Thursday, October 5, 2017

Keerthivasan

இது பெரியார் மண்ணா?

ஒரு சமூக மக்களுக்கு யார் பிரதிநிதயாக இருக்க முடியும் என்று நான் உங்களை கேட்டல் என்ன சொல்வீர்?அந்த மக்களின் கலாச்சாரம் , மொழி , வாழ்வு நாகரீகம் மற்றும் சமூக சீர்திருத்தம் இவைகளில் சிறந்த பங்களிப்பு கொடுத்தவர் தான் அந்த மக்களின் அந்த மண்ணின் பிரதிநிதி என்று நாம் பெருமையாக சொல்லிக்கொள்ள முடியும். இது சரி தானே!

அப்படி பார்த்தால்


1.தமிழ் நாடு என்ற மாநிலம் உருவாக காரணம்.
2.தமிழ் மொழி சிறப்படைய அதன் புகழ் உலகம் எட்ட காரணம்.
3.இந்த மக்கள் கலாச்சாரம், கல்வி அறிவு மேம்பட காரணம்.
4.ஒடுக்கபட்ட மக்கள் உரிமை மீட்டு கொடுத்தல்.

இந்த நான்கு விதமாக நாம் பிரித்து இதில் யார் பங்களிப்பு வரலாற்றி அதிகம் என்று நாம் ஒரு ஆதார தேடல் மேற்கொள்ள வேண்டும். மிக முக்கியம் ஆதாரம் இல்லாமல் எதையும் நம்ப வேண்டாம். இந்தியாவுக்கு சுதந்திரம் வாங்கி கொடுத்தது காந்தி என்று ஆரம்பித்து வைக்கம் வீரர் தந்தை பெரியார் என்று உலகிலேயே அதிகம் பொய்யான வரலாறு பள்ளிகளில் நடத்தபடுவது இங்கே இந்த நாட்டில் தான் என்பது என் குற்றசாட்டு. எனவே அசைக்க முடியாத ஆதாரங்களை உண்மைகளை நாம் வரலாற்றில் தேடவேண்டும். இதில் அனைவருக்கும் உடன்பாடு உண்டு என்று நம்புகிறேன்.
-------------------------------------------------------------------------------

1.தமிழ் நாடு என்ற மாநிலம் உருவாக காரணம்?

1952ல் பொட்டு ஸ்ரீ ராமலு தெலுங்கு பேசும் மக்களுக்கு தனி மாநிலமாக ஆந்திர பிரதேசம் உருவாக்க வேண்டி முதல் போராட்டத்தை முன்வைக்கிறார். மொழி கொண்டு மாநிலங்கள் பிரிக்க இவர் தான் காரணம். 1930களில் தொட்டு இந்த ஈவேரா கூட்டம் திராவிட நாடு என்று கத்தி வந்த கோசம் 1950களில் மக்கள் மத்தியில் வரவேற்பில்லாமல் இருந்தது என்று தான் நினைக்க தோன்றுகிறது.

கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை
27 July 1876 -
26 September 1954
1956ல் state Reorgnasiation Act கொண்டு வரும் காலகட்டத்தில் சென்னை ஆந்திராவுடனும் , கன்யாகுமரி கேரளாவுடனும் , திருத்தணி கர்நாடகாவுடனும் என்று திசைக்கு ஒருபக்கம் பிரச்சனைகள் நடந்தன. அதை வெற்றிகரமாக முறியடித்து இன்றைய தமிழ்நாடு என்ற மாநில நிலபரப்பு இருக்க காரணம் மாபொசி, கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை, தாணுலிங்க நாடார், டிவி ராமசுப்பய்யர் போன்றவர்கள் தானே தவிர எந்த திராவிட கழகத்தவரும் கிடையாது. {மொழி வாரிய பிரிவினைக்கு அம்பேத்கார் ஆதரவு தரவில்லை. இது இந்த தேசத்தை பிரிவினைக்கு வழி வகுத்துவிடும் என்று கவலை கொண்டார். }

இந்த திராவிட கழகம் கேட்டது திராவிட நாடு பிரிவினை- ஆனால் அந்த திராவிட சித்தாந்தத்தை மற்ற பிற திராவிட மொழி பேசும் மக்களும் மாநில தலைவர்களும் ஏற்றுகொள்ளவில்லை. இந்த ஆதாரம் இல்லாத ஐரஸ் பாதரியார் சொன்ன திராவிட பிரிவை பிடித்து கொண்டு கத்தி கொண்டிருந்தனர் திக , தமிழகம் என்ற இந்த மாநிலம் இந்த மண் மீட்டெடுத்த வகையில் பெரியார் என்ற ஈவே ராமசாமியின் பங்கு என்பது கிடையாது.

இந்த விவகாரத்தை பொறுத்தவரை "மாபொசி, கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை, தாணுலிங்க நாடார், டிவி ராமசுப்பய்யர்" இவர்கள் தான் முக்கியமான தலைவர்கள்.
-------------------------------------------------------------------------------
2.தமிழ் மொழி சிறப்படைய அதன் புகழ் உலகம் எட்ட காரணம்?

தமிழ் தாத்தா உவே சாமிநாதய்யர் மட்டும் வரவில்லை என்றால் தமிழ் என்ற மொழிக்கு இன்று கிடைக்கும் இந்த பெருமை , வரலாற்று முக்கியத்துவம் , இலக்கிய பெருமை என்று எதுவுமே கிடைத்திருக்காது. இது எவராலும் மறுக்கமுடியாத உண்மை.



U. V. Swaminatha Iyer
1855–1942

இந்த மனிதர் தான் தன்னுடைய வறுமை காலத்திலும் 500 வருடம் மேலாக அழுத்தபட்ட தமிழ் மொழியை அழிவின் முடிவை தொட்டுவிட்ட தமிழை மீட்டவர். இன்று இருக்கும் பெரும்பாலான இலக்கியங்கள் , காப்பியங்கள் , புராணங்கள் பெரும்பாலும் இவர் மீட்டு கொடுத்துவிட்டு சென்றார். அதை யாரிடமும் நன்கொடை வாங்கி செய்யவில்லை. இதை ஏன் கூறுகிறேன் என்றால் திராவிட கழகமே நன்கொடை காசு பணம் துட்டு மணி என்று திரிந்த கழகம்.

அதாவது எந்த வித பலனும் எதிர்பார்க்காமல் தமிழ் மொழிக்கு உயிரை கொடுத்து வேலை செய்தவர் இந்த மனிதர்.

இந்த ஈவே ராமசாமி என்ன செய்தார் தமிழ் மொழிக்கு?? அது உலகமே அறியும்.

"தமிழ் ஒரு காட்டுமிராண்டி மொழி" இதை அவரே 40வருடமா சொல்லிட்டே தான் இருந்தார்.

"தமிழ் புலவர்களுக்கு ஆங்கிலம் தெரியாது என்பதால் அவர்கள் பகுத்தறிவு ஏற்படவில்லை" என்ற அறிய அறிவியல் பூர்வமான கருத்தை கூறியதும் இந்த ஈவே ராமசாமி தான்.

"திருவள்ளுவர் , கம்பன் , தொல்காப்பியன் எல்லோருமே ஆரிய கூலிகள் - பார்பன முட்டாள்கள்" என்ற கருத்தெல்லாம் வேறு யாரும் கூறவில்லை இதே ஈவே ராமசாமி தான் கூறினார். திருவள்ளுவரை இவர் அவமானமாக பேசிய பேச்சுகள் கொஞ்சம் நஞ்சம் அல்ல.

"தமிழ் ஒரு nuisance" என்று ஈவே ராமசாமி கூறினார் அப்படி என்றால் என்ன அர்த்தம் நீங்களே பொருள் தேடி கொள்ளவும்.

"தமிழ் மொழி விட்டுவிட்டால் உனக்கென்ன நட்டம் ?" என்று பகுத்தறிவு போதனை சொன்னவர் இதே ஈவே ராமசாமி தான்.

{ஒரு பேச்சுக்கு:
இன்று பிஜேபி காரன் எவனாது இதே வார்த்தையை சொல்லிவிட்டால் என்ன நடக்கும்???? ஒரு பேச்சுக்கு நான் கேட்கிறேன் மோடி இப்படி சொன்ன என்ன செய்வார்கள் இந்த கழக கண்மணிகள்? "பெரியார் வழியில் தமிழ் தேசியம் அமைப்போம்" என்று இந்த பெரியார் இயக்கங்கள் கூறுவது போல நகைப்புக்குரிய விஷயம் வேறு ஒன்று இல்லை. வரலாறு தெரியாது என்றால் யாரையும் ஏமாற்றலாம் அல்லவா.}

தமிழ் மொழி பெருமைக்கு திருவள்ளுவன் , கம்பன் , தொல்காப்பியன் என்று கூறினால் , இன்று தமிழ் மீட்டு எடுத்த வகையில் தமிழ் தாத்தா உவே சாமிநாதய்யர் தான் காரணம்.
------------------------------------------------------------
3.இந்த மக்கள் கலாச்சாரம்&கல்வி மேம்பட காரணம்?

கலாச்சாரம்:

"ஆண் இரண்டு பெண்களுடன் உறவு கொள்ளும் பொது பெண்கள் மூன்று ஆசை நாயகர்களை வைத்து கொள்ள முற்பட வேண்டும்" என்று உயர்வான கருத்துகளுக்கு இவர் தான் சொந்தகாரர். இது தானே இந்த கலாச்சாரம். அட ஆண்கள் அப்படி செய்ய கூடாது என்று ஒழுக்கம் கற்பிக்கவேண்டிய ஒருவர் அவன் போன நீயும் போ என்று தூண்டிவிடுவது அல்லவா பகுத்தறிவு. இது தானே இந்த மண் பெருமை.

{பெரியாருக்கு இருந்தது ஒருவித மன நோய், அது எல்லாவற்றிலும் குறை மட்டுமே தேடும் ஒருவித நோய் - அது BPD , psychopath , narcissits எதோ ஒரு குறை இருந்துள்ளது என்று எனக்கு தோன்றும். அனைத்துலுமே அவர்க்கு ஒருவித குறை தேடும் எண்ணமே மேலோங்கி இருந்திருகிறது. அதுவும் இந்த சமூகத்தின் வரலாறு தொன்மை இவைகளை அவர் வெறுப்புடனே பார்த்தார், பேசிவந்தார். அது இன்றுவரை தெரிகிறது எந்த ஒரு பெரியார் பத்தனிடம் நீங்கள் பேசினாலும் குறைகள் , குறைகள் , குறைகள் மட்டுமே பேசுவர் இல்லை - psychopath போல தான் செய்யும் தவறு அனைத்தையும் நியாயம் என்று பேசுவர் - அருவருப்பான விஷயம் தேடி பேசுவதில் ஆர்வமாக இருப்பார். }

பெரியார் மணியம்மை கண்யாணம் ஊர் அறிந்த கேவலம். அதற்கு அவர் கொடுத்த விளக்கம் - அதனை தொடர்ந்து அண்ணா , சொல்லின் செல்வன் சம்பத் பிரிவு , பிரிந்த பின் இருவரும் ஒருவரை ஒருவர் பேசிகொண்டது அனைத்தையும் தேடி படியுங்கள். அதில் பகுத்தறிவு பல்லை காட்டும்.

சொத்துக்காக வயது வித்தியாசம் கொண்டு ஒரு வயதானவனை ஒரு இளம் பெண் கல்யாணம் செய்யலாம் என்ற கீழ்தரமான காரியத்தை இன்றும் இந்த கூட்டம் நியாயபடுத்தும்.

மகள் என்று இவர் கூற , அப்பா என்ற அவள் அழைக்க இறுதியில் கல்யாணம் என்றால் எவன் காறி உமிழ மாட்டான்? இந்த லட்சணத்தில் ஊருக்கு உபதேசம் "பெண் குழந்தைகள் வயதானவர்கள் சொத்தை காரணம் காட்டி கல்யாணம் செய்வது தவறு என்று" அப்போ இந்த ராமசாமி செய்தது?

நான் எழுத முடியாத அளவு நாகரீகம் இல்லாத அனைத்தையும் ஈவே ராமசாமி முற்போக்கு என்று செய்தவர்.

"தன்னுடைய மனைவியை இந்த பெரியார் ஆதரவாளர்கள் அதே சுதந்திரம் கொடுக்கலாமே.. அதாவது இன்னொருவனுடன் உறவு கொண்டால் காதல் போய் விடாது என்ற உயர்ந்த கருத்தை ஏற்கும் கல்யாணம் முடித்த ஒருவனை நான் திராவிட கழகத்தில் பார்த்தது இல்லை".

இந்தவிதம் உயர்வான கருத்துகள் கொண்ட ஒரு ஒழுக்கமான மனிதரை நாம் நிச்சயம் இந்த மண்ணின் புதல்வனாக பெருமையாக சொல்லி கொள்ளும் முன்னர் நம் வீட்டி பெண்களிடம், பெரியவர்களிடம் ஒருமுறை கேட்டுவிடுவது நல்லது.

அடுத்து மக்களின் கல்வி:

இது மிக முக்கியம். எது எப்படியோ மக்கள் கல்வி அறிவு கிடைத்துவிட்டால் அவர்கள் பிழைத்து கொள்வர். அந்த வகையில் பார்த்தார் அனைவரும் முதலில் காமராஜரையும் அடுத்து அவினாசிலிங்கம் போன்றவரே காரணம். ஆனால் மேடையில் பாருங்கள் நீங்கள் எல்லாம் படிக்கக் காரணமே என்ன பெரியார்டா என்று பேசுவது. (காமராஜரை நாம் நன்கு தெரியும் , ஆனால் திருப்பூர் சுப்ரமணிய ஆவிநாசிலிங்க செட்டியாரை நாம் அதிகம் பேசுவது இல்லை. அவர் 1946-49வரை கல்வி அமைச்சராக இருந்தவர். இந்த மனிதர் பெண்கள் கல்வி , முதியவர்கள் கல்வி என்று அனைவரையும் வயது வித்தியாசம் இல்லாமல் கட்டாயம் கல்வி சென்று சேரவேண்டும் என்று முயற்சி எடுத்த மனிதர்).

இந்த மக்கள் கல்வி கிடைக்க காரணமானவர்களில் முக்கியமானவர்கள் காமராஜர் , திசு அவினாசிலிங்க செட்டியார். ஆனால் வாய் கூசாமல் பெரியார் இல்லைனா நீங்கலாம் படிச்சுருக்கவே மாட்டேங்கடா என்று மேடைகளில் வெக்கமே இல்லாமல் பேசுவதை நான் பார்த்தது உண்டு. ஆமா ஹிமாச்சல் பிரதேசம் , கோவா , கேரளா எல்லாம் 95%படித்த மக்களாக காரனும் இந்த பெரியார் தான் கேட்டுகோங்க.
--------------------------------------------------------------------
4.இறுதியாக ஒடுக்கப்பட்ட மக்களுக்கு உழைத்தவர்கள்?



இது தான் மிக மிக முக்கியமான விஷயம். ஏன் என்றால் - இந்த ஈவே ராமசாமியை தலித் மக்கள் மீட்டவர் போல இங்கே அடைந்த 60வருட திராவிட ஆட்சியில் ஒரு மிக பெரிய பொய்யை மீண்டும் மீண்டும் பள்ளிகூடங்களில் சொல்லி கொடுக்கபட்டு உண்மை போல் ஆக்கிவிட்டனர். ஒரு Brand name போல இந்த பெரியார் என்ற வார்த்தை ஜாதி ஒழிப்புக்கு பயன்படுகிறது. ஆனால் இது இந்த நூற்றாண்டின் மிக பெரிய பொய். திட்டமிட்டு திராவிட கழக ஆட்சியர்களால் இது தமிழக மக்கள் மத்தியில் பரப்பபடுகிறது.

தமிழ் , தலித் விடுதலை இரண்டுக்கும் அதிகம் இந்த பெரியார் கூட்டம் கொண்டாடுவது சமிபத்தில் அதிகரித்துவிட்டது. இது ஒரு பொய்.

"வைக்கம் வீரர் பெரியார்".????

இது தான் பெரியாரை தூக்கி பிடித்து மக்களிடம் பள்ளிகளில் சொல்லி கொடுக்கபட்டு இந்த ராமசாமியை சாதனையாளர் போல உயர்த்தி காட்ட உதவியது. ஆனால் இது உலக மகா பொய்.

வைக்கம் போராட்டம் தான் தீண்டாமை ஒழிப்புக்கு மிக மிக முக்கியமான இந்திய அளவில் பேசப்படும் போராட்டம்.

வைக்கம் போராட்டம் - 1924ல் ஆரம்பம் ஆகி 1925ல் முடிந்த இந்த மொத்த போராட்டத்தில் ஆரம்பம் முதல் முடிவு வரை நீங்கள் இந்திய அளவில் - கேரளாவின் PSC பள்ளி பாடத்திட்டத்தில் தேடுங்கள் , அன்று வெளிவந்த அனைத்து பத்திரிகைகள் வரலாறுகள் என்று தேடி படிக்கவும், இந்திய அளவில் சிவில் சர்வீஸ் தேர்வு தயாராகும் மாணவர்களிடம் சென்று "வைக்கம் சத்தியாகிரக" பற்றி கேளுங்கள், இந்திய அளவில் NCERT பாடத்திட்டத்தில் தேடுங்கள் இந்த வரலாறு உண்மை முகம் தெரியும்.

கேரளாவில் வைக்கம் சென்று - அங்கே வைக்கம் வீரர் ஈவே ராமசாமி என்று கூறினால் சிரிக்க மட்டும் அல்ல உங்கள் முகத்தில் காரி உமிழ்வார்கள். ஏன் என்றால் இந்த வைக்கம் வீரர் கதை படிக்கும் ஒரே மாநிலம் தமிழ் நாடு தான். மாநில பாடத்திட்டம் தங்கள் கையில் இருப்பதால் திராவிட கழக ஆட்சியில் இந்த பொய்யான வரலாறு பள்ளிகளில் சேர்க்கபட்டு , மாணவர்களுக்கு தேர்வில் வருடம் வருடம் கேட்கப்படும் முக்கியமான கேள்வியாக கேட்க பட்டு வம்படியாக திணிக்கபட்ட ஒரு பொய்யான வரலாறு.


T. K. Madhavan
இது சத்தியம். ஏன் என்றால் இந்த மொத்த போராட்டத்தை வடிவமைத்தவர் TK மாதவன், K வேலப்பன்.வைக்கம் போராட்டம் உருவாக ஆதரவு திராட்டிய TK மாதவன் அதற்காக குறைந்தது 3வருடம் மேலாக அனைவரையும் ஒன்றினைத்தார் என்று வரலாறு கூறுகிறது.

தீண்டாமை ஒழிப்புக்கு உருவாக்கபட்டு இந்த வைக்கம் போராட்டம் உருவாக உருவாக்கபட்ட போராட்ட அமைப்பில் உழைத்தவர்கள்
நீலகண்ட நம்பூதிரி, கிருஷ்ணசாமி அய்யர், K வேலாயுதமேனன். இவங்க தான் முதலில் ஒடுக்கபட்ட மக்கள் நுழைய கூடாது என்று கூறும் அனைத்து இடங்களிலும் நுழைவோம் என்று அனைத்து கட்டுபாடுகளும் மீறுவோம் என்று அறிவித்தவர்கள்.

இந்த வைக்கம் போராட்டத்தில் தினமும் அந்த கோவில் சாலையில் ஒரு குழு நுழைவது - கைதாவது என்று அமைதியான வழியில் போராட்டம் ஆரம்பம் ஆனது. ஏறக்குறைய ஒரு வருடம் தொடர்ந்து விடாபிடியாக நடந்த போராட்டம் இது.

1924, மார்ச் மாதம் கொச்சாப்பி, பாகுலேயன், கோவிந்தப்பணிக்கர் இந்த மூவரும் முதலில் கைதானவர்கள். இதில் பாகுலேயன் என்பவர் நாயர் சமூகத்தை சார்ந்தவர். இவருக்கு அந்த சாலையில் செல்ல எந்த தடையும் இல்லை. ஆனால் இவர் மற்றவர்கள் கூட்டிக்கொண்டு செல்வேன் இல்லை கைதாவேன் என்றாதால் சிறை சென்றார்.

இப்படி தினமும் கூட்டம் கூட்டமாக காங்கிரஸ் தொண்டர்கள் கலந்து கொண்டு கைதானார்கள். அதில் அனைத்து பக்கம் இருந்தும் ஆதரவு தேடினர். அதில் பின்னாளில் வந்து கலந்து கொண்டவர் தான் ஈவே ராமசாமி. இவருடைய பங்களிப்பு என்று பெரிதாக எதுவும் கிடையாது. கைதாகும் குழுவில் இவரும் இருந்தார்.

மிக முக்கியம் ஈவே ராமசாமி இந்த போராட்டத்தில் காங்கிரஸ் காரராக தான் கலந்து கொண்டார். காங்கிரஸ் அழைப்பின் பேரில். அந்த நேரத்தில் இவர் பெரிய பிரபலமானவரும் அல்ல. ஏன் கூறுகிறேன் என்றால் இதை தங்கள் போராட்டம் போல வாய்கிழிய மேடைகளில் பேசி பொய் பரப்பும் இந்த பெரியார் இயக்கம் அதாவது திராவிட கழகம் வந்தது 1944ல்.

வைக்க போராட்டம் வெற்றிபெற காரணம் முழுக்க முழுக்க நாராயண குரு அவர்களின் இயக்கமும் - TK மாதவன் , K வேலப்பன் போராட்டமும் - காந்தி அவர்களின் முயற்சியும் தான் காரணமே தவிர வேறு யாரும் இல்லை. போராட்டத்தில் கலந்து கொண்ட அனைத்து காங்கிரஸ்காரர்களுக்கும் இது பெருமை தரும் விசயமே. மாற்று கருத்து இல்லை. ஆனால் எவனாது நான் தான் காரணம் நான் தான் காரணம் என்று கூறினாரா??? இல்லை. ஆனால் இந்த கேடு கேட்ட பெரியார் இயக்கம் மட்டும் வெக்கமே இல்லாமல் நாங்க தான் நடத்தினோம் என்று இன்னொருவர் நடத்தி வெற்றி பெற்ற போராட்டத்தின் வரலாற்றில் தங்கள் Label ஓட்டும் வேலையை செய்வதுக்கு இவர்களுக்கு வெக்கம் வேண்டாமா?

ஆனால் தமிழ் நாட்டில் முக்கியமாக state board படிக்கும் மாணவர்கள் என்ன சொல்லி கொடுக்கபடுகிறது????

இப்படி தவறான வரலாற்றை திரித்து - மாணவர்களை படிக்க வைத்து - ஊர் ஊருக்கு பெரியார் பஸ் நிலையம் என்று பெயர் வச்சு , சிலையை நட்டு வச்சு தான் இந்த பெரியார் தலித் மக்கள் பிரதிநிதி போல உருவகம் செய்யபட்டார் தவிர உண்மை கிடையாது.

இதை நான் உங்கள் தேடளுக்கே விட்டு விடுகிறேன்.

மாணவர்களுக்கு கல்வி கொடுக்கும் முயற்சியில் இலவச உணவு கொடுத்து மாணவர்களை கல்விநிலையங்களுக்கு வரவைத்து படிக்க வச்சு - அவர்களை இலவச மதிய உணவு திட்டத்தில் ஒன்றாக உக்கார வச்சு ஜாதியை ஒழித்து சமபந்தி நடத்தி காட்டி புத்திசாலித்தனமாக மக்களை இணைத்தவர் காமராஜர் தானே தவிர இந்த திராவிட கூட்டம் அல்ல.

1924ல் TK மாதவன் , கேலப்பன் , கிருஷ்ணய்யர் , நாராயண குரு என்று முன்வைத்த வைக்கம் ;
1927ல் அம்பேத்கார் முன்வைத்த சவ்தார் குளத்தில் தலித் மக்கள் தண்ணீர் எடுக்கும் போராட்டம் ;

இது போல ஒன்றை இங்கே பெரியார் என்ற ஈவே ராமசாமி நடத்தினார் என்று நாட்டை உழுக்கும் அளவுக்கு நடத்தினார் என்று சொல்லுங்கள் ? எனக்கு தெரிந்து தாலி அறுப்பது , சும்மா போற பிராமணனை பிடிச்சு அடிப்பது பூணல் அறுப்பது , பிள்ளையார் சிலையை மிதிப்பது , சரஸ்வதி கடவுள் சேலையை வைத்து வக்கிரமாக பேசுவது இது தான் இவர்களின் சீர்திருத்த பகுத்தறிவு போராட்டங்கள்.

இன்னும் சொல்வதானல் 1995ல் கூட அதாவது பாருங்க திராவிட ஆட்சியர்கள் ஆண்ட 45வருடம் தாண்டியும் கூட இங்கே தீண்டாமை அப்படியே தான் இருந்தது. இல்லையே என்று எவனாது சொல்வானா???

{wikipediaல் சமிபத்தில் ஒரு 3ஆண்டுகள் முன் தான் periyar movement என்று vaikom satyagraha என்ற தலைப்பில் கீழ் சேர்த்துவிட்டனர் இந்த வெக்கங்கெட்ட கூட்டம். இது யார்? புதிதாக ?என்று எல்லோருமே கேட்டுக்கொண்ட நேரம். இன்றுவரை அதை நீக்கினால் சேர்பதற்கு என்று ஒரு டீம் வச்சு வேலை செய்கிறார்கள் பெரியார் பகுத்தறிவு கூட்டங்கள். அந்த அளவு வைக்கம் உண்மை எங்கே தெரிந்து விடுமோ என்று பயந்து திரிகிறது இந்த கூட்டம். விக்கிபிடியவில் அந்த periyaar movement பதிவை அப்போ அப்போ நீக்குவது யார் என்று சிலர் கேட்பது புரிகிறது. அது அடியேன் மாரிதாஸ் தான். ஆனால் முழுமையாக நீக்க முடிவது இல்லை. நானும் சரி போறானுக ,கேவலமா விளம்பரம் தேடும் அவனு புத்தி திருந்தாது என்று விட்டுவிட்டேன்.}

--------------------------------------------------------

எனவே இப்படி தமிழ் மொழிக்கோ , தமிழ் மக்களின் வாழ்க்கை தரத்துக்கோ , தலித் மக்கள் வாழ்வுக்கோ காரணமே இல்லாத ஈவே ராமசாமியை வச்சு "இது பெரியார் மண் என்று கூறினால்" கேட்கும் நீங்கள் என்ன முட்டாளா? என்று நான் கேப்பேன். நீதிகட்சியோட ஜமிந்தார்கள் சொத்து 1லட்சம் கோடி சொத்து இருக்கு , அத வச்சுட்டு என்ன செய்வனுக எதையாது கத்திகிட்டு திரியுறானுக அவ்வளவு தான்.

"பெரியார் மண் என்று கற்பித்தவன் முட்டாள் ;
பெரியார் மண் என்று பரப்புபவன் அயோக்கியன்;
பெரியார் மண் என்று நம்புபவன் ஒரு வரலாறு தெரியாத வெகுலி".

-மாரிதாஸ்

Keerthivasan

About Keerthivasan -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :