Tuesday, March 24, 2015

Keerthivasan

தேவாரப் பாடல் பெற்ற தலங்கள் - 05 - திருக்கோலக்கா


 
தேவாரப் பாடல் பெற்ற தலங்கள் - 05 - திருக்கோலக்கா
 
திருக்கோலக்கா

இது ஒர் அற்புத திருத்தலம். வாய் பேச முடியாத ஊமை குழந்தையைப் பேச வைத்து அற்புதம் நிகழ்த்திய தலம். இதன் பின்னணியில் உள்ள வரலாறு வியப்பைத் தரும் அருட்செயல் ஆகும்.

பார்வதிதேவி ஞானப்பால் புகட்ட சிவஞானம் வாய்க்கப் பெற்ற திருஞான சம்பந்தர், சீர்காழி உறையும் எம் பெருமான் தோணியப்பரை அருந்தமிழ் பாமாலைகள் பல பாடி பரவி ஏத்தி, பின்பு அங்கிருந்து இத்தலத்தை அடைந்தார். அங்கு தனது சிறு கைகளால் தாளம் போட்டு பாடுவதை கண்ட சிவ பெருமானார் குழந்தையின் கைகள் வலிப்பது பொறாமல், அவருக்கு தங்கத்தால் ஆன இரண்டு தாளங்களை கொடுத்தார். அதை வணங்கி பெற்று மகிழ்ந்த திருஞானசம்பந்தர் அதனைத் தட்டிப்பார்க்க அதிலிருந்து ஓசை வரவில்லை. அச்சமயம் இறைவனார் தம் அருட்கண்ணால் எம்பிராட்டியை நோக்க, அம்மையும் அந்த தாளத்திற்கு ஓசை கொடுத்தாள். இதனால் இங்குள்ள மூலவர் தாளபுரீஸ்வரர் எனவும், அம்மன் ஓசைநாயகி எனவும் அழைக்கப்படுகிறார்கள்.

இறைவன்: ஸ்ரீ சப்தபுரீசுவரர்
இறைவி : ஓசைகொடுத்த நாயகி
தலவிருட்சம் : கொன்றை 
 
தீர்த்தம்: சூரிய தீர்த்தம், ஆனந்த தீர்த்தம் (கோயிலின் எதிரில் உள்ளது) 

2000 வருடங்களுக்கும் மேலான பழம்பெருமை வாய்ந்த திருத்தலம். பாடியவர்கள்:
திருஞானசம்பந்தர், சுந்தரர்.
"நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பும் ஞானசம்பந்தனுக்கு உலகவர்முன்
தாளம் ஈந்தவன் பாடலுக்கு இரங்கும் தன்மையாளனை என்மனக் கருத்தை
ஆளும் பூதங்கள் பாடநின் றாடும் அங்கணன் தனை எண்கணம் இறைஞ்சும்
கோளிலிப் பெருங்கோயில் உள்ளானைக் கோலக்காவினில் கண்டு கொண்டேனே."

-என்பது சுந்தரமூர்த்தி சுவாமிகள் தேவாரம்.

நாகர்கோவிலை சேர்ந்த வாய் பேச முடியாத ஊமை குழந்தைக்கு இந்த தலத்தில் வந்து பிரார்த்திக்க பேச்சு வந்ததன் நன்றிக்கடனாக தங்கத்தால் ஆன பொற் தாளம் இறைவர்க்கு காணிக்கையாக செலுத்தப்பட்டதை இன்றும் காணலாம்.

சீர்காழி திருத்தலத்திற்கு வடக்கே செல்லும் சாலையில் சிறிது தூரம் சென்று இக்கோயிலை அடையலாம்.

அருள்மிகு சப்தபுரீசுவரர் திருக்கோயில்,
திருக்கோலக்கா- 609 110,
சீர்காழி
நாகப்பட்டினம் மாவட்டம்.
போன்: +91- 4364-27417
 
தகவல் தொகுப்பு: திரு. சரவணன் சிவதாணு

Keerthivasan

About Keerthivasan -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :