஜத்தை சேர்ந்த இவர் இப்படி செய்கிறார் என்று காந்தியிடம் புகார் சொன்னார்கள்.  உடனே அவர் முஸ்லிம்கள் நம்மிடம் உதவி கேட்கிறார்கள் என்று நினைத்து அவர்களை சந்தோஷபடுத்த ஆரிய சாமசத்தை சேர்ந்த யாரும் காங்கிரசில் இருக்க கூடாதென்று உத்தரவிட்டார்.  அன்றும் சரி இன்றும் சரி ஹிந்து தலைவர்கள் உயிரை பற்றியோ பாதிகாப்பை பற்றியோ கவலைபடுவதே இல்லை.  இது பெரும் தவறு.  ஹிந்து தலைவர்கள் கொல்லபடுவது சமீப கால பிரச்னை அல்ல என்பதற்கு இது ஒரு உதாரணம்.  சில சமயம் முஸ்லிம்கள் அவரை தேடி வந்து குர்ஆனில் விளக்கம் கேட்பார்கள்.  அவரும் சொல்லுவார்.  கேட்டவுடன், ஹிந்துமதம் திரும்புவார்கள்.  இப்படியாக ஒரு நாள் ரஷீத் அலி என்பாவ்வன் அவரை சந்தித்து குரான் பற்றி உரையாட வேண்டும் என்று வந்தான்.  யாருமில்லாத நேரம்.  தண்ணீர் கேட்டான், வேலையாள் உள்ளே போனான்.  பொட்டென்று துப்பாக்கியை எடுத்து சுட்டான்.


சுவாமியின் படுகொலைக்கு பிறகு, 1926 ஆம் ஆண்டு ஜூலை 26 அன்று.  மிக பெரிய கலாரம் உருவானது.  முஸ்லிம்களை ஹிந்துக்கள் பார்குமிடங்கள் எல்லாம் கொல்ல ஆரம்பித்தனர்.  ஊரே கலோபரமானது,  பின் போலிஸ் தலையிட அமைதி திரும்பியது.  இந்த கொலையை கண்டித்து காங்கிரஸ் காரர்கள் காந்திஜியை ஒரு கண்டனன் தீர்மானம் வெளியிடும்படி கேட்டுகொண்டனர்.  செய்யவேண்டும் என்று நினைத்தவர் ஒரு முஸ்லிம் எதிர்த்தவுடன் கைவிட்டார் தீர்மானத்தை.  தனியாக ஒப்புக்கொண்டாலும் சபையில் ஒப்புக்கொள்ளவில்லை. 

கடைசியில் அவர் சொன்னது, "ரஷீத் அலி வன்முறையின் காரணமாக சுவாமியை கொல்லவில்லை.  அவனுடைய மத உணர்வு புண்பட்டதால் கொல்ல வேண்டியதாயிற்று.  இது வன்முறை அல்ல.' என்றார்.   சுவாமியின் கொலைக்கு சுவாமியே காரணம் என்பது போல முடித்தார்.  இந்த காந்தி, சுவாமியின் கொலையை நியாயப்படுத்தினார்.  ஆனால் சுவாமி, காந்திக்கு செய்தது என்ன?  அவர் இன்றும் சுமந்து கொண்டு இருக்கிறாரே மகாத்மா என்ற பட்டம், அது இந்த சுவாமி ஹரித்வாரில் இருந்தபோது காந்திக்கு சூட்டினார்.    சுபாஷ் சந்திர போஸ், அம்பேத்கர் போன்றோர் தலைமைக்கு வராமல் பார்த்துகொண்டார்.  தனக்கு தாளம் போடும் நேரு, பட்டேல் போன்றோரை, ஜால்ரா போடும் கூட்டம் ஒன்றை பக்கத்திலேயே வைத்துகொண்டார்.

Keerthivasan

About Keerthivasan -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :