Friday, January 22, 2016

Keerthivasan

ரத்தத்தில் முளைத்த என் தேசம் - 19

ரத்தத்தில் முளைத்த என் தேசம் - 19

Englightened Master

 
தெபல் துறைமுகம் மற்றும் நகரத்தை கைப்பற்றிய பின் முகம்மது பின் காசிம் "நய்ருன் காட்" (Nayrun Kot -பாகிஸ்தானில் இருக்கும் இன்றைய ஹைதராபாத்) ஐ தாக்கினான். அங்கிருந்த உள்ளூர் மக்கள் பெரும்பாலும் விவசாயிகளாகவே இருந்தார்கள், அவ்வூரின் அரசர் "நைரன்" (King Nayrun) எளிதில் வீழ்த்தப்படுகிறார். அடுத்து "கஞ்சோ டேக்கர்" (Ganjo Takker ridge) எனும் மலை தொடர்களில் உள்ள வணிகர்களிடம் இருந்து வியாபார பொருட்களை கொள்ளை அடித்த காசிம், பல பழமையான கோவில்களை கொள்ளையடித்து, அவற்றை நபி வழியில் அழித்து மசூதிகளாக மாற்றினான். நய்ரூன் காட் முழுவதுமாக அழிக்கப்பட்டது. அதன் பின் சாதுசன் (Sadusan) எனும் இடத்தை கைப்பற்றினான் காசிம். அங்கும் பழமையான கோவில்கள் நபி வழியில் இடிக்கப்பட்டன‌, அந்த இடிபாடு பொருட்களை வைத்து மசூதிகள் கட்டப்பட்டன. பிடிபட்ட பெண்களும், மற்றவர்களும் அடிமையாக்கப்பட்டு, கொள்ளையடிக்கப்பட்ட பொருட்களில் ஐந்தில் ஒரு பகுதியோடு, உமயத் பேரரசின் கலீஃப் "ஹஜாஜுக்கு" அனுப்பி வைக்கப்பட்டன.

இதன் பின் கிழக்கு மற்றும் வடக்கு நோக்கி சென்று, "பாட்டில் ஆஃப் ஜியார்" (Battle of jior) எனும் போரில் ராஜா தஹீரோடு போரில் ஈடுபடுகிறான் காசிம். ராஜா தஹீர் வீரத்துடன் போர்புரிகிறார். ஆனால் வலிமை மிக்க காசிமின் படையை அவரால் எதிர்கொள்ள இயலவில்லை. போரில் அவர் வீர மரணம் அடைகிறார். அவரின் மனைவி அவருக்கு பின் படையை தலைமை தாங்கி போரிடுகிறார். தோல்வி உறுதி எனும் நிலையில் அவர் வேறு வழியில்லாமல் தன் பணிப்பெண்களோடு சேர்ந்து நெருப்பில் தன்னை மாய்த்து கொள்கிறார். கைப்பற்றப்பட்டால், இஸ்லாமிய சட்டப்படி அடிமையாக்கப்பட்டு விற்கப்படுவோம் என்பதே இதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது. கிட்டத்தட்ட ராஜா தஹீரின் 6000 சிந்து வீரர்கள் மிக கொடுமையான முறையில் கொல்லப்படுகிறார்கள். இன்றைய ஐ எஸ் ஐ எஸ் தீவிரவாதிகளின் படுகொலைகளை இது நினைவூட்டுகிறது.

அவரின் ஒரே மகன் "ராஜா ஜெய் சிங்க்", "பாட்டில் ஆஃப் ப்ரஹ்னாபாத்" (Battle of Brahnabad) எனும் போரில், கடுமையாக போர் புரிந்து இறுதியில் தோற்கடிக்கப்பட்டு தப்பித்து ஓடுகிறான். "சிஸ்டன்", "பஹ்ராஜ்", "கட்ச்", "அரோர்", "கைரோஜ்" மற்றும் "ஜியார்" என அனைத்து பலுச்சிஸ்தான் மற்றும் சிந்து பகுதி நகரங்களும் உமாயத் பேரரசை சேர்ந்த முஸ்லீம் படையின் வசம் வீழ்கிறது.

உயிர் பிழைத்திருக்கும் ஒவ்வொரு முஸ்லீம் அல்லாதவரும் ஜிஸ்யா எனப்படும் வரியை கட்ட நிர்பந்திக்க படுகிறார்கள். மிகவும் கேவலப்படுத்தப் படுகிறார்கள். ஒவ்வொரு முஸ்லீம் படை வீரனையும் உள்ளூர் மக்கள் மூன்று பகல் மற்றும் இரவுகள் உணவு உறைவிடம் தந்து உபசரித்தாக வேண்டும் என்று உத்தரவு இடப்படுகிறது. கட்டாய மதமாற்றம் ஊர் முழுவதும் நடை பெறுகிறது, மறுப்பவர்கள் மிகுந்த கிழ்தரமாக நடத்தப்ப‌டுகிறார்கள். முகம்மது பின் காசிமின் ஆட்சி, சரித்திர ஆய்வாளர் "யு டி தாகூர்" (U.T. Thakkur) அவர்களால் "சிந்து பகுதியின் இருண்ட சரித்திரம்" என்று அழைக்கப்படுகிறது. இனப்படுகொலை, பல பழமையான கோவில்கள் தகர்ப்பு, கூட்டு வண்புணர்வு என பல கொடுமைகள் முஸ்லீம் படையினால் அங்கு அரங்கேறுகிறியதுதான் அதற்கு காரணம்.

அடுத்து காசிம் அங்கிருந்து வடக்கில் உள்ள மேற்கு பஞ்சாபை நோக்கி படை எடுக்கிறான். "முல்தான்" நகரம் தான் அவனின் இலக்கு. அதை ராஜா கவுர் சிங்க் (Gour Singh) ஆள்கிறார். அவரிடம் மிகச்சிறந்த யானைப்படையும், காலாட்படையும் இருந்தன.

தொடரும்

Keerthivasan

About Keerthivasan -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :