Monday, September 25, 2017

Keerthivasan

திராவிட நம்பிக்கை இன அடையாளமா? கலாச்சார பிரிவா?



திராவிட நம்பிக்கை, கொள்கைகள் என்பதை நான் எப்படி எடுத்து கொள்ளவேண்டும். இதை நான் ஒரு இன அடையாளமாக எடுத்து கொள்ளவேண்டுமா இல்லை வெறும் கலாச்சார பிரிவு என்று ஏற்றுகொள்ள வேண்டுமா? எனக்கு இந்த "திராவிடம்" குழப்பமாக இருக்கு. {கேள்வி: கார்த்திக்}

இங்கே கடந்த 300வருட ஆட்சி, மக்கள் வாழ்வு , அதன் நகர்வை நீங்கள் பொறுமையாக எந்த சார்பும் இல்லாமல் தேடி படிக்கவேண்டும். அப்போதான் உங்களால் தெளிவான அரசியல் எப்படி நடந்தது எப்படி மாறி நிற்கிறது என்று உணர முடியும். நாம் எல்லாம் வரலாற்றின் நீட்சிகள் தான் அவைகளை விடுவித்துவிட்டு புதிதாக திடீர் என்று ஒன்றை உருவாக்கிவிட முடியாது. அதே நேரம் நல்ல நேர்மையான மாற்றங்களை நாம் கட்டாயம் காலம் கருதி உருவாக்க வேண்டும். அதில் மிக முக்கியமானது அரசியல் மாற்றம். அதற்கு தெளிவு பெற வேண்டிய கேள்வி மூன்று

நீதிக்கட்சி எதனால் உருவானது?
நீதிகாட்சியாக இருந்து எதற்கு திக(திராவிட கழகம்) என்று மாறவேண்டும்?
திமுக செய்யும் அரசியல் தந்திரம் என்ன?

இந்த மூன்று விவரங்கள் நாம் புரிந்து கொண்டாலே திமுக , திக இரண்டின் நோக்கம் செயல்பாடு புரியும். இது தமிழக அரசியல் புரிதலில் ஆக முக்கியமான விஷயம். இதனை பிஜேபி ஆதரவாளனாக இருப்பதால் மாரிதாஸ் எழுதுகிறார் என்று நினைக்க வேண்டாம். இது அரசியல் என்பதை தாண்டி "எத்தனை காலம் தான் ஏமாற்ற முடியும் இந்த சமூகத்தை என்ற ஆதங்கம்" மட்டுமே.

சரி விசயத்திற்குள் செல்வோம்... ஜாதி மதம் எல்லாம் கொஞ்சம் ஓராமாக விட்டு விட்டு சாதாரண மனிதனாக படிக்கவும்.
--------------------------
நீதிக்கட்சி பிறந்தது எதனால்(Justice Party)?

South Indian Liberal Federation (S.I.L.F.) என்ற நீதிக்கட்சி 1916ம் ஆண்டு டாக்டர் டி. எம். நாயர் மற்றும் தியாகராய செட்டி ஆகியோரால் நிறுவப்பட்டது. இது பிராமணர் அல்லாத சமூகத்தினர் உருவாக்கிய அரசியல் கட்சி என்று தன் கொள்கைகளை முன் வைக்கிறார்கள். இது தான் பின்னாளில் பெயர் மாற்றம் அடைந்து திராவிட கழகமாக பரிணாமம் பெற்றது.

இப்போது எந்த மாதிரியான காலகட்டத்தில் என்ன தேவையின் காரணமாக இந்த நீதிக்கட்சி உருவானது என்று இந்த வீரமணி , சுப வீரபாண்டியன் சொல்வதை எல்லாம் கேட்காமல் நீங்களே புத்தகங்களை, இந்த காலகட்டத்திற்கு முன்னர் எப்படி தமிழகம் இருந்தது என்று தேடுங்கள். அன்று நடக்கும் நகர்வுகளில் உங்களால் என்ன புரிந்து கொள்ள முடியும் என்று பாருங்கள்.

தியாகராயர் செட்டியார் , பிடி ராஜன் , வெங்கடரத்தினம் நாயுடு , திவான் பகதூர் குமாரசாமி ரெட்டியார் , சவுந்திர பாண்டிய நாடார், தளவாய் திருமலையப்ப முதலியார்,பனகல் அரசர், முனுசாமி நாயுடு,வெங்கடகிரி ,சிங்கம்பட்டி ஜமீன்தார் என்று நீதி கட்சி என்று கூறும் இந்த அமைப்பில் இருந்த அனைவருமே யார் என்று ஜாதிய அடையாளம் விட்டுவிட்டு பார்த்தால் உங்களுக்கு எளிமையாக தெரிவது "இவர்கள் அனைவரும் பெரும் வணிகர்கள் , வியாபாரிகள் ,பெரும் நிலசுமந்தார்கள், பிரபுக்கள் , குட்டி ராஜாக்கள்". இது உண்மை. தாராளமாக நீங்கள் இந்த நீதி கட்சி தலைவர்களை தேடுங்கள் அவர்தம் பின்புலம் இதுவாக தான் இருக்கும். ஆக இவர்களிடம் தான் மாநில பொருளாதார பிடி இருக்கிறது.

{இவர்கள் பெயரில் ஜாதி வருவதால் குறிப்பிட வேண்டி உள்ளது. மற்றபடி நான் ஜாதிய நம்பிக்கை இல்லாதவன்}

இன்னொருபக்கம் பிரிட்டீஸ் இந்தியாவில் சட்டம் ஒழுங்காக இயங்குகிறதா என்று வரி வசூல் முதல் சட்ட நிர்வாகம் தொட்டு நீதிமன்றம் வரை அனைத்து அரசு பணி இடங்களிலும் பிராமணர்கள் ஆதிக்கம் இருந்தது. அதாவது அரசு அதிகாரம் என்பது இவர்களிடம் மறைமுகமாக இருக்கிறது. இந்த உண்மையை நாம் ஏற்று கொள்ளவேண்டும்.

பொருளாதார பலம் உள்ள ஜமிந்தார்கள், நிலசுமந்தார்கள் இருக்கும் வர்க்கமும்- வரி ,சட்டம் அமல்படுத்தும் ஆட்சியர் வர்க்கமும் எப்போதுமே ஒத்துபடாது.. அதிகார பிரச்சனை இவர்களுக்குள் எழுவது இன்று நேற்று அல்ல உலகம் தோன்றிய காலத்தில் இருந்து இருக்கும் எதார்த்தமான உண்மை.

நீங்கள் நம்பும் ஒரு நம்பிக்கை உண்மையாக இருக்கவேண்டியது இல்லை... எனவே நம்பிக்கைக்கும் உண்மைக்கும் வித்தியாசம் இதுவே.. திராவிடம் என்பது எண்ணெய் கேட்டால் ஒரு நம்பிக்கையே.. அது முழுவதும் படிக்க புரியும் என நம்புகிறேன்.

அதாவது பெரும் வணிகர்கள் வியாபாரிகள் செல்வந்தர்கள் - சட்டம் கொண்டு அதிகாரம் செய்யும் ஆட்சியர்களுக்கு வேலை செய்யும் ஆட்களுக்கும் இடையே ஏற்படும் கசப்பின் வெளிபாடே இந்த நீதிக்கட்சி என்பது ஆகும். இதை நாம் சீர்திருத்த கட்சி என்று எடுத்து கொள்ளமுடியாது. சமத்துவம் , சமூக நீதி கிடைக்க இவர்கள் போராடினார்கள் என்பது எல்லாம் நம்மை நாமே ஏமாற்றி கொள்ளும் செயல். வெறும் பிராமணர்கள் அதிகம் அதிகாரத்தில் இருப்பதை உடைக்க வேண்டும் என்ற ஆசை தான் தவிர அதற்காக இந்த கட்சி ஜாதிய ஒழிப்பை விரும்பிய கட்சியோ இல்லை அனைத்து ஜாதியினருக்கும் சம உரிமை கொடுக்க போராடிய கட்சியோ அல்ல.

இப்போது நன்கு நினைவில் வைத்து கொள்ளுங்கள் இது எதோ முதலியார் செட்டியார் நாயுடு என்று ஒருபுறம் ஜாதிய அமைப்புக்கும்- பிராமணர் என்ற ஜாதிய அமைப்புக்கும் இடையே நடந்த அதிகார பிரச்சனையாகவும் இதை நாம் பார்க்க கூடாது. தயவு கூர்ந்து இதை அப்படி புரிந்து கொள்வதை தவிர்க்கவும்.

இந்த போட்டா போட்டி என்பது தமிழகத்தில் இருந்த ஏறக்குறைய 2000 முக்கியமான அதிகார வர்க்கத்தில் இருந்த குடும்பங்கள் இடையே நடந்த அதிகார போட்டி போல தான் பார்க்கவேண்டும். இதனால் ஏழை பிராமணனுக்கும் , ஏழை செட்டியாருக்கும் , ஏழை தலித், ஏழை தேவர் வன்னியர் , பிற ஏழை ஜாதி மக்களுக்கும் எந்த பலனும் இல்லை. இது முழுக்க அதிகார வர்க்கத்தினர் இடையே உருவான போட்டி. பின்னர் இதை முன் வைத்து அதிகாரத்தை பிடிக்க அரசியல் கொள்கையாக மாறி இறுதியில் நீதிக்கட்சி என்று நின்றது. ஆக இந்த விவகாரத்தில்

எது நம்பிக்கை:

"பிராமணர் அல்லாத மற்ற சமூகத்தினர் ஒன்று சேர்ந்து - பிராமணர்களை எதிர்ப்பதாக அரசியல் கொள்கையாக உருவாக்கி நின்ற நீதிக்கட்சி என்பது நம்பிக்கை".

எது உண்மை:

பணபலமுடைய வசதியான கூட்டத்துக்கும்- சட்டதிட்டத்தை அமல் படுத்தும் இடத்தில் இருந்த வர்க்கத்திற்கும் இடையே நடந்த சண்டை தான் வேறு ஒன்றும் இல்லை என்பது உண்மை.

இங்கே தான் பிராமண எதிர்ப்பு தொடங்கியது... ஆனால் என்னவோ மற்ற இந்த ஜமிந்தர்கள் எல்லாம் அனைத்து சாதியினரையும் அனைத்து வாழ்ந்தது போல ஒரு பொய்யான தோற்றம் இங்கே தான் உருவானது. இன்றுவரை இது நீடிக்கிறது.

நீதிக்கட்சிக்கும் ஏழைகள் கட்சி அல்ல முதலில் அதை உணரவேண்டும். எனக்கு சரியாக தகவல் இல்லை ஆனால் இந்த இயக்கத்தின் சொத்து மதிப்பு குறைந்தது இன்றைய மதிப்பில் 1,00,000கோடி இருக்கும் என்ற கணிக்கிறேன். நம்ம வீரமணியை தான் கேட்க வேண்டும். அதை அனுபவிக்கும் கூட்டத்திடம் தானே கேட்க வேண்டும்!!! எனவே அவரை தான் கேட்க வேண்டும்.
-------------------------

1930 களில் நீதிக்கட்சி கூட்டம் உண்மை முகம் தெரிய வர மக்கள் ஆதரவு இல்லாமல் போய்கிறது - 1937ல் காங்கிரஸ் கட்சியிடம் தோல்வி.


{இரண்டு விவரம் நான் குறிப்பிட்டு காட்டுகுறேன்:

1.விவசாய கடன் என்று அரசு ஒதுக்கும் அனைத்தையும் கூட்டுறவு வங்கி மூலம் கூறு போட்டுகொள்வது திராவித கழகங்களின் ஆசி பெற்ற சில நாட்டாமைகள் தான். 20ஆண்டுகள் முன் வரை இந்த அநியாயம் நடந்துகொண்டே தான் இருந்தது. கடன் தள்ளுபடி என்று கூறிவிட்டு அதையும் ஒன்று இல்லாமல் ஆக்கி நாட்டை விவசாயி என்று கூறி இவர்கள் தான் தின்றார்கள். எந்த ஏழை விவசாயிக்கும் வங்கியில் கடன் வாங்க அல்ல வங்கி கணக்கு கூட இல்லாத நிலையில் பல ஆண்டுகளாக வாங்கி தின்று ஏப்பம் விட்டது இந்த ஜமிந்தார்கள் நாட்டாமைகள் தான். 20வருடம் வரை கூட எந்த ஏழை விவசாயும் வங்கி பக்கம் வரவிடாமல் தின்னும் பழக்கம் எங்கிருந்து வந்தது என்றால் அது இந்த நீதிக்கட்சி காலத்தில் இருந்தே வந்த கழக பழக்கம். கஜானாவை தன் வசம் வைத்து தங்களுக்கு தேவையான ஆட்களுக்கு பிரித்துவிட்டு ஏழைகளுக்கு கொடுத்ததாக கணக்கு காட்டும் மகா மட்டமான பழக்கம் தொடக்கம் ஆவது இந்த நீதிக்கட்சி ஆரம்பித்து வைத்த பழக்கம்.

2.இன்று 80லட்சம் மாத சம்பளம் என்று MLAக்களுக்கு ஒதுக்கினால் என்ன நினைப்பீர்.. அதுவும் பெரும் வரட்சி நிலவிய 1930களில் இந்த ஜமிந்தார் கட்சியாகிய நீதிகட்சி செய்த கூத்து இது. பாவம் ஏழைகள் அல்லவா இந்த கட்சி ஆட்கள் அதான் மாத சம்பளம் ரூ. 4,333.60. }

இவர்கள் செய்ததாக சொல்லும் சாதனைகள் எடுத்து பாருங்கள் கட்டாயாம் சிரிக்கலாம். 20வருடம் தொடந்து ஆட்சியில் இருந்த கட்சி செய்த சாதனை என்றால் 2தலித் சமூகத்தை சார்ந்தவர்களை போலிஸ் ஆக்கினோம் , வேலைக்கு 300பேர் எடுத்தோம் என்று கதை அளப்பானுக. உண்மையில் பிராமண எதிர்ப்பு மூலம் மக்களை ஒரு பக்கம் திசை திருப்பிவிட்டு , இவனுக மொத்த கஜானாவையும் கைபற்றியது, ஆட்சி அதிகாரங்களில் இவர்களும் நுழைவது தான் இவர்கள் நோக்கம். கணக்கு காட்ட அங்கொன்று இங்கொன்றுமாக சில. இவர்களிடம் இருக்கும் பணத்தை கொண்டு நினைத்தால் அனைத்து தலித் மக்களையும் படிக்க வைத்திருக்க முடியும். எனவே நோக்கம் தலித் இல்லை சமூக முன்னேற்றம் அல்ல.
-------------------------------
ரஷ்ய பயத்தை முடித்துவிட்டு வந்த நம்ம ஈவே ராமசாமி இந்த நீதிக்கட்சியை - திராவிட கழகமாக பெயர் மாற்றம் செய்து இனி தேர்தலில் போட்டியிட போவது இல்லை என்று அறிவிக்கிறார். நீதிக்கட்சி எவனும் நம்பத்தகுந்த கட்சி இல்லை என்ற அவமானத்துடன் மக்கள் முழுமையாக புறக்கணித்த காலகத்தில் இந்த வேலையை செய்கிறார்.

திராவிட கழகம் என்று பெயர் மாற்றம் செய்து உருவாக்கிய ஈவே ராமசாமி உருவாகிய திராவிட கொள்கை:

1.பிராமணர் அல்லாதவர்கள் அனைவரும் சேர்ந்து பிராமணர்களை எதிர்க்க வேண்டும்.(பழைய நீதிகட்சி கொள்கை)
2.ஹிந்து மதம் அழிய வேண்டும். (புதிய கொள்கை)
3.இந்தியா என்ற நாடு சிதற வேண்டும்.(புதிய கொள்கை)

"அது சரிங்க.. எதுக்கு பெயர் மாற்றம்?".... இதை நீதிகட்சியாகவே செய்துவிட்டு போகவேண்டியது தானே???? இந்த கேள்விக்கு தான் நாம் தெளிவான பதிலை தேட வேண்டுயுள்ளது. எதனால் இவர் திடீர் என்று "திராவிட ஞானம்"? புதிய இரண்டு கொள்கைகள் நோக்கம் எங்கிருந்து வந்தது இவருக்கு????
-------------------------------

1930களில் தொடங்கி இரண்டாம் உலக போர் முடிவுக்கு பின்னர் Marxist Revolutions in the Third World என்ற சிந்தனையை சோவியத் யுனியன் முன்வைக்கும் காலகட்டம் இது. இதன் நோக்கம்

1.கம்யூனிஸ்ட் நாடுகள் இல்லாத மற்ற நாடுகளில் கம்யூனிஸ்ட் புரட்சியை ஏற்படுத்துவது& அதற்கான நிதி ஆதாரங்களை கொடுத்து உதவுவது.
2.மற்ற நாடுகளை சோவியத் யூனியனுடன் இணைப்பது.

இதற்கு ஒவ்வொரு நாட்டிற்கும் தனி தனி கொள்கைகளை உருவாக்கினர் உலக அளவில் உருவான கம்யூனிஸ்ட் இயக்கங்கள். அதன்படி இந்தியா, பர்மா , பாகிஸ்தான் ,இந்தோனேசியா , பிலிப்பைன்ஸ், நேபால் என்று அனைத்து ஆசிய நாடுகளுக்கும் சேர்த்து கூட்டங்கள் நடைபெற்றன.

Malayan Communist Party (MCP) - மலேசியாவில் உருவாக காரணம் சோவியத்;
புரட்சியாளர் Musso இயக்கம் PKI(Partai Komunis Indonesia) மூலம் இந்தோனேசியாவில் கம்யூனிஸ்ட் 1926 முதல் நடந்த அனைத்தும் பின்னால் சோவியத் இருந்தது;

Partido Komunista ng Pilipinas - பிலிப்பைன்ஸ் நாட்டில் Hukbalahap மிக தீவிரமாக போர்கள் நடத்தில் புரட்சியை ஏற்படுத்தி வரலாற்றில் சோவியத் யூனியன் அவருக்கு அனைத்துவிதமான ஆயுதங்களையும் அள்ளி வழங்கியது அசைக்கமுடியாத உண்மை.

இது போல அனைத்து கிழக்காசிய நாடுகளிலும் Comintern என்ற Communist International கூட்டமைப்பு மூலம் கம்யூனிஸ்ட்கள் ஏற்படுத்திய புரட்சிகளில் நமக்கு எந்த அளவு தீவிரமாக கம்யூனிஸ்ட்கள் உலக தலைவர்களை கொண்டு புரட்சி வெடிக்க வேண்டும் என்று விரும்பினர் என்பது அறியலாம்.

இரண்டாம் உலக போருக்கு பின் இந்த வேலை மிக வேகமாக நடந்தது(1948ல் மேற்கு வங்காளத்தில் கூட ஒரு கூட்டம் நடந்ததாக தகவல்).

இரண்டாம் உலக போருக்கு பின் ஆசிய கம்யூனிஸ்ட் இயக்கங்கள் ஒன்றுகூடி எடுத்து கொண்ட முடிவு:

1.எந்த ஆசிய நாடும் மேற்கத்திய ஐரோப்பிய அமெரிக்க நாடுகளுடன் கைகோர்க்காமல் பார்த்து கொள்ள வேண்டும்.
2.எந்த ஒரு பெரும் நாடும் உருவாகிவிட கூடாது.
3.அனைத்து நாடுகளிலும் புரட்சி- அரசுக்கு எதிரான போராட்டங்கள் உருவாக்க வேண்டும்.

இந்த திட்டத்தில் இந்தியா முக்கியமான நாடு; கிழக்காசிய நாடுகளில் இந்தியா தான் மிக பெரிய நாடு மேலும் இந்திய பெருங்கடல் இந்த நாட்டிடம் செல்கிறது. இந்தியாவில் இன்று இருக்கும் தேச விரோத பிரச்சனைகள் அனைத்துமே உருவாக விதை போட்ட காலகட்டம் இதுவே.

ஒருபக்கம் இந்தியா சோவியத் யூனியனில் இணைவதை தான் நேரு விரும்பி இருக்கவேண்டும் என்றாலும் அது நடக்காத காரியம். ஏன் என்றால் ஒருபக்கம் நேரு பிரிட்டனிடம் இருந்து சுதந்திர இந்தியாவை பெற்று இருந்தார். இன்னொரு பக்கம் ஹிந்துத்துவா அமைப்புகள். இன்னொரு பக்கம் நேதாஜி என்ன ஆனார் என்று தெரியவில்லை. காந்தியை ஹிந்து இயக்கங்கள் கொலை செய்திருந்தனர் - ஜின்னாவை மவுண்ட் பேட்டனையும் கொலை செய்ய திட்டம் தீட்டி இருந்ததாக தகவல். இதனால் நேரு கையை பிணைந்து கொண்டு நிற்க நேர்ந்தது.
-------------------------------

இதை ஏன் கூறுகிறேன்?

இந்த காலகட்டத்தில் தான் ஈவே ராமசாமி ரஷ்யா பயணம் செல்கிறார். ஒவ்வொரு நாடுக்கும் அதற்கு தகுந்தார் போல அரசியல் அதிர்வுகளை உருவாக்குவது தான் சோவியத் எண்ணம். அனைத்து நாடுகளில் இருந்தும் இரண்டாம் கட்ட தலைவர்கள் அழைக்கபட்டனர். அவர்களுக்கு எந்த உதவியும் செய்ய சோவியத் யூனியன் முன்வந்தது.

இந்த காலகட்டத்தில் அனைத்து ஆசிய நாடுகளிலும் கம்யூனிஸ்ட் இயக்கங்கள் பெரும் வேகம் காட்டின, அனைத்து ஆசிய நாடுகளும் இந்த தாக்குதலை உணர்ந்தன.

இந்தியா இந்த திட்டத்தில் வெற்றி அடைய தடையாக இருக்க போவது ஒரே ஒரு காரணம் தான் அது

"ஹிந்துகள்".

இந்த விஷயம் மட்டுமே இந்த மக்களை ஒன்றாக பிடித்து வைத்துள்ளது ஒரு தேசமாக.

ஆக இந்த உணர்வை விட்டு வெளியேறாத வரை இந்த மக்களை பிரிக்க முடியாது.. இதை நன்கு புரிந்து பிரிட்டீஸ் பாரதியார் கால்டுவெல் முன் வைத்த நம்பிக்கையான "திராவிடம்" தூசிதட்டி கையில் எடுக்கபட்டது. இதன் மூலம் இவர்கள் தென் இந்திய தேசத்தை பிரிக்க வேண்டும் என்று நினைத்து தங்கள் வசதிக்கு இந்த நம்பிக்கையை உண்மை போல உருவகம் செய்தி பரப்பினர்.

ஆக ஏன் நீதிக்கட்சி - திராவிட கழகம் என்று மாறியது என்பதில் இருக்கும் உண்மை இதுவே. 'கழகம்' என்று பெயருடன் திராவிடம் என்று சேர்க்க பெயர் உள்ளேயே மறைமுகமாக இந்த உண்மை வெளிபடுத்தினார் ஈவே ராமசாமி.

இனி என்ன - ராமர் சிலை உடைப்பு - பூணல் அறுப்பு - இந்தியா ஒழிக- திராவிட பிரிவினை - தமிழ் ஒழிக - கம்பன் திருவள்ளுவன் எல்லாம் பார்பன அடிமைகள் என்று அருமையான நாகரீகமான தமிழுக்கு பெருமை சேர்க்கும் எல்லா வேலைகளும் இந்த திக செய்ய தொடங்கிய காலகட்டம் ஆரம்பம்.

அரசியல் இயக்கமாக கம்யூனிஸ்ட்கள் இந்தியாவில் காங்கிரஸ் நேருவுடன் மிக அதிக நெருக்கத்தில் இருந்தனர். ஆட்சியர் முறையால் ஒருபக்கம் கம்யூனிஸ்ட் இயக்கங்களை வேலை செய்தன.

இன்னொரு பக்கம் நாட்டை பிளவு படுத்தும் வேலையை ஈவே ராமசாமியை நம்பி ஒப்படைக்கபட்டது. ஆக இந்த முயற்சியில் பிரச்சனை வராமல் பேச்சுரிமை என்ற பெயரில் இந்த திராவிட சிந்தனை விதைக்க முழுமையாக அனுமதியும் கிடைக்க

பிறந்தது புதிய குழந்தை "திராவிட நாடு பிரிவினை சிந்தனை ".

இதனால் தான் பெயர் மாற்றம் நடந்தது... நீதிக்கட்சி - திராவிட கழகம்.

இந்த Marxist Revolutions in the Third World நிந்தனையின் உலக கலவர நகர்வுகளின் ஒரு பகுதியே இந்த திக. என்ன இவர்களை ஏழைகள் என்று கூறினால் ஊரே சிரிக்கும் என்பதால் கம்யூனிஸ்ட் என்று சொல்லாமல் முகத்தை மறைத்து அவர்கள் என்ன ஆணை பிறப்பித்தார்களோ அதை செய்தனர்.

ஆக இந்த உண்மை மூலம் நமக்கு தெரிவது திக உருவானதே தேசத்தை துண்டாடதான்.. இப்போது கூறுகிறேன். இந்த திக என்ற பெரியாரிய கூட்டம் அனைத்து பிரிவினை வாதிகளுக்கும் வக்காலத்து வாங்கும் ஒரு தேசவிரோத கூட்டம். இதை முழுவதும் ஒழித்து கட்டுவது காலத்தில் கட்டாயம்.
---------------------------------

திராவிடம் என்பது உண்மை என்று தானே கமல் போன்றவர்கள் முன்வைக்கிறார்கள்?

ஒரு நம்பிக்கை எப்போது உண்மையாகும் என்றால் அறிவியல் தேடல் கொண்டு நிரூபிக்க, ஆய்வு கட்டுரைகள் ஆதாரங்கள் கொண்டு பளிச்சுன்னு வெளிபடுத்த வேண்டும் உண்மையை. நான் உங்களை கேட்கிறேன் எத்தனை ஆய்வுகள் , அறிவியல் ஜெனிட்டிகள் ஆராய்ச்சிகள் மூலம் இந்த ஆரிய திராவிட சிந்தனை உண்மை என்று நிரூபிக்க 60வருட திராவிட ஆட்சி அதிகாரத்தில் இருந்தவர்கள் முயற்சித்தனர்? இவர்கள் ஆய்வுகள் ஆராய்ச்சிகள் தானே செய்ய வேண்டி தானே. பகுத்தறிவு கூட்டம் ஏன் அறிவியலை நம்பாமல் கால்டுவெல் என்ற ஐரீஸ் கிறித்துவ பாதரியாரை நம்பவேண்டும்???

அப்படி பகுத்தறிவாதி என்றால் என்ன செய்ய வேண்டும்! DNA ஆய்வுகள் நடத்துங்கள் - ஆரிய திராவிட கலப்புக்கான Bio-Diversityஇருக்கா என்று அறிவியல் பூர்வமான தேடி பார்க்கவேண்டும் தானே. வெறும் நம்பிக்கை என்பது எப்படி உண்மையாகும்?.

Centre for Cellular and Molecular Biology (CCMB) 2009 தனது ஆய்வு அறிக்கையை வெளியிட்டது... அதில் `This paper rewrites history... there is no north-south divide" என்று தெளிவாக கூறினார்.

13மாநிலங்களில் 500,000 நபர்களின் மாதிரிகள் இந்தியாமுழுவதும் 25 பிரிவு மக்களை தேர்வு செய்து - நடத்திய இந்த ஆய்வின் முடிவு கூறும் உண்மை ஆரிய திராவிட பிரிவினை என்பது வென்றும் நம்பிக்கையே. அதாவது "நீங்கள் எல்லாமே ஒரே குரங்கு கூட்டம் தான்" என்று வந்தது.

ஆன்மிக வழியில் இருப்பவர்கள் நம்பிக்கை சார்ந்து இயங்கலாம், சரி - ஆனால் பகுத்தறிவாதிகள் அறிவியல் சார்ந்து அல்லவா இயங்க வேண்டும்???? கமல் உண்மையில் தன்னை rationalist என்று சொல்லி கொள்வார் என்றால் அறிவில் ஆதாரங்களை எப்படி மறுக்க முடியும்? என் தனிபட்ட கருத்து "நீட் தேர்வுக்கு நீங்கள் MCI போர்ட் தலைவரை கூப்பிட்டு பேசலாம் , அதை விட்டுவிட்டு ஏன் நடிகர் சூரியாவிடம் நீட் பற்றி விளக்கம் தேடுகிறீர்?? இந்த விசயத்தின் தமிழ் நாட்டை திருத்துவது கஷ்டம்".

இதனால் தான் நான் rationalist என்பது வேறு periyarist,periyarism என்பது வேறு என்கிறேன். திராவிடம் என்பது நிலபரப்பை குறிக்கும் சொல் என்பதை விட இந்த பகுதி மக்களின் சிற்பகலையை குறிக்கும் ஒரு சொல் என்று தான் எடுத்து கொள்ளவேண்டும் தவிர இதனை வைத்து பிரிவினை என்பது சுத்த முட்டாள்தனம்.
-----------------------

மக்கள் திராவிட கட்சிகளை ஆதரிக்க காரணம் சினிமா மோகம் தானே ஒழிய கொள்கை கோட்பாடு எல்லாம் இல்லை. ஒரு வித கவச்சி அரசியல் மூலம் வளர்ந்தது தான் இந்த திராவிட அரசியல். உண்மை திராவிட கழகத்தின் லட்சனம் மிக கீழ்தரமானது.

அப்போ திராவிட கட்சியினர் பாரம்பரியம் என்று கூறுவது எல்லாம்??

அதுவா

நீங்க ஏதாது திராவிடத்திற்கு எதிராக பேசினால் உங்களை அசிங்க அசிங்கமா திட்டனும்; உங்க குடும்பத்தை கீழ்தரமா விமர்சனம் செய்யணும்; நீங்க மாற்று கட்சி என்று ஆரம்பித்தால் உங்களை எப்படி வளரவிடாமல் செய்யணும்; தேசிய கட்சி என்றால் அனைத்து பிரச்சனைக்கும் நீங்க தான் காரணம் என்று கூறி ஹிந்து தமிழ் என்று கூறி பிரிக்கணும் ; ஆட்சிக்கு வந்து உக்காந்ததும் ஹிந்து கோவில்கள் சொந்தமான சொத்துகளை கேள்வி கேட்க முடியாத சொத்துகளை திருடனும் ; அனைத்து திட்டங்களிலும் கமிஷன் வாங்கணும்; இன்னொரு கட்சியை உருவாக்கி வருடம் வருடம் நடுநிலையாக இருக்கும் வோட்டை பிரிக்க வேண்டும்; ஊழல் செய்து மக்களிடம் மாட்டி கொண்டால் திசை திருப்ப போராட்டங்களை உணர்வை தூண்டிவிட்டு நடத்த வேண்டும், தமிழில் கவர்ச்சியாக பேசவேண்டும் என்று அரசியலின் அத்தனை அயோக்கிய தனமும் திராவிட கட்சிகள் பாரம்பரியம் என்று வச்சுக்கோங்க.. வரலாறு முழுவதும் இதை தான் இந்த கழகங்கள் செய்தார்கள், அதனால் கூறுகிறேன். என்னை தவறாக நினைக்கக் வேண்டாம்.

1969ல் புதிய வீராணம் திட்டம் , பூச்சு கொல்லி மருந்து ஊழலில் ஆரம்பித்த திமுக - கருணாநிதி அவர்களின் சாதனை 2G ஏறக்குறை 1.5லட்சம் கோடி இழப்புடன் ஒரு பெரிய ஊழல் பட்டியலுடன் அனைத்துவிதமாகவும் கோடிகளை குவித்தனர். அதாவது பாருங்க நீதிக்கட்சி என்று இருந்த காலத்தில் இருந்து இந்த கொள்ளைடிக்கும் வேலையை இவர்கள் இன்றுவரை நிறுத்தவே இல்லை. கருணாநிதி அவர் கூட்டம் எப்போது எல்லாம் ஆட்சிக்கு வந்தனரோ அப்போது எல்லாம் ஒரு பெரும் பட்டியல் ஊழல் இருக்கும்.

எனக்கு தெரிந்து சாதனை என்று வேறு எதுவும் இல்லை.

அப்போ தமிழுக்கு தொண்டு செய்த திராவிட கழகங்கள்???

என்ன தொண்டு செய்தார்கள்!!! எனக்கு தெரிந்து எதுவும் இல்லை. எதாவது இருந்த சொல்லுங்க. தமிழ் தாத்தா உ. வே. சாமிநாதய்யர் செய்த தொண்டில் 1% செய்திருப்பார்களா? இந்த 60வருட ஆட்சியில். இன்று நாம் பார்க்கும் தமிழை காப்பாற்றி கொடுத்த அந்த மனிதருக்கு எத்தனை சிலைகள் பாராட்டுகள் விழாக்கள் கொண்டாடினார்கள்??? அதே நேரம் தமிழை திட்டி தீர்த்த அவமானம் செய்த ஈவே ராமசாமிக்கு எப்படி இவர்களால் புகழ் சேர்க்க முடிகிறது??? அது தான் திராவிட கட்சிகள்.

தமிழ் நாடு இன்று இருக்க காரணமே திராவிட கட்சிகள் தான் என்று பேசுவது எல்லாம்?

மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கும் போது இந்த திராவிட தறுதலைகள் திராவிட நாடு திராவிடனுக்கே என்று பேச - தெலுங்கு அங்கிட்டு ஆந்திராவை உருவாக்கிகொண்டிருந்தது - கேரளாவை இடிக்கி மாவட்டத்தை இழுத்து பிடித்து மலையாள தேசம் உருவாக்கி கொண்டிருந்தனர் - ஓசூரை இழுத்து கொண்டு ஒரு பக்கம் கர்நாடகா உருவாகிகொண்டிருந்தது- அன்று எல்லைக்கு சென்று மீட்ட யாரும் திராவிட கழகத்தைச் சார்ந்தவர்கள் கிடையாது - ஆனால் தமிழ் நாடு என்று பெயரை மாற்றிவிட்டு எல்லா பெருமையும் இவர்கள் செய்தது போல வரலாற்றை திரித்தனர். அப்போ எங்கே போச்சு திராவிட நாடு என்று வைக்க வேண்டி தானே. அப்போ மட்டும் என்ன தமிழ் நாடு??? ஏன் என்றால் இந்த மாநிலம் இன்று இப்படி உருவாக போராடியவர்கள் எல்லோருமே தமிழ் இயக்கங்களை சார்ந்தவர்கள். அதை மறைக்க செய்த தில்லு முள்ளு.

அப்போ மாபோசி , ராமசுப்பய்யர் என்று ஒரு கூட்டமே தமிழ் நாடு உருவாக காரணமாக உழைத்தார்களே அவர்கள் எல்லாம் யார் என்று போய் கேளுங்க மண்டையை சொரிவாணுக இந்த திராவிட பொய்யர்கள்.. கொஞ்சம் காலம் போனால் அவர்களையும் இவர்கள் இயக்கத்தில் வேலை பார்த்தவர்கள் என்று கூறினாலும் கூறுவார்.

எல்லாமே பொய் பொய் பொய்.... திமுக செய்யும் அரசியல் தந்திரங்களை இன்னொரு பதிவில் முழுவதுமாக வெளியிடுகிறேன்
-----------------------------------

இறுதியாக:






உண்மையில் ஜமிந்தார்கள் பிரபுக்களாக இருந்த நீதிக்கட்சி- திராவிட கழகமாக தேசத்தை உடைக்க பரிணாமம் எடுத்து - பின்னர் திமுக என்ற வடிவில் நாட்டை கொள்ளை அடிக்கும் கூட்டமாக உருவாகி இறுதியில் அது கருணாநிதி சொத்தாக ஆகிப்போனது வரை இந்த திராவிட தறுதலைகள் போல ஒரு கேடுகெட்ட கட்சியை உங்களால் நாட்டில் அல்ல உலகத்தில் தேடினாலும் கிடைக்காது.

பொய் பொய் பொய் - வாய் நிறையா வசனம் பேசி நம்பிக்கையை உண்மையாக திரித்து மக்களை அடித்து பிழைத்த கூட்டம் இது என்பது ஒழுங்கா நீங்கள் வரலாற்றை நடுநிலையாக தேடி படித்தாலே விளங்கும்.

மோடி குடும்ப பின்னணி என்ன ? இந்த கருணாநிதி குடும்ப பின்னணி என்ன???? திமுக அமைச்சர்கள் சொத்துக்கள் என்ன??? ஆனா பாருங்க இவ்வளவு கொள்ளை அடிச்சுட்டு என்ன யோக்கியன் போல போராட்டங்கள் நடத்துகிறார்கள். எல்லா பிரச்சனைக்கும் மோடியை இழுத்து எப்படி விட முடிகிறது இவர்களால்???

திமுக, திக இரண்டும் இந்திய தேசத்தின் அவமானங்கள்; தமிழகத்தின் சாபங்கள்.

-மாரிதாஸ்

Keerthivasan

About Keerthivasan -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :