வாழ்க்கையின் அனைத்து நிகழ்வுகளையும் அதன் போக்கிலேயே ஏற்றுக் கொள்வது
என்பதற்கு முதிர்ந்த பக்குவம் தேவைப்படுகிறது. அதுவும் கண்ணுதற் கடவுளின்
கருத்து இன்றி வாய்க்காது.
ஒரு காரியத்தை நான் செய்கிறேன் என்கிற போதே மனம் முதலான அனைத்து கருவி கரணங்களையும் பரபரப்பு தொற்றிக் கொள்கிறது.
ஒருவருக்கும் தீங்கு நினைக்காமல்,
செய்நன்றி மறவாமல், எதன் பொருட்டும் ஏங்கி தவிக்காமல், இங்கு நடப்பது எதுவும் என்னால் அல்ல என்று மனதால் அடங்கி, வருவதை அதன் போக்கிலேயே ஏற்பவர்களுக்கு கிடைப்பது வேறென்ன..?

சிவானுபவம் தான்...!
"பரபரக்க வேண்டா பலகாலும் சொன்னேன்- சிவபோக சாரம்.
வரக்கண்டு ஆராய் மனமே _ ஒருவருக்கும்
தீங்கு நினையாதே செய்நன்றி குன்றாதே
ஏங்கி இளையாது இரு."