Saturday, May 23, 2015

Keerthivasan

ஒரு தத்வார்த்த பயணம் – 8 – தசாவதாதசாவதாரமும் டார்வினும்

ஒரு தத்வார்த்த பயணம் – 8 – தசாவதாதசாவதாரமும் டார்வினும்

நம்முடைய இந்து மதம் கொஞ்சம் சிந்தித்துப் பார்த்தால் அறிவியலாகத்தான் உள்ளது. அறிவியலில் செய்திகள் நேரடியாகச் சொல்லப்படுகின்றன. ஆன்மீகத்தில் அது மறைமுகமாகச் சொல்லப் படுகிறது. அவ்வளவே. உதாரணத்துக்கு வாசலில் சாணம் தெளிப்பது. சாணம் என்பது ஒரு சிறந்த கிருமிநாசினி என்பது நாம் அறிந்ததே. ஆக சாணம் தெளிப்பது என்பதை ஒரு தற்காப்பு மருத்துவ அறிவியலாகதான் உள்ளது. ஆனால் எப்போதும் மக்கள் நல்ல விஷயங்களை நேரடியாகச் சொன்னால் ஏற்றுக் கொள்ளவே மாட்டார்கள். '' ஆமாம் வந்துட்டாரு மருத்துவம் போதிக்க?'' என்று சொல்வான். 



 

இப்போதே பாருங்கள் சாணம் கிருமிநாசினி என்று நிரூபிக்கப் பட்டவுடன் யாராவது நகரங்களில் சாணம் தெளிக்கிறார்களா என்று? இதனால்தான் அதை சாணம் தெளித்தால் வீட்டுக்குள் மகாலட்சுமி வருவாள் என்று மறைமுகமாகச் சொன்னார்கள். அதுவும் கூட ஒருவகையில் உண்மைதான். சாணம் தெளித்த வீட்டில் வியாதிகள் வராது. அப்போது மருத்துவச் செலவே இல்லாது போக நிறையப் பணம் இருக்கும். இதுதான் நம் மத சடங்குகளின் அறிவியல் தன்மை. நாமெல்லாம் பிரபல உயிரியல் விஞ்ஞானி CHARLES DARWIN பற்றி அறிந்திருப்போம்.

உலகிலே உயிர்கள் தோன்றியது எப்படி, அவை எப்படியெல்லாம் பரிணாம வளர்ச்சி அடைந்தன அதிலிருந்து எப்படி மனித இனம் உண்டானது என்றெல்லாம் கண்டறிந்து '' THE EVOLUTION THEORY '' என்றதொரு சிறந்த கோட்பாட்டை உருவாக்கினார். இந்து மதத்தில் கூட மனிதப் பிறவிக்கு முன்னால் ஈறாக, பேனாக, பன்றியாக இப்படியெல்லாம் பிறவிகள் எடுக்க வேண்டும் என்றுள்ளது. ஆனால் இந்த டார்வின் தியரி சொல்லும் அந்த விஷயம் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நம்முடைய இந்து மதத்தில் தசாவதாரம் மூலமாகச் சொல்லப்பட்டுள்ளது இது உண்மை.

இப்போது பாருங்கள் டார்வின் கொள்கைப்படி முதலில் தோன்றிய இனம் தண்ணீரில் தோன்றியது (HYDRA). அதுவே இந்து மதத்தில் மச்சாவதாரம் என்னும் மீனின் அவதாரமாகச் சொல்லப்பட்டுள்ளது. அடுத்து டார்வின் சொல்வது நீரிலும் தரையிலும் வாழும் இனம் (AMPHIBIA). இதுவே தரையிலும் நீரிலும் வாழும் ஆமை உருக்கொண்ட கூர்மாவதாரமாக உள்ளது. அடுத்து தரையில் மட்டும் வாழும் இனம் . இதுவே வராஹ அவதாரம் என்று பன்றியைக் குறிக்கிறது. அடுத்து மிருக குணம் கொஞ்சம் மிருக உருவும் கொண்ட மனிதன் இதுவே நரசிம்ஹ அவதாரமாக உள்ளது.

அப்புறம் மனிதன் சிறிய உருவினனாக வருவது வாமன அவதாரமாகவும் வருகிறது. அடுத்து பெரிய உடலுடன் உணர்ச்சிகளைக் கட்டுப் படுத்தாத, வேட்டையாடும் குணமுடைய கோபமுடைய மனிதனாக பரசுராம அவதாரம் உள்ளது. அதையடுத்து நல்ல உடல் பலமும் நற்பண்புகளும் கல்வியும் வீரமும் செறிந்த ராம அவதாரம் வருகிறது. அதன் பின் உடல் பராக்கிரமம் அதிகரித்து சாதனைகள் நிகழ்த்தி மல்யுத்தம் உள்ளிட்ட போர் முறைகளில் நிபுணராக இருந்த பலராம அவதாரம். அடுத்து மனிதன் தன் நற்பண்புகளாலும், குணங்களாலும் அரசனாகி புகழுடன் ஆட்சி செய்து அரசியல் தந்திரங்களில் நிபுணனாகி தெய்வமாக வணங்கப் படும் நிலைக்கு உயர்வதென்பது கிருஷ்ண அவதாரமாக உள்ளது.

அப்புறம் உலகம் விஞ்ஞான முன்னேற்றத்தின் உச்சத்துக்குப் போய் அழிவு ஆயுதங்கள் பலவற்றையும் செய்து தங்களுக்குள் மக்கள் போரிட்டு அழிவை நோக்கியே அனைவரும் போக வைக்கக் கூடிய கல்கி அவதாரம் வருகிறது. இப்போது சிந்தியுங்கள் மச்ச, கூர்ம, வராக, நரசிம்ம அவதாரங்கள் மிருகங்களின் வெவ்வேறு நிலைகளையும் இதர அவதாரங்கள் மனித வளர்ச்சியின் வெவ்வேறு நிலைகளையும் சித்தரிக்கின்றன என்பது புரிகிறதா? இதனால்தான் தசாவதாரம்தான் டார்வின் கொள்கைக்கு முன்னோடி என்று சொல்லப்படுகிறது.

தொடரும்
 

Keerthivasan

About Keerthivasan -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :