Saturday, September 3, 2016

Keerthivasan

காஷ்மீர் கற்று தரும் பாடம் - 02


காஷ்மீர் கற்றுத்தரும் பாடம்
- திரு. அரவிந்தன் நீலகண்டன் அவர்கள் திருப்பூரில் ஆற்றிய உரையின் தொகுப்பு. 

ஜின்னாவுக்கும் சரி, இதர பாகிஸ்தானியர்களுக்கும் சரி, காஷ்மீர் முஸ்லீம்கள் மீது என்றுமே பெரிய மரியாதை கிடையாது. காஷ்மீர் முஸ்லீம்கள் ஹிந்துக்களின் சிறுநீரில் இருந்து பிறந்தவர்கள் என்று சொன்னவர் ஜின்னா. [ இது தெரியாமல்தான் அந்த அடிமுட்டாள்கள் பாகிஸ்தான் கொடியை தூக்கிக்கொண்டு திரிகிறார்கள்.]

தேசப்பிரிவினை நேரம் ஓரளவு இந்திய - பாக் எல்லைகள் உறுதியாகிவிட்டன. ஆனால் காஷ்மீர் மட்டும் எந்தப்பக்கமும் சேரவில்லை. அன்று காஷ்மீரை ஆண்டுகொண்டிருந்தவர் ஒரு ஹிந்து மன்னர். பெயர் ஹரிசிங் காஷ்மீர் இஸ்லாமியர்களின் தலைவராக தன்னை பிரகடனப்படுத்திக் கொண்டிருந்தவர் ஷேக் அப்துல்லா, அங்கிருக்கும் ஹிந்துக்களை அடித்து விரட்டிவிட்டு, முழுமையான இஸ்லாமிய தேசம் ஒன்றை அமைக்கும் கனவு கொண்டவர்.

ஹரிசிங்கிற்கு இந்தியாவுடன் இணைவதில் தயக்கம் இருந்தது. காரணம் அவருக்கு நேருவைப்பிடிக்காது. [ நேருவுக்கு ஷேக் அப்துல்லாவை பிடிக்கும் ] அப்போது ஹரிசிங்கின் ஆலோசகராக இருந்தவரின் மனைவி ஒரு பிரிட்டிஷ் பெண்மணி. அவர் மௌண்ட்பேட்டனுக்கு நெருக்கமானவர். அந்த ஆலோசகர் காஷ்மீர் இந்தியாவுடன் சேரக்கூடாது என்று ஆலோசனை சொல்லிக்கொண்டிருந்தார்.

காஷ்மீரை தாக்குவதற்கு இதுதான் நல்ல சமயம் என்று தீர்மானித்தார் ஜின்னா. நேரடியாக தாக்கினால் பிரச்சினை ஆகிவிடும், ஆகவே பட்டானியர்கள் என்னும் பழங்குடியினரை காஷ்மீரை தாக்கும்படி உத்தரவிட்டார். ஒவ்வொரு ஆயிரம் பட்டானியர்களுக்கும் ஒரு பாகிஸ்தான் கமாண்டர் தளபதியாக நியமிக்கப்பட்டனர். நீங்கள் எவ்வளவு வேண்டுமானாலும் கொள்லையடிக்கலாம், கொலை செய்யலாம், யாரை வேண்டுமானாலும் கற்பழிக்கலாம். காஷ்மீரை ஆக்கிரமிப்பது மட்டும்தான் முக்கியம் என்று சொல்லி அனுப்பினர். பட்டானியர்கள் காஷ்மீரை தாக்க ஆரம்பித்தனர்.

அப்போது இந்திய ராணுவத்தில் ஒரு சிக்கலான நிலைமை இருந்தது. இந்தியா, பாகிஸ்தான் இரண்டு நாட்டு ராணுவங்களிலும் பிரிட்டிஷ்காரர்களே உயர் ராணுவ அதிகாரிகளாக இருந்தார்கள். பாகிஸ்தானின் ராணுவத்தின் தலைமைப்பொறுப்பில் இருந்த வெள்ளையர்கள் ஜின்னாவின் அத்தனை அயோக்கியத்தனங்களுக்கும் உறுதுணையாக இருந்தார்கள். ஆனால், இந்திய ராணுவத்தின் உயர்பொறுப்பில் இருந்த வெள்ளையர்களோ படேல் போன்ற தலைவர்களின் பேச்சை கேட்காதவர்களாகவும், மறைமுகமாக பாகிஸ்தானுக்கு ஆதரவாகவும் செயல்பட்டு வந்தனர்.

காஷ்மீருக்குள் புகுந்த பட்டானியர் கும்பல் வெறியாட்டம் ஆடியது. எல்லா வீடுகளும், கடைகளும் கொள்ளையடிக்கப்பட்டன‌. ஆண்கள் கொல்லப்பட்டனர், பெண்கள் கற்பழிக்கப்பட்டனர், ரத்த ஆறு ஓடியது,  ஹரிசிங் செய்வதறியாது திகைத்தார். இனி இந்தியாவின் துணையில்லாமல் சமாளிக்கமுடியாது என்பதை உணர்ந்தார். இருந்தும் நேரு - ஷேக் அப்துல்லாவின் நட்பை நினைத்து தயங்கவும் செய்தார். இந்த நிலையில் ஒரு அதிசயம் நடந்தது. மன்னர் ஹரிசிங்கை இந்தியாவுடன் சேரும் முடிவை ஏற்கவைக்க ஒரே ஒருவரால்தான் முடியும் என்று நேரு நினைத்தார். அவர்தான் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் இரண்டாவது தலைவர் பரமபூஜனீய கோல்வர்கர்.

குருஜியை நேரில் சந்தித்த நேரு, ஹரிசிங்குடன் பேசி சம்மதிக்க வைக்கும்படி கேட்டுக்கொண்டார். [ நிறையப்பேர் இன்றுவரை கோல்வல்கரை இவ்வாறு கேட்டுக்கொண்டது சர்தார் படேல் என்று நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் அப்படிக்கேட்டுக்கொண்டவர் நேரு என்பது ஆவணங்கள் மூலம் உறுதி செய்யப்பட்டிருக்கிறது. ]

நேருவின் வேண்டுகோளை ஏற்ற குருஜி காஷ்மீர் சென்று மன்னர் ஹரிங்கை சந்தித்து இந்தியாவுடன் சேரும் முடிவை ஏற்க வைத்தார். காஷ்மீர் முறைப்படி இந்தியாவுடன் இணையும் ஒப்பந்தம் கையெழுத்தானது. பட்டானியர் கும்பலை ராணுவ நடவடிக்கை மூலம் அடக்கும் பொறுப்பும் இந்தியாவுக்கு வந்தது. ஆனால் இந்த நிலையிலும் காஷ்மீரில் ராணுவ நடவடிக்கை மேற்கொள்ள மௌண்ட்பேட்டனும் ராணுவத்தின் உயர்பொறுப்பில் இருந்த வெள்ளையர்களும் சம்மதிக்கவில்லை. நடப்பது காஷ்மீர் மக்களின் கிளர்ச்சி அதை ராணுவ நடவடிக்கை மூலம் அடக்கினால் தவறாகிவிடும் என்று சாக்குப்போக்கு சொல்லிக்கொண்டிருந்தனர்.

அப்போது ஒரு கொடூரம் நடந்தது. காஷ்மீருக்குள் ஊடுருவிக்கொண்டிருந்த பட்டானியர்கள், வழியில் இருந்த கிறித்தவ மடாலயம் ஒன்றை தாக்கினர், இந்த தாக்குதலில் அங்கிருந்த பாதிரியார்கள் உள்ளிட்ட அனைத்து கிறித்தவர்களும் கொல்லப்பட்டனர், கன்னியாஸ்திரிகள் கற்பழிக்கப்பட்டனர், சர்ச் சூறையாடப்பட்டது.

இதுவரை தர்மநியாயம் பேசிக்கொண்டிருந்த மௌண்ட்பேட்டனுக்கு இப்போது தர்ம சங்கடம் ஆகிவிட்டது. கொல்லப்பட்டவர்கள் கிறித்தவர்கள் ஆயிற்றே? ஹிந்துக்கள் கொல்லப்பட்டால் எகத்தாளம் பேசிக்கொண்டிருக்கலாம். கிறித்தவர்கள் உயிர் விலைமதிப்பற்றது ஆயிற்றே? வேறு வழியில்லாமல் இந்திய ராணுவம் நடவடிக்கை மேற்கொள்ள மவுண்ட்பேட்டன் உத்தரவிட்டார்.

ஆனால் அதற்குள் காஷ்மீரில் நிலவரம் கைமீறும் நிலைக்கு வந்துவிட்டது. பட்டானியர் கும்பல் ஸ்ரீநகருக்கு மிக அருகில் வந்துவிட்டனர். எந்த நேரத்திலும் விமான நிலையம் அவர்கள் கைக்குள் விழும் நிலை. விமான தளத்தின் ஓடுபாதையோ, ராணுவ விமானங்கள் இறங்கும் அளவுக்கு இல்லாமல் பழுதடைந்து கிடந்தது.

இந்நிலையில் களமிறங்கியது ஆர்.எஸ்.எஸ். தங்கள் உயிரையும் பொருட்படுத்தாத ஆர்.எஸ்.எஸ். ஸ்வயம் சேவகர்கள் ஓடுபாதையை போர்க்கால வேகத்தில் சீரமைத்து, இந்திய ராணுவ விமானங்கள் இறங்க வழி செய்துகொடுத்தனர். நம் ராணுவம் ஸ்ரீ நகரில் இறங்கி பட்டானியர் கும்பலை ஓட ஓட விரட்டியது.

அவர்களை முழுமையாக விரட்டி அடிப்பதற்குள் நேரு மீண்டும் சொதப்பினார். படேல் மற்றும் இந்திய ராணுவத்தில் இருந்த இந்திய அதிகாரிகளின் பேச்சைக்கேட்காமல் [ ஷேக் அப்துல்லா மற்றும் மவுண்ட்பேட்டன் ஆகியோரின் ஆலோசனையின் படி ] காஷ்மீர் பிரச்சினையை .நா வுக்கு எடுத்துச்சென்றார். போர் நிறுத்தம் ஏற்பட்டது.

காஷ்மீருக்குள் குறிப்பிடத்தக்க தூரம் ஊடுறிவியிருந்த, பட்டானியர்கள் என்ற போர்வையில் ஒளிந்திருந்த பாகிஸ்தான் ராணுவம் அதே இடத்தில் நிலை கொண்டது. அந்த பகுதிதான் பாக் ஆக்கிரமிப்பு காஷ்மீர் என்று அழைக்கப்படும் ஆசாத் காஷ்மீர்.

ஆயிரக்கணக்கான இந்தியர்கள் தம் உயிரைக்கொடுத்து காப்பாற்றிய காஷ்மீர், நமக்கு தீராத தலைவலியாக மாறிப்போனது இப்படித்தான். 

தொகுப்பு: சரவண குமார் 

Keerthivasan

About Keerthivasan -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :