Friday, October 23, 2015

Keerthivasan

ரத்தத்தில் முளைத்த என் தேசம் - 02

ரத்தத்தில் முளைத்த என் தேசம் - 01

Englightened Master


உலக வரலாற்றில் ஏழாம் நூற்றாண்டு மிக முக்கியமானதாக இருக்கிறது. அது ஏன் என்பதை இக்கட்டுரையை தொடர்ந்து படிக்கையில் நாம் அறிந்துக் கொள்ளலாம். பாரதம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அனைத்து துறைகளிலும் தலை சிறந்து விளங்கி இருந்த நிலையில். பொது ஆண்டு ஏழாம் நூற்றாண்டில் கேட்கவும் வேண்டுமா ? பழம்பெருமை வாய்ந்த நம் தேசத்திற்கு என்ன நடந்தது என்று அறிவதற்கு நாம் கால இயந்திரத்தில் அமர்ந்து ஏழாம் நூற்றாண்டிற்கு பயனித்தாக வேண்டும்.

ஏழாம் நூற்றாண்டில் கிரேக்கம், எகிப்து, பாரசீகம், சீனா என மற்ற நாடுகளோடு ஒப்பிடுகையில் பாரதம் நாகரீகத்தின் மிக உச்ச‌த்தில் இருந்தது. அது மட்டும் அல்ல, சிந்து சமவெளி நாகரீகம் தோன்றி 4000 ஆண்டுகள் முடிந்துவிட்டன. ஆரியப்பட்டா, வராஹமிஹிரர், திருவள்ளுவர், அகஸ்தியர், காளிதாஸர், சிஷ்ருதர், பரத்வாஜர், பாணினி, தொல்காப்பியர், என பல்வேறு ரிஷிகளும் மகான்களும் பல துறைகளில் தங்கள் பங்களிப்பை தந்து சென்று விட்டனர். இரண்டாம் புலிகேசி சாளுக்ய தேசத்தையும், நரசிம்மவர்மன் பல்லவ நாட்டையும் ஆண்டுக் கொண்டிருந்தார்கள். சோழப் பேரரசு மிகப்பெரும் அளவில் தெற்கே விரியத் தொடங்கிய காலம். பாரதத்தின் வடக்கு மேற்கு, கிழக்கு என விரிந்திருந்து, இந்தியாவின் பொற்காலம் என்று அழைக்கப்பட்ட குப்த சாம்ராஜ்யம் கிட்டத்தட்ட முடிவடைந்த காலம் அது. தமிழ் இலக்கியங்களும், பண்பாடும், ஆன்மீகமும் செழித்து கொண்டிருந்த‌ காலம்.

உலகின் முதல் பல்கலைகழகமாக நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இன்றைய ராவல்பிண்டி (பாகிஸ்தான்) அருகே தொடங்கப்பட்ட "தக்ஷசீலா" பல்கலைகழகம் குறித்து பலருக்கும் தெரிந்திருக்கும். அது போலவே பொது ஆண்டு மூன்றாம் நூற்றாண்டில் தொடங்கப்பட்ட உலக புகழ் பெற்ற "நலந்தா பல்கலைகழகம்" இன்றைய பீகாரில் மிக சிறப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. 800 அடி நீளமும், 1600 அடி அகலமும் கொண்ட கட்டிடங்கள் அதில் இருந்தது, 30 ஏக்கர் பரப்பளவு் கொண்ட நலந்தா பல்கலை கழகம் உலகில் உள்ள இன்றைய நவீன பல்கலைகழகங்கள் அனைத்திற்கும் சவால் விடும் வகையில் அது இருந்தது.

குப்தர்கள் காலத்தில் செழித்து வளர்ந்த அந்த பல்கலைகழகம். ஏழாம் நூற்றாண்டில் சீனா, திபெத், மத்திய ஆசியா, கொரியா, இந்தோனேஷிய மற்றும் கிரேக்க மாணவர்கள் அதில் பயின்று வந்தார்கள். அதில் உள்ள நூலகம் ஒன்பது அடுக்குகள் கொண்டதாக இருந்தது என திபெத்திய யாத்ரீகர்கள் குறிப்பிடுகிறார்கள். இலக்கண‌ம், தர்க்க சாஸ்திரம், விஞ்ஞானம், வானியல் சாஸ்திரம், இலக்கியம், மருத்துவம் என பல்வேறு துறைகளில் உலகமெங்கும் இருந்து வந்து மாணவர்கள் பயின்றார்கள். அதன் நிர்வாகம் தனி ஒருவரால் இல்லாமல் ஒரு திறமையான நிர்வாக குழுவால் நிர்வகிக்கப்பட்டது.

பாரதம் இப்படி நாகரீகத்தின் உச்சத்தில் இருந்த காலகட்டத்தில் தான் மேற்கே கற்கால பழக்க வழக்கங்களோடு இருந்த‌ அரேபிய பாலைவனத்தில் ஒரு மிகப்பெரும் சூறாவளி மையம் கொண்டிருந்தது. அது உலகையே அழிக்கப் போகிறது என்று யாரும் நினைத்துக் கூட பார்த்திருக்க மாட்டார்கள்.

தொடரும்....

படத்தில் : அழிக்கப்பட்ட நலந்தா பல்கலைகழக மாணவர் விடுதியின் மிச்சங்கள்

Keerthivasan

About Keerthivasan -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :