Friday, January 22, 2016

Keerthivasan

ரத்தத்தில் முளைத்த என் தேசம் - 20

ரத்தத்தில் முளைத்த என் தேசம் - 20

Englightened Master


"மூலஸ்தானம்" என்று சமஸ்க்ருதத்தில் அழைக்கப்பட்ட அந்த நகரம் மத்திய ஆசியாவுக்கும், தெற்காசியாவுக்கும் நடுவே அமைந்திருந்ததால் மிக‌ முக்கியத்துவம் பெற்றிருந்தது. பண்டைய பாரதத்தின் மௌரிய‌ பேரரசாலும் அதன் பின் குப்த பேரரசாலும் ஆளப்பட்டு வந்த புராதன நகரம் அது. இந்து அரசர்களும், பௌத்த அரசர்களும் அங்கு ஆட்சி செய்து வந்தனர். அதன் பழமையான‌ கோவில்களுக்கு அரசர்களும், வணிகர்களும், குடிமக்களும் பெரும் செல்வங்களை பரம்பரை பரம்ப்ரையாக வழங்கி வந்தனர். அதனால் செல்வ செழிப்புடன் அது தங்க நகரம் என்று அது அழைக்கப்பட்டது. "சூரஜ் மந்திர்" என்று அழைக்கப்பட்ட புகழ்பட்ட சூரியனார் கோவில் அங்கு இருந்தது. அதற்குள் 6000 பேர் தங்கக்கூடிய வகையில் அது மிகவும் பிரமாண்டமாக இருந்தது. அது போலவே சூரிய குளம் (Suraj kunt) மற்றும் பிரகலாதபுரி என்கிற‌ விஷ்னுவின் நரசிம்மர் கோவிலும் அங்கிருந்தது.

மூலஸ்தானத்தை (இன்றைய பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள முல்தான் நகரம்) பொது ஆண்டு 664ல் முதல் முதலாக முஸ்லீம் படையை சேர்ந்த "அல் மொஹலிப் இம்ன் அப் சஃப்ரா" (Al Muhallab ibn Abi Suffrah) பாரசீகத்திலிருந்து படை எடுத்து வந்து தாக்கினான். அவன், மூலஸ்தானம் வரை நுழைந்து, பெரும் கொள்ளை அடித்து தன்னுடைய கொரச்சான் (Khorassan) தலைநகரத்திற்கு திரும்புகிறான். ஆயிரக்கணக்கில் தன்னோடு போர் கைதிகளை அடிமைகளாக்கி பிடித்து சென்று அவர்களை மதம் மாற்றவும் செய்கிறான். அதே கால கட்டத்தில் "அப்துல் ரஹ்மான் பின் ஷிமுர்" (Abdul Ruhman Bin Shimur) எனும் மற்றொரு அரபு அமீர் "மெர்வ்" (Merv) நகரத்திலிருந்து படையெடுத்து வந்து தாக்கினான். அப்துல் ரஹ்மான் மூலஸ்தானம் வரை படையெடுத்து வந்து அங்கிருந்த 12000க்கு மேற்பட்டவர்களை மதமாற்றி சென்றதாக சரித்திர ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள். இவை இரண்டுமே ஒரு குறுகிய கால தாக்குதலாகவே இருந்தன.

அதன் பின் கிட்டத்தட்ட நாற்பது ஆண்டுகள் கழித்துதான் தற்போது முகம்மது பின் காசிம் மூலஸ்தானத்தை (முல்தான்) தாக்க படை எடுத்து வருகிறான். ஏற்கனவே சிந்து பகுதிகளை கைப்பற்றிவிட்ட காசிம் முல்தானை அடைந்தது அங்குள்ள பியாஸ் பகுதியை கடந்து முல்தானுக்குள் நுழைகிறான்.

ராஜா கௌரின் யானை படைகள் மிக சக்தி வாய்ந்தவையாக இருந்தாலும், காசிம்மின் படையை அவரால் எதிர்கொள்ள இயலவில்லை. ராஜா "கௌர் தன் முல்டான் கோட்டைக்குள் பதுங்கிக் கொள்ள, காசிம் தன் மிஞ்சனாக் இயந்திரங்கள் உதவியுடன் கோட்டையை தகர்கிறான். ராஜா கௌர் வேறு வழியில்லாம் சரனடைகிறார். முஸ்லீம் படைகளின் சூரையாடலையும், மக்க‌ளை அடிமைகளாக பிடித்து செல்லும் பழக்கத்தையும் அறிந்த நாட்டு மக்கள், ஊர் புறங்களுக்கு சென்று ஒளிந்துக் கொள்கிறார்கள். ஆனால் அவர்கள் காசிமின் படையால் சுற்றி வளைக்கப் படுகிறார்கள்.

காசிம் அங்குள்ள நீர் ஓடைகளையும், நீர் வழித் தடங்களையும், வீரர்களை வைத்து திசை மாற்றியும், முடக்கியும் ஊருக்குள் போகாத வண்ணம் வற்ற வைக்கிறான். மக்கள் தண்ணீர் இல்லாமல் தாகத்தால் வேறு வழி இல்லாமல் சரணடைகிறார்கள், சிலர் பிடிபடுகிறார்கள். அவர்களில் போர் புரிய கூடியவர்கள் படுகொலை செய்யப்படுகிறார்கள், சிறுவர், சிறுமியர், குழந்தைகள், கோவில் அந்தனர்கள், அறங்காவலர்கள், உட்பட 6000 பேர் கட்டி இழுத்து செல்லப்படுகிறார்கள். பெண்கள் முஸ்லீம் படை வீரர்களின் காமப்பசியை தீர்க்க நிர்பந்திக்கப்படுகிறார்கள். கோவில் கருவூலங்களில் இருந்த பதினைந்து அடிக்கு பண்ணிரெண்டு அடி நீளமுள்ள பெட்டிகளில் இருந்து தங்க நகைகளையும், தங்கக் கட்டிகளையும் எடுத்து செல்கிறார்கள். பொது ஆண்டு 713ல் முல்தான் முழுவதுமாக முஸ்லீம் படைகளால் இப்படி வெல்லபப்ட்டு உமாயத் பேரரசுடன் இனைக்கப்ப‌டுகிறது.



Keerthivasan

About Keerthivasan -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :