Monday, September 25, 2017

Keerthivasan

மிமீஸ் வச்சு பொருளாதாரம் பேசுவது சுத்த முட்டாள்தனம்


முதலில் மோடி அவர்களை அவர் சொன்னது போல் எல்லா இந்தியர் வங்கி கணக்கில் 1,00,000ருபாய் போட சொல்லுங்க.. எங்க, எங்கள் வாங்கியில் காசு போடா காணாம்??? ஹ ஹ ஹா என்று கேலி பேசி, அவரை அவமானம் செய்து விட்ட சந்தோசத்தில் இதை எதற்கு எடுத்தாலும் ஒரு சாமர்த்தியமான கேள்வி போல கேட்டு சிரிக்கும் முட்டாள்கள் அனைவருக்கும் இந்த பதில். {முக்கியமாக இந்த பதில் அதிகம் நாம் தமிழர் கட்சி சீமான் என்ற செபாஸ்டீன் தம்பிகள் அனைவருக்கும் சமர்ப்பணம்}

(இதற்கு முன்னரும் இந்த கேள்விக்கு பதில் கொடுத்திருந்தேன். இன்னும் திருந்தாமல் இது அடிகடி பலர் கேட்பதால் மீண்டும் பதில் தருகிறேன்.)

மோடி 1,00,000 இல்லை 2,00,000 போடுவது இருக்கட்டும் இந்த கேள்வியை கேட்கும் முன்னர் கட்சியெல்லாம் விடுங்க கொஞ்சம் பொருளாதாரம் தெரிந்து கொண்டு பின்னர் இது பற்றி பதில் தருகிறேன். முடிந்த அளவு எளிமையாக விவரம் புரியவைக்க முயற்சிக்கிறேன்.

1.ஒவ்வொரு நாடும் இவ்வளவு தான் பணம் அச்சிட வேண்டும் என்று ஏதும் கட்டுப்பாடு இருக்கா?

இதற்கு விடை இல்லை.. சும்மா அபப்டி இப்படி என்று ஒருசில கணக்குகள் சொல்லுவாங்க ஆனா எந்த நாடும் எவ்வளவு அச்சிட வேண்டும் என்று எந்த கட்டுப்பாடும் இல்லை. நம்ம நாட்டில் இந்த வேலையை ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா செய்கிறது. சொன்னா அடிச்சு கொடுக்க போறாங்க.

2.அப்போ மக்கள் எல்லோரும் கஷ்ட படுறாங்க... அதுவும் பலருக்கு கடன் இருக்கு. பேசாமா ஆளுக்கொரு 10லட்சம் இல்லை 20லட்சம் அடிச்சு கொடுத்துடலாமே... பாவம் நம்ம மக்கள் தானே!!!!.

என்று நீங்கள் கேட்டால், உங்கள் அந்த உயர்ந்த நல்ல எண்ணத்தைப் பாராட்டுவேன். ஆனால் செய்ய கூடாது.... மீண்டும் புரிந்து கொள்ளுங்கள் முடியாது அல்ல செய்ய கூடாது.

3.அது எதனால்?

மக்கள் உழைக்க மாட்டாங்க - தண்ணி அடிச்சுருவாங்க சுத்துவாங்க என்று காரணம் அல்ல , அப்படி செய்தால் மொத்த பொருளாதாரமும் நாசம் ஆகும். அதனால் எந்த ஒரு பலனும் மக்களுக்கு கிடையாது... இதை நீங்கள் புரிந்து கொண்டாலே மோடி அல்ல யாருமே இந்த வாக்குறுதியை கொடுக்க மாட்டார்கள் கொடுக்கவும் முடியாது என்பது புரியும். உடனே வீடியோ ஆதாரங்கள் இருக்குனு குதிக்காம கொஞ்சம் முழுசா படிச்சுட்டு பின்னர் விவாதம் செய்யுங்கள்.

மதுரை என்ற நகரத்தில் தினமும் சராசரியாக 20,000 வாஷிங் மெஷின் விற்கிறது என்று வைத்துகொள்வோம். கடைகளில் அதற்கு ஏற்ப இருப்பு வைத்து கொள்வர். நீங்கள் ஒரு LG showroom வச்சு இருக்கேங்க என்று நினைத்து கொள்ளவும் - உங்கள் கடையில் மாதம் 50 வாஷிங் மெஷின் விற்கிறது என்றால் இருப்பு ஒரு 100வச்சுபேங்க.

இப்போ நான் பிரதமர் - மக்கள் கஷ்டபடுரங்க என்று நீங்கள் சொன்னது போல் தலைக்கு 2லட்சம் கொடுக்க சொல்லி உங்கள் வங்கி கணக்கில் போடா ஆணையிடுகிறேன்- என்ன ஆகும் என்றால் மக்கள் தங்கள் தேவையை பூர்த்தி செய்ய அந்த பணத்தை செலவு செய்ய முடிவு செய்வர். அதனால் மக்கள் வாங்கும் சக்தி திடீர் என்று உயரும். அதாவது எவன் எவன் வாஷிங் மெஷின் வாங்க நினைத்து இருந்தனரோ அவர்கள் எல்லோரும் வாங்க முன் வருவர். ( வாஷிங் மெஷின் ஒரு பொருளை மாட்டும் கணக்கில் எடுத்து பேசலாம்)

இதனால் உங்கள் விற்பனை அந்த ஒரே வாரத்தில் மிக அதிகம் ஆகும். வார விற்பனை 100என்று அதிகரிக்க நீங்கள் LG மொத்த கிடங்கை அணுகுவீர் - அவன் LGதொழில் சாலையை அணுகுவான் - அவனால் உடனடியாக உற்பத்தியை கூட்டிவிட முடியாது ஒரு பக்கம் - இன்னொரு பக்கம் LG , Samsung, Bosch,Whirlpool ,IFB (India Fine Blanks) என்று அனைத்து பிராண்ட்களுக்கு உற்பத்தியை கூட்ட மூல பொருட்களின் தேவை அதிகம் ஆகும் - அதிகபடியான தேவை உருவாவதால் மூல பொருளின் விலை அதிகம் ஆகும் - அது உற்பத்தி செலவை அதிகம் ஆகி அது பொருளின் விலையை அதிகம் ஆக்கும் - அதிகபடியான சந்தை தேவை பொருளின் விலையை அதிகம் உயர்த்தி பண மதிப்பு வீழ்ச்சியை உருவாக்கும்.

எனவே 18,000ரூபாய்க்கு வாங்கின ஒரு வாஷிங் மெஷின் விலை அதிக தேவை, பண புழக்கம் காரணமாக பொருள் விலை உயர்ந்து 52,000என்று போய் நிற்கும். இது போல் அனைத்து பொருட்களின் விளையும் உயர்ந்து எந்த நன்மையையும் இல்லாமல் விலை தாறுமாறாக உயர்ந்தது தான் மிச்சம் என்று முடியும். ஆனால் இதன் பாதிப்பு நீங்கள் படிப்பது போல எளிமையாக இருக்காது.

இதை தான் - "பொருளின் விலை என்பது சந்தையில் அந்த பொருளுக்கு இருக்கும் தேவையை பொறுத்தது என்பர்". ஏன் தங்கம் விலை இவ்வளவு இருக்கு??? காரணம் தேவை அதிகம் ஆனால் கிடைப்பது அரிதாக இருப்பதால் விலை அதிகம். ஒருவேளை நம்ம திருச்சி அருகே ஒரு பெரும் தங்கம் சுரங்கமோ - இல்லை chemical laboratoryகளில்' தனிம கலவை மூலம் தங்கம் தயாரிக்க முடியும் என்றாலோ தங்கத்தின் விலை வீழ்ந்துவிடும். மிக அதிகம் கிடைத்தால் என்ன நம்ம வீட்டு சேர் கூட தங்கம் கொண்டு செய்யும் அளவுக்கு விலை வீழ்ந்துவிடும். தங்கம் அரிதாக இருப்பதால் மட்டுமே அதன் மதிப்பு அதிகம் இருக்கிறது.

ஆக இப்படி தலைக்கு 2லட்சம் குடுப்பதால் எந்த நன்மையும் ஏற்படாது..

சரி எப்படி பொருளாதாரம் நாசம் ஆகும்??

பணத்தின் மதிப்பை எப்படி கணக்கிடுகிறோம் - அதாவது 1$ அமெரிக்க நாணயத்தின் இந்திய ரூபாயின் மதிப்பு 65ரூபாய். இது எப்படி கணக்கிடுவது என்றால் எளிமையாக புரிவதற்காக கூற வேண்டும் என்றால் இங்கே விற்கும் 6500ரூபாய் மதிப்புள்ள ஒரு பொருள் அமெரிக்காவில் 100$க்கு கிடைக்கும் என்றால் என்ன அர்த்தம் ? 100$=6500ரூபாய்... சரி தானே அப்போ 1ரூபாய்=65ரூபாய். அவ்வளவு தான்.

இப்போ அதிகபடியான பணபுழக்கம் வந்துவிட்டதால் அங்கே 200 அமெரிக்க டாலருக்கு கிடைக்கும் வாஷிங் மெஷின் இந்தியாவில் 50,000 என்றால் என்ன அர்த்தம் ? 1டாலர் = 250ருபாய் என்று மதிப்பு குறையும். இது நம் இந்திய நாணயம் கொண்டு வர்த்தகம் செய்யும் அனைவருக்கும் பெரும் நஷ்டத்தை ஒரே நாளில் உருவாக்கும்.

கொஞ்சம் தயவு கூர்ந்து யோசிக்கவும். ரெம்ப பெரிய General equilibrium theory கிடையாது. சாதரணமாகவே நம்மால் புரிந்து கொள்ள முடியும்.

ஆக புரிந்தது தானே???
------------------------------------

எனவே மோடிக்கு 1லட்சம் அல்ல தலைக்கு 10லட்சம் கூட கொடுக்க அவருக்கு என்ன பெரிய கஷ்டம் சொல்லுங்க???? அடிச்சு குடுக்க சொன்ன குடுக்க போறாங்க.. ஆனால் பயன்?

சரி மாரிதாஸ் அப்போ ஏன் சொல்லணும்???

அவர் 13வருடம் ஒரு மாநிலத்தை வெற்றிகரமாக நடத்தியவர். அவர் ஆட்சிகாலத்தில் அந்த மாநிலம் மிக பெரிய வளர்சியை கண்டது, எதுவும் இல்லாமல் பயன் இல்லமால் கிடந்த கடற்கரைகளை கூட துறைமுகங்களாக உயர்த்தி மாநில பொருளாதரத்தை உயர்த்தியவர்.

மேலும் இங்கே திராவிட கட்சிகள் டீவி தரேன் - மிக்சி தரேனு மக்களிடம் வாக்கு கேட்ட நேரத்தில் ; மோடி " நான் ஆட்சிக்கு வந்தால் திருடப்படும் மிம்சாரம் , பாக்கி நிலுவைகள் அனைத்தையும் முறைபடுத்தி வசூல் செய்வேன்" என்று கூறி ஆட்சியை பிடித்தவர். அப்படிபட்ட 13வருடம் முதல்வராக இருந்த ஒருவர் - இலவசம் என்று கூறி வோட்டு கேட்காத ஒரு மனிதர் - இப்படி சொல்லி வோட்டு கேட்டு இருப்பார் என்று நம்புகிறீரா???

அப்படி என்றால் இவ்வளவு பெரிய விஷயத்தை அவர் தேர்தல் வாக்குறுதி பட்டியலில் முதலாக கொடுத்திருக்கலாமே? பிஜேபி கடந்த தேர்தல் அறிக்கையை எடுத்து பாருங்கள்... தாராளமாக எடுத்து பாருங்கள்.

அவர் ஒவ்வொருக்கும் 15லட்சம் கொடுக்கும் அளவு பணம் கருப்பு பணமாக பதுக்கபடுகிறது - இந்த நாடு ஏழை நாடு அல்ல system சரி இல்லாததால் கருப்பு பணமாக சென்று சேர்வதன் உண்மையை நீங்கள் மக்கள் உணரவேண்டும் என்று ஒரு எடுத்துகாட்டாக புரியவைக்க கூறிய வார்த்தையை - அதை அப்படியே பிடித்து கொண்டு , வேண்டும் என்றே தெரிந்து மக்களை குழப்பு இந்த கேவலாமான பிரச்சாரத்தை ஆரம்பித்தவர்கள் கம்யூனிஸ்ட் , திமுக தான்.

திமுகவுக்கு இதுலாம் புதுசு இல்லை - காமராஜர் ஒரு கோடி ரூபாய் யாருக்கும் தெரியாமல் ஆந்திரா வங்கியில் வைத்துள்ளார் என்று வெக்கமே இல்லாமல் குற்றசாட்டை அவர் மீது சுமத்தியவர்தான் கருணாநிதி திமுக இந்த திராவிட தறுதலைகள்.. எனவே என்ன வேண்டுமானாலும் பேசுவாங்க. காமராஜர் தோற்கடித்த பாவம் இந்த மாநிலம் நாசம் ஆகி போனது. திக - திமுக என்ற இந்த அருவருப்பான இரண்டு திராவிட இயக்கங்கள் தான் இந்த மக்கள் கேடு வந்து சேர காரணம்.. மக்களை எப்படி திருத்துவது???".............. ஆடு மாடு மேய்பதை அரசு வேலை ஆக்குவேன்" இவன் அல்லவா சிறந்த பொருளாதார மேதை, சிறந்த அரசியல் ஞானி.. இவனையும் நம்ப 1% கூட்டம் இருக்கு என்றால் கருணாநிதி போன்றவர்கள் ஆட்சிக்கு வருவது மிக எளிது.

மதம் மாற்றும் கூட்டங்கள் ஒரு பக்கம் மோடியை இப்படி கீழ்தரமாக விமர்சிக்க - திமுக திக போன்ற நாட்டை கொள்ளையடித்த கூட்டம் பொய் பிரச்சாரம் பரப்ப - இவனுகளை கூட நான் இவனுக புத்தி அப்படி என்று விட்டு விடுவேன் - இதையும் கூடவா நம்புவீர் என்று நிச்சயம் நடுநிலையான படித்த மக்களை கேட்பேன். கொஞ்சம் நாட்டு நிர்வாகம் தேடி படிக்கவும்.

மிமீஸ் வச்சு பொருளாதாரம் பேசுவது சுத்த முட்டாள்தனம். அதை முதலில் நிறுத்துங்க.

-மாரிதாஸ்

Keerthivasan

About Keerthivasan -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :