Saturday, January 24, 2015

Keerthivasan

தேசபிரிவினையின் சோக வரலாறு - 14

இது ஏதோ 70 - 80 வருடங்கள் முன்பு நடந்தது.  இது இன்றைக்கு உதவாது என்று எண்ணவேண்டாம்.  1991 முதல் 96, சிவராஜ் பாட்டில் காங்கிரஸ் சபாநாயகராக இருந்தார்.  அப்போது காபினெட் முடிவெடுத்து, பாராளுமன்றம் கூடும்போது வந்தே மாதரம் பாடிவிட்டு துவக்குவது என்று முடிவெடுத்தார்கள்.  நினைவில் கொள்ளுங்கள்.  இது ஒரு காபினெட் முடிவு.  கலந்து ஆலோசிக்கப்பட்டு எடுக்கப்பட்டது. 

முதல் நாளன்று பாடும்போது முஸ்லிம்களும், கம்யுனிஸ்டுகளும் எதிர்த்தார்கள்.  பின் கைவிடபட்டது.  பின் அவர்களே முடிவெடுத்தார்கள், கடைசி நாளன்று மட்டும் பாடுவது என்று.  ஏனென்றால் முதல் நாள் வந்தால்தான் அனைவருக்கும் சம்பளம்.  கடைசி நாளன்று யாரும் இருக்க மாட்டார்கள்.  யாரவது ரெண்டு பேர் உட்கார்ந்திருப்பார்கள். வந்தே மாதரம் என்ன யாருமில்லாத இடத்தில பாடப்படவேண்டிய ஒரு பாடலா? தேசத்தை ஆராதிப்பது ஒரு தவறா? 

இப்போது, மே 9, 2013 இல் ஷபிகுர் ரஹ்மான் வந்தே மாதரம் பாடும்போது அவையை விட்டு வெளியேறினார், பாடல் ஓடிகொண்டிருக்கும்போதே. 

இப்படியெல்லாம் செய்வதால் அவர்கள் மிகவும் ஆச்சாரமான முஸ்லிம்கள் என்று நினைக்க வேண்டாம்.  இதெல்லாம் செய்ய செய்ய விளம்பரம் கிடைக்கும், அவர்களை பார்த்து மற்றவர்களுக்கு பயம் வருமோ  என்ற ஆசைதான் காரணம்தான்.  பணம், பதவி, வோட்டு இதற்காக தங்கள் மதத்தை தாங்களே அசிங்க படுத்தி கொள்கிறார்கள்.  மனிதனையும், பன்றியையும் தவிர அனைத்தும் உண்பதற்கே என்ற எண்ணம் உடையவர்களாக இருக்கிறார்கள்.  அவர்களுடைய கொள்கை தாருல் ஹராப் ஆக இருக்கும் இந்த பாரதத்தை தாருல் இஸ்லாமாக மாற்ற வேண்டும் என்பதாம்.  அதாவது இஸ்லாமுக்கு எதிரான நாடு என்ற நிலையிலிருந்து இஸ்லாமிய நாடு என்ற நிலைக்கு மாற்ற வேண்டுமாம்.  இது காந்திஜியின் சிந்தனைக்கு எட்டவே இல்லை.  அவரே சில இடங்களில் சொல்லியிருக்கிறார், "சகிப்புத்தன்மையற்ற சிறுபான்மையினராகவோ, முரட்டுத்தனம் மிக்க பெரும்பான்மையினராகவோ இருக்கின்றனர் முஸ்லிம்கள்" என்று.  ஆனாலும் ஒன்றிணைத்து போராடுவது  என்ற கொள்கையிருந்து  விலகி, முஸ்லிம்களை சந்தோஷப்படுத்துவது என்ற வலைக்குள் பிரிடிஷார் அவரை தந்திரமாக விழ வைத்தனர். 
விட்டுக்கொடுப்பது என்பது எல்லையின்றி போய்க்கொண்டிருந்தது. 

"ரகுபதி ராகவ ராஜாராம்,
பதீத பாவனா சீதாராம்
ஈஸ்வர அல்லாஹ் தேரோ நாம்
சப்கோ ஷன்மதி தே பகவான்." என்று நாம் அறிவோம். 

இதன் ஆதி என்ன? 

"ரகுபதி ராகவ ராஜாராம்,
பதீத பாவனா சீதாராம்
சுந்தர மாதவ மேக ஷ்யாம்,
கங்கா துளசி சாலக்ராம். "

இணைப்பு மொழியாக ஹிந்தி வேண்டும் என்று, ஹிந்தி சாஹித்ய சம்மேளன் நிறுவினார் காந்தி.  அதில் ஒரு பாடல் சிவாஜி மன்னனை போற்றி.  அவன் இல்லையென்றால் இன்று அனைவருக்கும் சுன்னத் செய்யப்பட்டு முஸ்லிமாகி இருப்போம் என்று.  அங்கு வந்திருந்த ஒரிறந்து முஸ்லிம்களை இது உறுத்தவே உடனே காந்தியிடம் சென்று புகார் சொன்னார்கள்.  அந்த பாட்டையே நிறுத்தினார்.

Keerthivasan

About Keerthivasan -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :