Tuesday, August 11, 2015

Keerthivasan

இதுதான் இந்துமதம் – 15

இதுதான் இந்துமதம் – 15




பற்றினை விடுத்து செயல் புரிவது கர்ம யோகம் என்றால், பற்றற்ற‌ இறைவனை பற்றிக் கொள்வது பக்தி யோகமாகிறது. பற்றினை விடுப்பதும், பற்றற்ற ஒன்றை பற்றுவதும் ஒன்றே அல்லவா ? இதே வழியில் ராஜ யோகத்லும் நம் உடலில் உள்ள ஏழு சக்கரங்களை கடந்து நம் உயிர்சக்தி சமாதி நிலை எனும் பற்ற‌ற்ற தன்மையை அடைகிறது. அந்த ஏழு சக்கரங்களை சுருக்கமாக பார்ப்போம்.

"யமா" எனும் சக்கரம், அகிம்சை சத்தியம், பிறர்பொருளுக்கு ஆசைபடாதல், பிரம்மசரியம் எனும் புலனடக்கம், திருடாமல் இருப்பது, தேவையானதை மட்டுமே பெறும் மன‌நிலை என ஐந்து தன்மைகளை குறிக்கிறது. "நியமா" எனும் சக்கரம் சுயபரிசோதனை மற்றும் சுய பரிசீலனை செய்து வாழ்வதை குறிக்கிறது. மூன்றாவது சக்கரம் ஆசனங்கள் செய்து உடலை தயார் படுத்தும் நிலையை குறிக்கிறது. நான்காவதாக இந்த பிரபஞ்சத்தின் ஆதார சக்தியான பிராண‌னை முறைப்படுத்தும் "பிராண‌யாமத்தை" குறிக்கிறது. ஐந்தாவது "பிரத்யாஹாரா" எனும் சக்கரத்தை குறிக்கிறது. இது புலன்களை மகிழ்விக்கும் விஷயங்களில் இருந்து நம்மை உள்நோக்கி திருப்புவதை குறிக்கிறது. ஆறாவது "தாரணா" எனும் மனதை ஒருநிலைப்படுத்தும் நிலையை குறிக்கிறது. இதன் விளைவால் ஏழாவது சக்கரமான மனம் ஒரே புள்ளியில் ஒடுங்கும் "தியான நிலை அடையப்படுகிறது.

இந்நிலையில் மாயை விலகத் தொடங்குகிறது. மரண பயம் மற்றும் அனைத்து துக்கங்களும் மறைகின்றன. உடல், மனம், புலன்கள், புத்தி, பிராணன், நான் எனும் எண்ணம் என அனைத்தும் ஒடுங்கி ஆத்மாவில் லயிக்கிறது. பரிபூரண சுதந்திர உணர்வு தோன்ற தொடங்குகிறது. இறுதி நிலையான "சமாதி நிலை" அடையப்படுகிறது. சமாதி நிலையே முக்தி நிலையாகும்.

இந்த முக்தி நிலையைதான் பற்றற்று செயல் புரியும் கர்ம யோகத்தில் அடைகிறோம், பற்றற்ற இறைவனை பற்றும் பக்தி யோகத்திலும் அடைகிறோம், ஞான யோகம் எனும் எண்ணத் தெளிவிலும் அடைகிறோம்.

அது என்ன எண்ணத் தெளிவு ? அறிவால் இறைவனை அறிந்து கொள்ள இயலாது என்பதை அறிவதே "தெளிவாகிறது". அறிவு என்பது இறைவன் கொடுத்த வரம். அந்த அறிவு வரம்புகளுக்கு உட்பட்டது. அந்த அறிவால் வரம்புகளற்ற இறைவனை நாம் அறிந்து கொள்ள இயலாது. பரம்பொருளை குறித்த‌ இடைவிடாத அறிவு தேடலும் ஒரு நிலையில் "ஞானத்தை" அருள்கிறது. ஞானம் என்கிற தெளிவு கிடைத்தபின் தேடல்கள் இல்லை. எதை குறித்து உடல், மனம், புலன் என அனைத்தையும் ஒருங்கினைக்க படுகிறதோ அதை நீ அடைந்து விடுகிறாய் எனும் சத்திய வாக்கியத்தை இது மெய்ப்பிக்கிறது.

மேலே குறிப்பிட்ட அனைத்து யோகங்களுக்கும் மிக முக்கியமானதாக பயற்சியும், வைராக்கியமும் அமைகிறது. அவற்றை குறித்து அடுத்தப் பகுதியில் பார்ப்போம்.
 

Keerthivasan

About Keerthivasan -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :