Saturday, May 23, 2015

Keerthivasan

தேவாரப் பாடல் பெற்ற தலங்கள் - திருப்பழனம்



தேவாரப் பாடல் பெற்ற தலங்கள் - திருப்பழனம்




இறைவன் : ஸ்ரீ ஆபத்சகாயர்
இறைவி : ஸ்ரீ பெரிய நாயகி
தல விருட்சம் : கதலி (வாழை), வில்வம்
தீர்த்தம். : மங்கள தீர்த்தம் (பயனிற்றி அழிந்துவிட்டது), காவிரி

2000 வருடங்களுக்கு மேல் பழமையான திருத்தலம் ஊர்:திருப்பழனம்
மாவட்டம்:தஞ்சாவூர்
பாடியவர்கள் : திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர்

தேவார பாடல் பெற்ற காவிரி வடகரை தலங்களில் இது 50வது தலம்.
திருவிழா: ஏழூர் சப்தஸ்தான விழா, சிவராத்திரி, மார்கழி திருவாதிரை, ஐப்பசி அன்னாபிஷேகம்

தல சிறப்பு : இங்கு சிவன் சுயம்புமூர்த்தியாக அருள்பாலிக்கிறார். பங்குனி, புரட்டாசி பௌர்ணமிகளிலும் அதற்குமுன்பின் இரண்டு நாட்களிலும் நிலா சுவாமியின் மேல்படுகிறது.

முகவரி: அருள்மிகு ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில் , திருப்பழனம் அஞ்சல். திருவையாறு 613 204 . தஞ்சாவூர் மாவட்டம். போன்: +91 4362 326 668.

பழமையான ராஜகோபுரம் - மூன்று நிலைகளையுடையது. கொடிமரமில்லை. பலிபீடம் நந்தி உள்ளன. வெளிச்சுற்றில் விநாயகர், சுப்பிரமணியர் சந்நிதிகள் உள்ளது.

தலபெருமை:
கதலிவனம் என்ற பெயரும் இத்தலத்திற்குண்டு. சந்திரன் வழிபட்ட தலம். குபேரன், திருமால், திருமகள், தர்மசர்மா என்னும் அந்தணன் முதலியோர் பூசித்து பேறுபெற்ற தலம். இத்தலம் சப்தஸ்தான தலங்களில் இரண்டாவதாகும்.

தல வரலாறு:

அழகிய வயலும் வயல் சார்ந்த இடமும் சூழ்ந்த இடமாதலால் திருப்பழனம் என்று பெயர்.

ஒரு சமயம் அந்தணச் சிறுவன் ஒருவனை எமதருமன் துரத்திக் கொண்டு வரும்போது அச்சிறுவன் இத்தலத்து இறைவனைச் சரணடைந்தபோது இறைவன் அச்சிறுவனுக்கு காட்சியளித்து ஆபத்தில் உதவி செய்ததால் இறைவனுக்கு ஆபத்சகாயேசுரர் என்று பெயர்.


தகவல் தொகுப்பு: திரு. சரவணன் சிவதாணு

Keerthivasan

About Keerthivasan -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :