Monday, September 25, 2017

Keerthivasan

புல்லட் ரயில் தேவையா?



புல்லட் ரயில் தேவையா?? அது 10% பணக்காரர்கள் செல்ல பயன்படபோகிறது - ஆனால் அதற்கான கடனை 90% ஏழைகள் கட்டும் வரிபணத்தில் கட்ட போகிறார்கள்? மோடி சாதனை இது தான். {கேள்விகள் : பல மிமீஸ் போடும் அறிவாளிகள், சில சினிமா பிரபலங்கள்}

பிஜேபி எந்த எந்த முறை ஆட்சிக்கு வந்தாலும் நன்கு கவனித்தால் இந்த Transport Mode விசயத்தில் கொஞ்சம் அதிகமாகவே கவனம் செலுத்துவர். முன்னர் வாஜ்பாய் காலத்தில் தங்க நாற்கரசாலை(Golden Quadrilateral) திட்டத்தை முன்வைத்தார். இந்த திட்டம் அறிமுகம் செய்த காலத்தில் இந்த கம்யூனிஸ்ட் இதை கேலி செய்தும் - இது வரிபணத்தை வீணாக்கும் வேலை என்றும் எல்லா பத்திரிக்கைகளிலும் இடதுசாரி சிந்தனையாளர்கள் இந்த திட்டத்தை விமர்சித்தும் எழுதினர். பொதுவாகவே ஹிந்துத்துவா மீது இருக்கும் வெறுப்பு காரணமாக பிஜேபி முன்வைக்கும் எந்த திட்டமும் இங்கே கேலி செய்யபடுவது எப்போதும் கம்யூனிஸ்ட் மத வெறியர்களால் செய்யப்படும் வேலை. ஆனால் இன்று? அவர் கொடுத்து சென்ற திட்டம் பெரும் வெற்றி.

புல்லட் ரயில் திட்டம் சுற்றியுள்ள அடிப்படை கேள்விகளுக்கு அனைத்துக்கும் என்னால் முடிந்த அளவு எளிமையாக பதில்கள் தருகிறேன்.
------------------------------



ஏழைகள் வரிபணத்தில் இந்த புல்லட் ரயில் திட்டம் செயல்படுத்தபடுகிறதா?

கிடையாது. வாய்பாய் அரசு இருந்த காலத்தில் இதற்கு நல்ல தீர்வை நம்மிடம் கொடுத்து சென்றுள்ளது. அது, தனியார் வாருங்கள் கட்டுங்கள் , வழூல் செய்யுங்கள், மக்களுக்கு கொடுத்துவிடுங்கள்.

அதாவது இன்று நம்ம திருச்சி - திண்டுகல் நெடுஞ்சாலை இருக்கு. அது ரிலைன்ஸ் தனது கட்டுமான நிறுவனம் மூலம் முதலீடு செய்து கட்டிகொடுக்க - அதற்கான தொகையை அந்த ரோட்டை பயன்படுத்தும் வாகனங்களிடம் இருந்தே tollgate வச்சு வசூல் செய்து கொள்ள வேண்டும். வசூல் ஆனதும் தனியார் நிறுவனம் tollgate மூடிவிட்டு- மக்களுக்கு இலவசம் ஆகும். இது தான் கட்டுங்கள் - வசூல் செய்யுங்கள் - இலவசம் ஆக்குங்கள்.

நீங்கள் சந்தேகம் என்றால் national highway authority of india இணையதளம் செல்லுங்கள் அதில் Project Name: 4-Laning of Trichy-Dindigul Section, NH-45 தேடவும். மொத்த மதிப்பு :576 crores , கட்டுமான நிறுவனம் : Reliance Infrastructure Ltd என்று விவரம் கிடைக்கும்.

இந்த திட்டத்தில் அந்த தனியார் நிறுவனம் முதலீடு செய்த தொகையை tollgate மூலம் வசூல் செய்து - வசூல் ஆனதும் அந்த ரோட்டை மக்கள் பயன்படுக்கு இலவசம் ஆக்கிவிட வேண்டும்.

ஆக இது புரிகிறதா??? யார் பயன்படுத்துகிறார்களோ அவர்களை கொண்டு தான் இந்தவிதமான திட்டங்கள் ஆகும் செலவுகளை அரசு வசூல் செய்து திரும்ப கொடுக்கும். ஆம் அரசின் ஒரு பங்கு முதலீடு இருக்கும் அது நிலம் வாங்கி கொடுப்பது என்று அடிப்படை தேவைகளுக்கு மட்டுமாக இருக்கும். அது போல தான் இந்த புல்லட் ரயில் விசயமும் - யார் அதை பயன்படுத்த போகிறார்கள்? அவர்கள் மூலமே கடன் அடைக்கப்படும்.

அதே போல் தன இங்கே இருக்கும் விமான நிலையங்கள் பாருங்கள் பெருமாபலும் GMR Group தான் கட்டி தந்திருப்பார்கள். அதில் அவர்கள் போட்ட முதலீட்டை விமானம் இயக்கம் தனியார் நிறுவனங்கள் - அதில் இருக்கும் கடைகள் - என்ற பலவழிகளில் வசூல் செய்து கொள்ளும். ஒரு கட்டத்தில் அது மக்கள் பயன்பாட்டுக்கு முழுமையாக இலவசம் ஆகிவிடும்.

இப்படி தான் இந்த புல்லட் ரயில் , விமான நிலையங்கள் , மெட்ரோ ரயில்கள், national highway -Express Highway ரோடுகள் என்று அனைத்தும் தனியார் பங்களிப்பும் அரசின் கண்காணிப்புமாக செயல்படுகின்றன- வித்திட்டவர் நமது ஆக சிறந்த தேசியவாதி பிரதமர் வாஜ்பாய்.

{ஒரு சின்ன விஷயம்: கேரளாவில்- கொச்சி நகரத்தில் L&T நிர்வாகம் கட்டி கொடுத்துள்ள மெட்ரோ அண்மையில் திறக்கபட்டது. இதில் முக்கியமான விஷயம் என்வென்றால் 2015ல் பிரனாய் விஜயன் தலைமையில் கம்முனிஸ்ட் கட்சி மெட்ரோ பணியை மேற்கொண்டு தொடர விடாமல் "கார்ப்பரேட் எதிர்ப்பு" என்று 10 நாட்கள் போராட்டம் நடத்தினர் , அதில் நிறுவனத்திற்கு 8 கோடி வரை இழப்பு ஏற்பட்டது.. மீண்டும் பணியை வேகப்படுத்தி அந்த கட்டுமான வேலையை முடித்தது அந்த நிறுவனம். அதில் 10,000க்கும் மேல் வேலையாட்களை கொண்டு இதை செய்து முடித்தது அந்த நிறுவனம். ஆனால் செய்தி எப்படி வந்தது தெரியுமா? "முதல்வர் பிரனாய் விஜயன் எளிமையாக மெட்ரோவில் பயணம் செய்தார்" என்று... எதுவும் சொல்வதற்கு இல்லை. அந்த செய்தி படித்ததும் கொஞ்சாமாக சிரிப்பு வந்தது. மக்கள் முட்டாள் ஆக்குவதில் கம்யூனிஸ்ட் திமுக திக இவர்களை மிஞ்ச ஆள் இல்லை இங்கே.}

எனவே திட்டம் செயல்படுத்தும் விதத்தில் புரிதல் இல்லாததால் இந்த கேள்வி எழுகிறது. GMR Group, Jaiprakash Associates Ltd, Larsen &Toubro Ltd என்று இந்திய அடிப்படை கட்டுமான நிறுவனங்கள் பல உள்ளன. இவை எடுக்கும் project விவரங்களை நீங்கள் சும்மா இருக்கும் நேரத்தில் எடுத்து படிக்கவும். அது உங்களுக்கும் உங்கள் குழந்தைகளுக்கும் நல்லது. அப்போ தான் நாட்டின் கட்டமைப்பு மேன்படுத்துவதில் இருக்கும் பொருளாதாரம் புரியும். உங்களுக்கும் அதில் இருக்கும் பிசினஸ் வாய்ப்புகள் புரியும்.

இதில் எழும் துணை கேள்வி - tollgate வச்சு தனியார் அதிகம் வசூல் செய்வதாக வரும் குற்றசாட்டுகள்?

ஆம், காங்கிரஸ் இருந்த கடந்த 10வருடத்தில் இந்த பிரச்சனை அதிகம் வந்தது. ஆனால் மோடி வந்த பின் வசூல் ஆகும் விவரங்கள் அனைத்தும் வெளிப்படையாக வெளியிட ஆணை பிறப்பிக்கபட்டுள்ளது. RFID மூலம் வாகங்கள் கட்டும் விவரங்கள் உடனடியாக பதிவாகும் வண்ணம் முன்னேற்றம் செய்ய வாகன உற்பத்தியாளர்களை கேட்டு கொள்ளபட்டுள்ளது. வசூல் ஆகிவிட்ட அனைத்து tollgateகளையும் மூடிவிட உத்தரவு கொடுக்கபட்டுள்ளது. நீங்கள் பாருங்கள் நடைமுறையில் எத்தனை மூடபட்டுள்ளன என்று உணர முடியும்.

2015ல் மட்டும் 125 டோல்கேட் மூடபட்டது. ஒவ்வொருவருடமும் தெளிவான கணக்கு விவரங்களை வெளியிடுகிறது மோடி அரசு. இதனால் தான் அவர் அடிகடி தன பேச்சி கூறுகிறார் "வெளிப்படையான அரசு நிர்வாகம் கொடுக்கவே நாங்கள் முயற்சிக்கிறோம்" என்று. புரிந்து கொள்ள முயற்சி எடுத்தால் எல்லா விவரமும் உங்களுக்கு தெளிவாக கிடைக்கும்.

--------------------------------------

இப்போ என்ன தேவை வந்துவிட்டது புல்லட் ரயில் நமக்கு????

புல்லட் ரயில் மட்டும் அல்ல நாட்டின் அனைத்து போக்குவரத்து முறைகளும் வேகபடுத்த என்ன என்ன வழிகள் இருக்கோ அதை எல்லாம் தேடி அமல்படுத்துவது, இந்த பிஜேபி ஆட்சிக்கு வரும்போது எல்லாம் செய்கிறது. அது மாநிலம் என்றாலும் சரி - மத்திய அரசுக்கு என்றாலும் சரி. அது எதனால் என்று நாம் கொஞ்சம் கட்சி சார்பில்லாமல் தெரிந்து கொள்வோம்.

நாட்டின் போக்குவரத்து என்பது 1.Rail Transport 2.Road Transport 3.Waterways 4.Air Transport இந்த நான்கிலும் மோடி வந்தபிறகு அறிவிக்கபட்ட திட்டங்களை அனைத்தையும் ஒருமுறியாது தேடி படிக்கவும்.

இதில் ஏன் பிஜேபி கவனம் செலுத்துகிறது என்றால் - ஒரு நாட்டின் போக்குவரத்து முறையில் ஒழுங்கும், வேகமும் எந்த அளவுக்கு முன்னேற்றம் காணுமோ அந்த அளவு வளர்சி என்பது சீராக எல்லா தளங்களுக்கும் கொண்டு சேரும். இது அசைக்க முடியாத உண்மை. அதனால் தான் ஹிட்லர் தனது பொருளாதார கொள்கையில் முதன்மையாக இந்த போக்குவரத்து விஷயத்தை கையில் எடுத்து ஜெர்மனியின் அனைத்து ஊர்களையும் national highwayயுடன் இணைத்தார். ஹிட்லர் பொருளாதரா சாதனையில் இது தான் மிக முக்கியமானதும் கூட.

இதை உணர எளிமையான எடுத்துகாட்டு :

சென்னை சென்று வர மதுரை ,திருநெல்வேலி பகுதி மக்களுக்கு 1மணி நேரம் தான் ஆகும் என்றால் யாரும் குடி மாறி அங்கே செல்ல தேவை இல்லை. நான் ஒரு பூ வியாபாரி இல்லை ஒரு தேயிலை தோட்டம் வைத்துள்ள முதலாளி என்றால் என் பொருட்கள் சந்தை படுத்த நான் நகரங்களை நோக்கி செல்ல வேண்டும். அது முடியாத காரணத்தால் தான் இடைத்தரகர்கள் உள்ளே அதிகம் வருகிறார்கள்.. எனக்கு ஒருவேளை 1மணி நேரத்தில் மதுரை - பெங்களூர் - சென்னை என்று பேரு நகரங்களுக்கு என் கிராமத்தில் இருந்து சென்று வர முடியும் என்றால் நானே நேரடியாக என் வாடிக்கையாளர்களை சென்று சேர்ப்பேன்.. இல்லை நகரத்தில் தேவை உள்ளவர்கள் என்னை தேடி என் இடத்திற்கே வர முடியும். தினமும் கூட வந்து செல்வது எளிதாகும் பொது சிறுவியாபாரிகள் கூட என்னை வந்து அடைய இது பெரும் உதவியாக இருக்கும்.

இப்படி தொழில் நடத்துபவர்களுக்கும் சரி - வேலைவாய்ப்பு முதல் திரைப்பட வாய்ப்பு வரை வாய்ப்பு தேடும் மக்களுக்கும் சரி வாய்ப்பை கொண்டு சேர்க்கும் இடத்தில் இந்த போக்குவரத்தின் தேவை மிக மிக அவசியமான ஒன்று. சரிதானே???

மீண்டும் தெளிவாக புரிந்து கொள்ளுங்கள் "நகரத்து மக்களுக்கு கிடைக்கும் வாய்ப்பை நாட்டின் அனைத்து பகுதி மக்களுக்கும் கிடைக்கக் வழி செய்வது போக்குவரத்து தான்". ஆக புல்லட் ரயில் என்ற திட்டம் எப்படி செயல்படுத்த படுகிறது , அதன் அவசியம் என்ன என்று உங்களுக்கு புரிந்து இருக்கும் என நம்புகிறேன். நாட்டின் வளர்சியை தயவு கூர்ந்து வேறு வேறு துறைகளுடன் ஒப்பிட வேண்டாம்.

அதாவது நீங்கள் அனைவரும் செய்யும் தவறான ஒப்பீடு எது என்றால் இஸ்ரோவை - விவசாயத்துடன் ஒப்பிடுவது ; விமான போக்குவரத்து - அணுஉலை அமைப்பது - இணையம் துறைமுகம் என்று நாட்டின் அடிப்படை வளர்சியை கொண்டு போய் ஏழை விவசாயி பிச்சை எடுபவர் அனிதா மரணம் என்று விவகாரங்களுடன் முடிச்சு போட்டு பேசுவது சுத்த முட்டாள் தனமான உணர்வை தூண்டிவிடும் வெத்து பேச்சு.
------------------------------------

இறுதியாக :

இந்தியாவில் கோயம்பத்தூரில் உற்பத்தியாகும் மெக்கானிகல் சாதனங்கள் கொல்கத்தாவுக்கும் - ராஜஸ்தான் ஜெய்பூர் பக்ரு பிரிண்டட் சேலைகள் சென்னைக்கும் - ராமநாதபுரம் சீலா மீன்கள் மதுரைக்கும் - திருபுவனம் பட்டு சேலைகள் டெல்லிக்கும் - சிவகாசி பட்டாசுகள் மும்பைக்கும் - திப்பூர் பனியன் உற்பத்தி பொருட்கள் கொச்சிக்கும் - இப்படி உற்பத்தியாகும் பொருட்கள் நாட்டின் ஒருபகுதியில் இருந்து இன்னொரு பகுதிக்கு செல்ல 40வருடங்கள் முன்னர் 20நாட்கள் ஆகும் என்றால் இன்று வெறும் 5நாட்களில் வந்து சேர்வது வாஜ்பாய் என்ற மனிதர் கனவு திட்டமான தங்க நாற்கரசாலை திட்டம் தான் காரணம். இதை மோசமான திட்டம் என்று விமர்சித்த Tavleen Singh போன்ற இடதுசாரி பத்திரிக்கையாளர்கள் இப்போ எங்கே???

இன்று ஒவ்வொரு செக்போஸ்ட் நிற்காமல் சரக்கு வாகனங்கள் செல்ல வேண்டும் என்று GST மூலம் அதையும் எளிமையாக்கி விட்டார் மோடி. இது எல்லாம் அவர்கள் சொந்த நலனுக்காக செய்கிறார்கள் என்று நீங்கள் நம்புகிறீரா??? இப்படி பேசும் பேச்சு எல்லாம் சுத்த முட்டாள் தனம். நல்ல நிர்வாகிகளை நாம் அங்கீகாரம் கொடுக்கவில்லை என்றால் அது மக்கள் நம் தவறு.

ஒரு பெரும் நகரம் என்று நாட்டுக்கு நன்மையாகும் என்றால், அது தன்னை மையமாக கொண்டு 200கிலோ மீட்டர் சுற்றியுள்ள அனைத்து ஊர் மக்களும் எளிமையாக வந்து செல்லும் வண்ணம் கட்டமைப்பை கொண்டதாக இருந்தால் மட்டுமே நன்மை. அது அதனை சுற்றி உள்ள மக்கள் நகரத்தில் சென்று குடியேறுவதை அவசியமில்லாமல் ஆக்கும்- அந்த இரண்டாம் தர நகரங்கள் கிராமங்கள் முன்னேற்றமும் நடக்கும். அதற்கு மிக முக்கியமானது இந்த போக்குவரத்து.

உங்க திராவிட கட்சிகளை விட்டால் என்ன செய்வார்கள் தெரியுமா? ஒவ்வொரு டோல்கேடுக்கும் ஒரு 5% கமிசன் வாங்கி தன் மனைவி குழந்தைகள் பங்காளிகள் பெயரில் சொத்து குவித்து இருப்பார்கள். மோடி, அவர் அண்ணன்கள் சொத்து என்ன அவர் குடும்ப சொத்து என்ன என்று பார்த்துவிட்டு தனிமனித விமர்சனத்தை முன்வைக்க நாகரிகத்தை முதலில் பழகுங்கள். அதைவிட ஹிந்துத்துவா வெறுப்பை கைவிடுங்கள். RSS கொடுத்த அற்புதமான மனிதன் வாஜ்பாய் தான் நாடு கண்ட மிக அற்புதமான பிரதமர் - அவர் தான் அப்துல்கலாமை தகுந்த உயரத்தில் வைத்தவர். பொய் பிரச்சாரங்களால் இன்று ஹிந்துத்துவாவின் உண்மை மக்களை சென்று சேராதது தான் தமிழகத்தில் இருக்கும் மிக முக்கிய பிரச்சனை.

சினிமா நடிகர்களிடம் போர் இஸ்ரோ பற்றியும் - நீட் தேர்வு பற்றியும் விளக்கம் தேடு விந்தையான சமூகம் ஒன்று உலகத்தில் இருக்கும் என்றால் அது ஒன்று தமிழகம் இன்னொன்று ஆந்திரா தான். ஆந்திராவுக்கு சந்திராபாபு நாயுடு போல புத்திசாலிகள் கிடைத்துவிட்டனர். ஆனால் இங்கே ----- ... கொஞ்சம் கஷ்டம் தான்.

உணர்வுகளை தூண்டும் இடதுசாரி சிந்தனை பொருளாதார பார்வையை விட்டு கொஞ்சம் வலதுசாரிகள் என்ன சொல்கிறார்கள் என்று அனைவரும் கேட்கும் பக்குவத்திற்கு வாருங்கள். உண்மையில் எளிதில் புரியும்.

- மாரிதாஸ்

Keerthivasan

About Keerthivasan -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :