Thursday, August 6, 2015

Keerthivasan

நாதுராம் கோட்சே வாக்குமூலம் – குற்றப்பத்திரிகைகான மறுமொழி – 10

நாதுராம் கோட்சே வாக்குமூலம் – குற்றப்பத்திரிகைகான மறுமொழி – 10




50. பிரிட்டிஷார் வருவதற்கு முன்பாக, பல நூற்றாண்டுகளின் அனுபவத்தின் விளைவாக இந்தியாவில் முஸ்லிம்கள் எஜமானர்களாகத் தொடர முடியாது என்பதை இந்துக்களும், முஸ்லிம்களும் உணர்ந்திருந்தனர். அவர்களை விரட்டியடிக்க முடியாது என்பதையும் தெரிந்திருந்தனர். இருபாலரும்மே ஒன்றாகத்தான் வாழ்ந்திருக்க வேண்டும் என்பதைத் தெளிவாகப் புரிந்து கொண்டனர். மராட்டியர்களின் வளர்ச்சி, ராஜபுத்திரர்களின் புரட்சி, சீக்கியர்களின் எழுச்சி ஆகியவற்றால், இந்த நாட்டில் முஸ்லிம்களின் பிடி மிகவும் தளர்ந்து போயிற்று. இந்தியாவில் அவர்களுள் சிலர் தங்கள் உயர் நிலைக்குத் தொடர்ந்து ஆசைப் பட்டாலும், நடைமுறையில் நம்பிக்கையுடைய மக்கள் அத்தகைய எதிர்பார்ப்புகள் வீணானவை என்பதைத் தெளிவாகக் கண்டார்கள்.

ஆனால் மற்றொரு புறம், இந்துக்களையும், முஸ்லிம்களையும் விட பிரிட்டிஷார் போரிலும், சூழ்ச்சியிலும், மிக வல்லவர்களாக இருந்ததை நிரூபித்து விட்டனர். நிர்வாகத்தில் மேம்பட்ட முறைகளைப் பின்பற்றியதாலும், உயிருக்கும், உடைமைக்கும் எந்த ஒரு வேறுபாடும் காட்டாமல் பாதுகாப்பை உறுதிப் படுத்தியதாலும், இந்துக்களும், முஸ்லீம்களும் அவர்களைத் தவிர்க்க இயலாமல் ஏற்றுக் கொண்டனர். பிரிட்டிஷார் வருவதற்கு முன்பாகவே இந்துக்களுக்கும், முஸ்லிம்களுக்கும் இடையே கருத்து வேற்றுமை இருந்து வந்தது. இருந்தபோதும், பிரிட்டிஷார் இந்த வேற்றுமைகளைப் பழிபாபத்துக்கு அஞ்சாமல் பயன்படுத்தி,  தங்கள் ஆட்சியையும், அதிகாரத்தையும் நிலைநிறுத்திக் கொள்வதற்காக மேலும் அதிக வேற்றுமைகளை உறுவாக்கினர். நாட்டின் ஆட்சியில் மக்கள் நலனுக்காக அதிகாரத்தைப் பிடிக்கும் நோக்கத்துடன் தொடங்கப்பட்ட இந்திய தேசீய காங்கிரஸ், தன் முன்பாக முழுமையான தேசீயம் என்ற கருத்தியலைத் தொடக்கத்திலிருந்தே வைத்துக் கொண்டிருந்தது. அதன் பொருளாவது, எல்லா இந்தியர்களும் மக்களாட்சி அடிப்படையில் சம உரிமைகளும், முழுமையான சமத்துவமும் அனுபவிக்க வேண்டும் என்பதுதான். அன்னியர் ஆட்சியை அகற்றி, அங்கு மக்களாட்சியையும், மக்கள் அதிகாரத்தையும் நிறுவும் இந்தக் கருத்தியல், என் பொது வாழ்க்கையின் தொடக்க காலத்தில் இருந்தே என்னை மிகவும் கவர்ந்தது.

51. நாட்டின் பொது விவகாரங்களிலும், தேர்தல்களிலும், சட்டமன்றத்துக்கு உள்ளேயும், வெளியேயும், அமைச்சரவை நிறுவுவதிலும், கலைப்பதிலும், மதம் சார்ந்த, சாதி சார்ந்த கருதுதல்கள் முற்றிலுமாக அகற்றப்பட வேண்டும் என்பதை நான் என் எழுத்துக்களிலும்,பேச்சுக்களிலும் எப்போதும் கூறி வந்துள்ளேன். எப்போதுமே நான் மதசார்பற்ற அரசையும் இணைந்த வாக்காளர்களையும் ஆதரித்து வந்துள்ளேன். என் மனத்துக்கு இதுதான் செய்வதற்குரிய ஒரே அறிவார்ந்த செயல் என்று தோன்றுகிறது. (இங்கு இந்து மகாசபையின் பிலாஸ்பூர் அமர்வில் 1944 அக்டோபரில் நிறைவேற்றிய தீர்மானங்களின் பகுதிகளைப் படிக்கிறேன். இணைப்புப் பக்கங்கள்12-13 )காங்கிரஸின் செல்வாக்கால் இந்தக் கருத்தியல் இந்துக்களிடம் நிலையாக ஆதரவைப் பெற்றுவந்தது. முஸ்லிம்கள் ஒரு சமூகமாக முதலில் தனித்து நின்றனர். பின்னர், அன்னிய எஜமானர்களின் பிரித்தாளும் கொள்கையின் அரிப்புடைய செல்வாக்கால், இந்துக்களை மேலாதிக்கம் செலுத்தும் பேராவலை வளர்ப்பதில் ஊக்கம் பெற்றனர். இந்தப் பார்வையின் முதல் அடையாளம் 1906-ல் முன்னாள் வைஸ்ராய் மிண்டோ பிரபு தூண்டிவிட்ட தனி வாக்காளர் தொகுதிக்கான கோரிக்கையாகும். சிறுபான்மையினர் பாதுகாப்பு என்ற சாக்கில் பிரிட்டிஷ் அரசாங்கம் இந்த வேண்டுகோளை ஏற்றது. காங்கிரஸ் கட்சி வாய்மொழியாக எதிர்ப்புத் தெரிவித்த போதும், அது பிரிவினையை ஏற்காமலும்,எதிர்க்காமலும் 1934- ல் ஓர் இழிவான வழிமுறையைப் பின்பற்றியதால், இறுதியாக அது பிரிவினையை படிப்படியாக அதிகரித்தாகிவிட்டது.

52. அதை இந்த நாட்டின் பிரிவினை கோரிக்கை இவ்வாறு உருவெடுத்து, வலுப்பெற்றது. தொடக்கத்தில் ஆப்பின் மெலிந்த முனையாக இதுந்தது, இறுதியில் பாகிஸ்தான் ஆகி விட்டது. போற்றற்குறிய நோக்கமாகிய ஐக்கிய முன்னணி, இந்தியாவின் எல்லா வகுப்பினரையும் ஒன்று சேர்த்து,அன்னியரை விரட்டியடிக்க தொடங்கப்பட்டது. பிரிவினை வாதம் முடிவில் மறைந்து விடும் என்று நம்பப் பட்டது. அதுவே தவறாகி விட்டது.

53. இணைந்த வாக்காளர் தொகுதிக்கு கொள்கையளவில் நான் ஆதரவு கொடுத்தபோதும் தனித்தனி வாக்காளர் தொகுதிகளைத் தற்காலிகமாக அறிமுகப்படுத்துவதற்கு நான் என்னை சரிப்படுத்திக் கொண்டேன்.ஏனென்றால், முஸ்லிம்கள் அவற்றில் ஆர்வம் காட்டினார்கள். எனினும், பிரதிநிதித்துவம் கட்டாயமாக ஒவ்வொரு சமூகத்தின் எண்ணிக்கை அடிப்படையில் தரப்பட வேண்டும் ; அதற்கு மேலாக அளிக்கப்படக் கூடாதென்பதை நான் வலியுறுத்தினேன்.இந்த நிலையைத் தொடர்ந்து நான் கடைப் பிடித்தேன்.
       
54. ஒருபுறம் பிரிட்டிஷ் எஜமானர்களின் அகத்தூண்டுதலாலும், மறுபுறம் காந்திஜியின் தலைமையிலான காங்கிரஸின் ஊக்குதலாலும், சமூக அடிப்படையில்  முஸ்லீம் சமுதாயத்தினர் தொடர்ந்து முஸ்லீம் லீக்கை ஆதரித்து வந்தனர். இதனால் ஆண்டுக்கு ஆண்டு முஸ்லீம் லீக் தனது பிரிவினைக் கொள்கையை அதிகரித்துக் கொண்டே செல்வதற்கு ஊக்கம் பெற்றது.

55. நான் முன்பே சுட்டிக் காட்டியது போன்று, சமூகப் பிரிவு சார்ந்த வாக்காளர் தொகுதிக்குக் கொள்கையளவில் எதிர்ப்பு தெரிவித்திருந்த போதும், முஸ்லீம் லீக்கின் நியாமற்ற கோரிக்கைகள் முதன்முதலில் காங்கிரஸால் லக்னோ உடன்படிக்கையில் 1916- ல் ஏற்கப் பட்டது. ஒவ்வொரு அரசியலமைப்பு திருத்தத்தின்போதும் இது தொடர்ந்தது. காங்கிரஸ் தேசியத்திலிருந்தும் , ஜனநாயகத்திலிருந்தும் வழுவிச் சென்றபோது பெருஞ்செலவு படைத்த பேரிடரை உருவாக்கிவிட்டதை அடுத்தடுத்த நிகழ்வுகள் காட்டுகின்றன.

நன்றி: சாலிய மஹரிஷி சாலியர்

Keerthivasan

About Keerthivasan -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :