Thursday, August 6, 2015

Keerthivasan

நாதுராம் கோட்சே வாக்குமூலம் – குற்றப்பத்திரிகைகான மறுமொழி – 9

நாதுராம் கோட்சே வாக்குமூலம் – குற்றப்பத்திரிகைகான மறுமொழி – 9

On Direct Action Day, 16 August 1946

42. அது மட்டுமன்று ; வீர சாவர்க்கர் 1947 ஆகஸட் 15 அன்று இந்து சங்கத்தாரில் பெரும்பாலோரின் முடிவை ஒதுக்கி வைத்து விட்டு, சக்கரத்துடன் கூடிய இந்தப் புதிய கொடியைத் தம்முடைய வீட்டின் மேல் ஏற்றினார்.பகவா கொடியையும் உடனாக ஏற்றினார். இதற்கும் மேலாக டாக்டர். முகர்ஜி வீர சவர்க்கருடன் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு இந்தியக் கூட்டமைப்பு அமைச்சரவையில் தாம் பதவியை ஏற்றுக் கொள்ளலாமா என்று அனுமதி கேட்டபோது அழுத்தந்திருத்தமாக பதில் கூறினார்.எந்தக் கட்சி தேர்ந்தெடுக்கப்பட்டு தலைமை தாங்கினாலும் அந்தப் புதிய அரசு தேசிய அரசாக அங்கீகரிக்கப்பட வேண்டும் என்றும்,  எல்லா தேசபக்தர்களாலும் அது ஆதரிக்கப்பட வேண்டும் என்றும், ஆகவே இந்து சங்கத்தாரும் ஒத்துழைப்பை நல்க வேண்டும் என்றும், அரசால் கேட்டுக்கொள்ளப்பட்டால், ஒரு பதவியை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும்  கூறினார். ஓர் இந்துசபாத் தலைவரான டாக்டர் முகர்ஜி போன்றவரை தேசிய அமைச்சரவையில் பங்கு ஏற்க அழைப்பு விடுத்த சமரச மனப்பான்மைக்கு அவர் காங்கிரஸ் அமைச்சர்களைப் பாராட்டினார். போபட்கரும் டாக்டர் முகர்ஜியை ஆதரித்தார்.

43. இந்த சமயத்தில்,  காங்கிரஸின் சில உயர்நிலைத் தலைவர்களும், அவர்களுடைய மாநில அமைச்சர்களும் கூட வீர சவர்க்கரை சந்தித்ததும்,  புதிய நாட்டை ஆதரிக்க ஒரு ஐக்கிய முன்னணியை உருவாக்குவது பற்றி அவர்களுக்கிடையில் சுறுசுறுப்பான கடிதப் போக்கு இருந்து வந்ததும் வெளிச்சத்துக்கு வந்தன. இந்தக் கொள்கையை வீர சாவர்க்கர் முன்பே கூறி வந்திருந்தார். தேச பக்தர்களின் பொதுவான முன்னணிக்கு நான் கூட எதிர்ப்பாக இருக்க முடியாது. ஆனால் காங்கிரஸ் அரசாங்கம் காந்திஜியின் கட்டை விரலுக்கடியில் ஆட்டுமந்தையைப் போன்று தொடர்ந்து கொண்டிருந்தது. உண்ணாவிரதம் இருக்கப்போவதாக தந்திரமாக அச்சுறுத்தி காங்கிரஸ் அரசாங்கத்தின் மீது காந்திஜி தம்முடைய இந்து எதிர்ப்பு ஆர்வக்கொள்கையைத் திணிக்க முடியும். எந்தப் பொது முன்னணியாக இருந்தாலும் இச்சூழ்நிலையில் காந்திஜியின் சர்வாதிகாரத்தை மற்றொரு வடிவில் அமைப்பதாகத்தான் போய் முடியும் என்பதும், அதன் விளைவாக இந்துத்துவத்துக்குத் துரோகம் விளையும் என்பதும் எனக்குத் தெளிவாகத் தெரிந்தது.

44. வீர சாவர்க்கரின் இத்தகைய ஒவ்வொரு செயலும் என்னுடைய எதிர்ப்புக்கு ஆளானது. நானும், ஆப்தேயும், சில இளைய இந்து சங்கத்தார் நண்பர்களும், எங்களுடைய தீவிர செயல்திட்டத்தை மகாசபையோ, அதன் பெயர் பெற்ற தலைவர்களோ இல்லாமல் ஒரேயடியாக தனித்தே வரையறுப்பது என்று முடிவு செய்தோம். எங்கள் புதிய திட்டங்கள் பற்றி வீர சாவர்க்கர் உட்பட அவர்களில் யாரிடமும் பேசுவதில்லை என்று உறுதி பூண்டோம்.

45. இந்து மகாசபையும், அதன் வயது முதிர்ந்த தலைவர்களின் கொள்கைகளையும் என் நாளிதழான அக்ரனி அல்லது ஹிந்து ராஷ்ட்ராவில் நான் விமர்சிக்கத் தொடங்கினேன். இந்து சங்கத்தாரின் இளைய தலைமுறையிடம் எங்கள் சொந்தத் தீவிர செயல்த்திட்டத்தை ஏற்றுக் கொள்ளுமாறு வெளிப்படையாக அழைப்பு விடுத்தேன்.

46. என்னுடைய தனித்த செயல்த்திட்டத்தை உருவாக்குவதற்காக, கையிலிருந்த இரண்டு நிச்சயமான வழிமுறைகளைத், தொடக்கமாக எடுத்துக்கொள்ள எடுத்துக் கொள்ள முடிவு செய்தேன். முதலாவதாக, காந்திஜிக்கு எதிராகத் தொடர்ந்து வலுவான ஆனால் அமைதியான ஆர்ப்பாட்டங்களை நடத்துவது ; இந்து எதிர்ப்புப் பிரச்சாரங்களை மேற்கொள்ளும் அவருடைய விரும்பத்தகாத பிராத்த்தனைக் கூட்டங்களில் குழப்பத்தையும், ஒழுங்கின்மையையும், ஆர்ப்பாட்ட எதிர்ப்பு மூலம் ஏற்ப்படுத்துவது. இரண்டாவதாக, நம்முடைய இந்து சகோதரர், சகோதரிகள் மீது முஸ்லிம்கள் நடத்தும் மதவெறி அட்டூழியத்திலிருந்து அவர்களைப் பாதுகாக்க ஹைதராபாத் அரசுக்கெதிராக எல்லைக் கோட்டுக்கருகில் ஆர்ப்பாட்டம் நடத்துவது. ஆம் இத்தகைய செயல் திட்டத்தை ரகசியமாகவும், சர்வாதிகார முறையிலுமே நடத்த முடியுமாகையால், அதில் நம்பிக்கையுடையவர்களிடமும், எங்கள் ஆணைகளுக்கு கேள்வி கேட்காமல் கீழ்ப்படிபவர்களிடமும் மட்டுமே அதை வெளிப்படுத்துவது என்று முடிவு செய்தோம்.

47. இந்த அறிக்கையில் மேற்கண்ட விவரங்களை எல்லாம் நான் குறிப்பிட்டிருக்கத் தேவையில்லை. ஆனால், மதிப்புக்குரிய அரசு வழக்கறிஞர் தமது தொடக்க உரையில் என்னை வீர சவர்க்கரின் கைகளில் வெறும் கருவியாக இருந்தேன் என்று சித்தரித்து விட்டார்.இப்படிக் கூறியது எனது மதிப்பீட்டுத்திறன், செயற்பாடு ஆகியவற்றின் தனித்தன்மைக்கு வேண்டுமென்றே செய்யப்பட்ட அவமதிப்பு என்று நான் உணர்ந்தேன்.என்மீது ஏதேனும் தவறான கருத்து ஏற்படாமல் தவிர்க்க மேற்கண்ட  உண்மைகளை நான் சொல்ல நேர்ந்தது. இதன் விளைவாக,   என்னுடைய அறிக்கையின் மீதிப் பகுதியை விவரிப்பதற்கு முன்பாக நான் மீண்டும் உறுதியாகக் கூறுவது என்னவென்றால், காந்தியை நான் சுடுவதற்குக் காரணமான என்னுடைய  செயற்பாடுகள் குறித்து வீர சாவர்க்கருக்கு எதுவும் தெரியும் என்பது உண்மையன்று என்பதுதான். நான் மீண்டும் கூறுவது என்னவென்றால், என் முன்னிலையில் ஆப்தேயோ, அல்லது நானோ, பாட்கேயிடம், காந்திஜி, நேரு, சுரவார்டி ஆகியோரை தீர்த்துக்கட்டுமாறு வீர சாவர்க்கர் எங்களுக்கு ஆணையிட்டிருக்கிறார் என்று சொன்னதாகக் கூறுவது முற்றிலும் பொய்யே. குற்ற உடந்தை சாட்சி இவ்வாறு பொய் சொல்ல வைக்கப்பட்டிருக்கிறார்.நாங்கள் பாட்கேயை வீர சாவர்க்கர் இல்லத்துக்கு அழைத்துச் சென்று கடைசி தரிசனம் பெற்றோம் என்பதும், அல்லது எந்த சதித்திட்டம் தொடர்பாகவும் வீர சாவர்க்கர்  'வெற்றியுடன் திரும்பி வாருங்கள் ' - யஷாஸ்வி ஹௌன் யா ' என்று சொன்னார் என்பதும் உண்மையல்ல. என் முன்னிலையில் ஆப்தேயோ அல்லது நானோ, பாட்கேயிடம், காந்திஜியின் நூறு ஆண்டுகள் முடிந்து விட்டன ; ஆகவே நாம் வெற்றியடைவது உறுதி என்று வீர சவர்க்கர் எங்களிடம் சொன்னதாக எப்போதும் சொல்லவில்லை. நான் இத்தகைய நல்லாசிக்காக ஏங்கும் மூடநம்பிக்கை உடையவனல்லன். இத்தகைய குறிசொல்வதில், மிகவும் குழந்தைத்தனமாக நம்பிக்கை உடையவனுமல்லன்.

48. 1948 ஜனவரி 30 - நடைபெற்ற நிகழ்ச்சியின் பின்புலம் முழுமையாகவும், தனிப்பட்ட நிலையிலும் அரசியல் ஆகும். அதனைச் சற்று விரிவாகவே நான் விளக்க விரும்புகிறேன். காந்திஜி, இந்துக்கள், முஸ்லிம்கள், மற்றவர்களின் மதநூல்களை மதித்தார் என்பதும், அவருடைய பிரார்த்தனைகளில் கீதை, குரான்,விவிலியத்திலிருந்து பாடல்களை இசைத்தார் என்பதும், அவர்மீது எனக்கு எந்தப் பகைமை எண்ணத்தயும் தூண்டவில்லை. என் மனத்துக்கு, மதங்களின் ஒப்பீட்டைப் பயில்வது மறுப்புக்குரியதே அன்று; உண்மையில் அது ஒரு தகுதியும் ஆகும்

49. வடக்கில் வடமேற்கு எல்லைப் பகுதியும், தெற்கே கன்னியாகுமரியும், கராச்சிக்கும், அஸ்ஸாமுக்கும் இடைப்பட்ட நிலப்பகுதியும் கொண்ட முழுமையான பிரிவுபடாத இந்தியா தான் என் தாய்நாடாக இருந்து வந்தது.இந்தப் பரந்த நிலப்பரப்பில் பல்வேறு மதங்களைச் சார்ந்த மக்களும் வாழ்கின்றனர். இத்தகைய சமயக் கோட்பாட்டினர் தங்கள் சித்தாந்தங்களையும்,  நம்பிக்கைகளையும் பின்பற்றுவதற்கு
முழுமையான, சம உரிமையைப் பெற்றிருக்க வேண்டும் என்பதில் நான் உறுதியாய் இருக்கிறேன்.  இந்த நிலப்பரப்பில் இந்துக்கள்தாம் அதிகமானவர்கள். இந்த நாட்டிற்கு அப்பாலோ அல்லது வெளியேயொ தங்களுக்குச் சொந்தமானது என்று சொல்லிக்கொள்ள எந்த இடமும் இல்லை. நினைவுக்கெட்டாத காலம் முதலாக இந்துக்களின் தாய் நாடாகவும், புனிதநாடாகவும் இந்துஸ்தானம்தான் இவ்வாறு இருந்து வருகிறது. இந்நாட்டின் புகழ், பெருமை, அதன் பண்பாடு, கலை, அறிவு, அறிவியல், தத்துவம்  எல்லாவற்றுக்கும் இந்துக்கள் பெரிதும் கடன்பட்டுள்ளனர். இந்துக்களுக்கு அடுத்தபடியாக முஸ்லிம்கள் அதிகமாய் உள்ளனர். பத்தாம் நூற்றாண்டு முதல் இந்த நாட்டில் அவர்கள் முறைவைத்து ஆக்கிரமித்து, இந்தியாவின் பெரும் பகுதியில் முஸ்லீம் ஆட்சியை கொஞ்சம் கொஞ்சமாக நிறுவுவதில் வெற்றி பெற்றனர்.

நன்றி: சாலிய மஹரிஷி சாலியர்

Keerthivasan

About Keerthivasan -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :