Friday, January 22, 2016

Keerthivasan

ரத்தத்தில் முளைத்த என் தேசம் - 22

ரத்தத்தில் முளைத்த என் தேசம் - 22

Englightened Master



முகம்மது பின் காசிமிற்கு பிறகு பல முஸ்லீம் படை எடுப்புகள் பாரதத்தின் மீது நடந்த‌து. ஆனால் சிந்து அரசர் தஹீரின் மகன் ஜெய் சிங் தன் படையை வலிமையாக்கி மீண்டும் "பிரம்மானந்தம்" நகரத்தை கைப்பற்றினார். இதனால் அரேபிய படையின் விரிவாக்கம் சிந்து நதியின் மேற்கு கரை வரை மட்டுமே தடுத்து வைக்கப்பட்டது.

அதன் பின் ஜுனைத் (Junaid b. Abd Al Rahman Al Marri) என்பவன் சிந்து பிரதேசத்தின் கவர்னராக உமாயத் பேரரசால் பொது ஆண்டு 723 ல் நியமிக்கப்பட்டான். அவன் ஜெய் சிங்கோடு போரிட்டு சிந்து மற்றும் தெற்கு பஞ்சாபை கைப்பற்றினான். அந்த போரில் ஜெய் சிங் வீர மரணம் அடைந்தார். காஷ்மீரின் காங்க்ரா பள்ளத்தாக்கை பொது ஆண்டு 724 ல் தாக்கி அவன் கைப்பற்றினான். தொடர்ந்து இந்தியாவுக்குள் ஊடுறுவி ராஜஸ்தான், குஜராத், மத்திய பிரதேசம் ஆகிய தற்போதைய இந்திய மாநிலங்களின் சில‌ பகுதிகளை தாக்கி, அவற்றை நிரந்தரமாக தக்க வைத்துக் கொள்ள முயன்றான். இவை பொது ஆண்டு 725 முதல் 743 வரை நடந்ததாக கூறப்பட்டாலும், இவற்றை குறித்த சரியான விவரங்கள் கிடைக்கப் பெறவில்லை., அப்போதைய குர்ஜாரா (குஜராத்) அரசர் "சிலுகா" (Siluka), முஸ்லீம் படையை எதிர்த்து போரிட்டு ஜெய்சால்மர் மற்றும் ஜோத்பூரின் வடக்கில் இருந்து விரட்டி அடித்தார். அது போலவே, உஜ்ஜயினில் நடந்த யுத்தத்தில் முதலாம் நாகபட்டர் முஸ்லீம் படைகளை கடுமையாக தாக்கி ஓட வைத்தார்.

இதன் பிறகு முஸ்லீம் படையின் "அல் ஹக்கம்" என்பவன் (Al Hakam b. Awana Al Kalbi) சிந்து பகுதிகளை மீண்டும் பொது ஆண்டு 733 ல் பிடித்ததாகவும், பாரதத்திற்குள் ஊடுறுவி பல அரசர்களை வென்றதாகவும் குறிப்புகள் காணப்படுகின்றன. அல் ஹக்கம் 739ம் ஆண்டு டெக்கான் பகுதிகளை கைப்பற்ற நினைக்கையில், சாளுக்கிய சக்ரவர்த்தி இரண்டாம் விக்ரமாதித்தனின் ஆளுமையின் கீழ் இருந்த "அவனிஜனஷ்ரய புலிகேசி" எனும் தளபதி, அவர்களை ஓட ஒட தாக்கி ராஜஸ்தான் பாலைவனம் வரை விரட்டி அடித்தார். இதனால் முஸ்லீம் படையின் ஆளுமை ராஜஸ்தானின் தார் (Thar) பாலைவனப் பகுதியின் மேற்கு எல்லைக்கு அப்புறத்தில் நிறுத்தப்பட்டது.

இத்தருனத்தில் பொது ஆண்டு 750ல், மேற்கே உமாயத் பேரரசில் ஒரு பெரும் புரட்சி வெடித்தது. உமாயத் பேரரசு அரேபியர் அல்லாதவர்களை மிகவும் பாரபட்சமாக நடத்தியதால் அந்த புரட்சி வெடித்தது. ஆட்சியும் ஆளுமையும் மிகப்பெரும்பாலும் அரேபியர்கள் கைவசமே இருந்தது. பேரரசில் பெரும்பான்மையாக அரேபியர் அல்லாத புதியதாக முஸ்லீமாக மாற்றப்பட்டவர்களே அதிக எண்ணிக்கையில் இருந்தார்கள். அவர்கள் மிக கீழ்தரமாக நடத்தப்பட்டனர். உமாயத் அரசு படையிலோ, அதிகாரத்திலோ அவர்களுக்கு முக்கிய பொறுப்புகள் தரப்படவில்லை. அரபிய பெண்களை மனமுடிக்க அரபிய அல்லாத முஸ்லீம்கள் தடைவிதிக்கப் பட்டு இருந்தனர். அரபியர்கள் போல் உடை உடுத்த கூட தடுக்கப் பட்டிருந்தனர். மேலும் உமாயத் பேரரசின் கவர்னராக இருந்த அல் ஹஜாஜ், அன்றைய கிழக்கு ஈரானின் (பாரசீக பகுதி) மொழியாக இருந்த க்வரேஜ்மியன் (Khwarezmian) மொழியை முற்றிலுமாக அழித்தான். அம்மொழியை பேசுபவர்களையோ, எழுதுபவர்களையோ, உடனுக்குடன் கொல்லுமாரு அவன் உத்தரவிட்டு அதை அழித்தது, பலரின் வெறுப்பை பெற்றுத் தந்தது. மேலும் பாரசீகத்தை கைப்பற்றிய நிலையில் பல ஆயிரம் ஜொராஸ்ட்ரியர்களை (Zoroastrian) கொல்லப்பட்டு, அவர்களின் இலக்கன மற்றும் பாரம்பரிய நூல்க‌ள் அழிக்கப்பட்டன. இது அவர்களுக்குள் உமாயத் பேரரசு மீது பெரும் வெறுப்பை உருவாக்கி இருந்தது .

உமாயத் பேரரசின் அரேபிய ஆளுமையை எதிர்த்து முகம்மது நபியின் சிற்றப்பாவான "அப்பாஸ்" என்பவரின் வழி வந்த "அப்பாஸித் வம்சம்" போர் கொடி தூக்கியது. உமாயத் பேரரசை மிகவும் வெறுத்த ஷியாக்கள் இதை ஆதரித்தார்கள். மதம் மாறினாலும் தங்களை ஒதுக்கி வைத்திருந்த உமாயத் பேரரசை, அரபியர் அல்லாத‌ சுன்னி முஸ்லீம்க‌ளும் ஆதரித்தார்கள். மொழி, கலாச்சாரம், பாரம்பரியம் என எல்லாவற்றையும் அழித்த சகிப்புத் தன்மை இல்லாத உமாயத் பேரசை வெறுத்த பலவிதமான மக்களும் அந்த புரட்சியை ஆதரித்தனர், இதனால் பொது ஆண்டு 740 முத‌ல் இரண்டு ஆண்டுகள் முஸ்லீம்களுக்குள் கடும் சண்டை நடந்தது. அபாஸித்துகள் மிகச் சிறந்த பிரச்சாரத்தை உமாயத் பேரரசிற்கு எதிராக மேற்கொண்டு பல்வேறு மக்களை ஒருங்கினைத்தனர். இப்படி பலவகையில் பலம் பெற்ற அபாசித்துகள், உமாயத் பேரரசை பல போர்களில் வீழ்த்தி, உமாயத் அரச பரம்பரையை சேர்ந்த ஒவ்வொருவரையும் கொன்றொழித்து பேரரசை கைப்பற்றினர். அபாசித் பேரரசு பொது ஆண்டு 750 ல் நிறுவப்பட்டது அது பொது ஆண்டு 1258 வரை நீடித்தது. முஸ்லீம்கள் மட்டும் இல்லாமல் பல மதங்களை சேர்ந்தவர்களும் அதன் நிர்வாகத்தில் பங்கு பெற்றனர்.

உமாயத் பேரரசு வீழ்ந்ததால் அதன் வசமிருந்த ஆப்கான், சிந்து பகுதிகள் அபாசித் பேரரசின் தாக்குதலுக்கு ஆளாகி அதன் வசம் சென்றது. அதன் பிறகு அரேபியர்களுக்கும், -அபாசித் படைகளுக்கும் இடையே இந்த பகுதிகள் பல்வேறு முறை கைமாறின.

Keerthivasan

About Keerthivasan -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :