Friday, January 22, 2016

Keerthivasan

ரத்தத்தில் முளைத்த என் தேசம் - 21

ரத்தத்தில் முளைத்த என் தேசம் - 21

Englightened Master


இத்தனை கொடுஞ் செயல்களை புரிந்த முகம்மது பின் காசிம் நன்றாக வாழ்ந்தானா ? என்றால் இல்லை என்பதுதான் உண்மை. கொடுங்கோலன் முகம்மது பின் காசிம் எப்படி இறந்தான் ?

முகம்மது பின் காசிமிற்கு பின்புலமாய் இருந்தவன் சிரியாவின் கவர்னராக இருந்த ஹஜாஜ் என்று பார்த்தோம். ஹஜாஜ் அப்போதைய கலீஃபாக இருந்த வலீத்தின் (Al-Walid ibn Abd al-Malik) விசுவாசத்தை பெற்றிருந்தான். அல் வலீத் கலீஃபாக இருந்த அந்த கால கட்டத்தில்தான் உமாயத் பேரரசின் பகுதிகள் மிகப்பெரிய அளவில் விரிந்து பரவியது. வட‌ ஆப்ரிக்கா மற்றும் கிழக்கு ஐரோப்பாவின் சில பகுதிகள் முதல் பாரதத்தின் சிந்து பகுதி வரை அது விரிந்து இருந்தது.

ஆனால் சிந்து மக்களின் சாபமோ என்னவோ கலீஃப் வலீத் துர்மரணம் அடைந்தார். கலீஃப் வலீத் இறந்தபின் அவரின் சகோதரர் "சுலைமான்" (Sulayman ibn Abd al-Malik) கலீஃபாக பதவி ஏற்றுக் கொண்டார். அவருக்கு டெமாஸ்கஸ் கவர்னர் ஹஜாஜை சுத்தமாக பிடிக்காது. ஹஜாஜை சுலைமான் கொல்ல வேண்டும் என நினைத்திருந்த வேளையில் அவன் அதற்கு முன்பே இறந்துவிடுகிறான். இதனால் ஹஜாஜிற்கு பதில் அவ‌ன் உறவினர்களை பழிதீர்க்க யொசித்தார் சுலைமான். ஹஜாஜின் உறவினனான‌ காசிமை, சிந்து பிரதேசத்தில் இருந்து திருப்பி எடுத்து ஈராக்குக்கு அனுப்பி வைத்தார். அப்போது ஈராக்கின் புதிய கவர்னரான பதவியேற்ற "சாலே பின் அப்துல் ரஹ்மானின்" சகோதரனை ஹஜாஜ் கொன்றிருந்த படியால் அவன் மீது வெறி கொண்டிருந்தான் "சாலே". ஹஜாஜிற்கு பதில் அவன் உறவினனான முகம்மது பின் காசிம்மை சிறையில் அடைத்து, கண்களை தோண்டி துன்புறுத்தி கொன்றதாக சொல்கிறார்கள் சரித்திர ஆய்வாலர்கள்.

ஆனால் "சாசாநாமா" புத்தகத்தின் பக்கம் 242-243 முகம்மது பின் காசிமின் மரணத்தை வேறு விதத்தில் குறிப்பிடுகிறது.

சிந்து ராஜா தஹீர் கொல்லப்பட்டதும், முஸ்லீம் படையின் வழக்கப்படி அவரின் இரண்டு பெண்களும் அடிமைகளாக்கப்பட்டு மற்ற பெண்களுடன் உமயத் பேரரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்கள். அக்தர் பலூச் எனும் பாகிஸ்தானிய (டான் பத்திரிகை) எழுத்தாளர் இதை விவரிக்கிறார். ராஜா தஹீரின் இரண்டு பெண்களும் வலீத் பின் அப்துல் மலீக்கிடம் அனுப்பி வைக்கப்பட்டார்கள். சூர்யதேவி, பிரமிளாதேவி என்ற அந்த இரண்டு பெண்களும் மிக அழகாக இருந்தனர். அவர்களின் அழகில் மயங்கிய கலீஃப், அவர்களை அடைவதற்கு ஆசைப்பட்டார். எப்படியாவது அவர்களை அடைந்து விட வேண்டும் என்று அவர்களை நெருங்குகையில் ஒரு பெண் கூறினாள். "ஓ அரசரே நீங்கள் வாழ்க, நான் உங்களின் அடிமை, ஆனால் நான் உங்கள் படுக்கை அறையை அலங்கரிக்க அருகதை அற்றவள், ஏனென்றால் எங்களை மூன்று நாட்கள் வைத்து அனுபவித்து விட்டான். இது உங்கள் வழக்கமாக ஒருவேளை இருக்கலாம். ஆனால் அரசர்களுக்கு இது பொருந்தாது" என்றாள்.

இதை கேட்ட கலீஃப் மிகுந்த ஆத்திரம் அடைந்து, தன்னுடைய சொந்த கைகளினாலேயே எழுதுகோல் எடுத்து, மை தொட்டு எழுதி, முகம்மது பின் காசிம்மை உடனுக்குடன் எங்கிருந்தாலும் பச்சை தோலினால் கட்டி இழுத்து வருமாறு ஆனையிடுகிறார். இப்படி பதப்படுத்தப்படாத எருது தோலில் கட்டி இழுத்து வரப்பட்ட காசிம் வழியிலேயே முச்சு தினறி துடிதுடித்து இறந்து விடுகிறான். "காசிம் எங்களை தொடவில்லை, ஆனால் எங்கள் சிந்து பிரதேசத்தை அழித்து நாசப்படுத்தி, எங்கள் மக்களை கொன்று குவித்து, எங்கள் அரசை கைப்பற்றி, இளவரசிகளான எங்களை அடிமைப்படுத்தி சீரழித்த குற்றத்திற்காக இவ்வாறு பொய் சொல்லி அவனை பழி வாங்கினோம்" என‌ அரசரின் மகள்கள் பின்பு ஒப்புக் கொள்கின்றனர்.

இந்த இரண்டாவது கதை நம்புவதற்கு கடினமானதாகவே உள்ளது. முஸ்லீம் படைகளுக்குள் இருக்கும் ரத்த வெறி பிடித்த உட்சண்டையை மறைப்பதற்காகவும், முகம்மது பின் காசிம்மின் மீது ஒரு பரிதாபத்தை வரவழைக்கவும் இப்படி ஒரு கதை புனைக்கப்பட்டிருக்கலாம் என்றே தோன்றுகிறது. எது எப்படியோ, பல ஆயிரம் இந்துக்களையும், பௌத்தர்களையும் கொன்றொழித்து பலரை மதம் மாற்றி, பல இந்து பெண்களை கட்டாயமாக வன்புணர்வு செய்து முஸ்லீம் படைகளுக்கு பல வாரிசுகளை உண்டாக்கிய முகம்மது பின் காசிம் சிறு வயதிலேயே கொடூரமாக கொல்லப்பட்டது மட்டும் உண்மை. ஆனால் அவனோடு பாரதத்தின் மீதான கோர தாண்டவம் முடியவில்லை. பாரதத்தின் ரத்த சரித்திரத்தில் அது ஒரு ஆரம்பமாகவே இருந்தது.. அதன் பின் சரித்திரத்தில் எங்குமே பார்க்க இயலாத வகையில் கொடூரங்களை புரிந்த "கஜனி முகம்மது" எனும் கொடுங்கோலன், பாரதத்தை அதன் பின் தாக்கினான்.
 


Keerthivasan

About Keerthivasan -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :