Wednesday, September 27, 2017

Keerthivasan

பார்த்தேன் அதிர்ந்தேன் பகிர்கிறேன்...


பார்த்தேன் அதிர்ந்தேன் பகிர்கிறேன்...
(அனைவரும் பார்த்து பகிர வேண்டும் என்பது என் வேண்டுகோள்.)



பொன்னுலகம் கனவுகள் பயங்கரமானவை. அங்கு பாலாறுகள் ஒடுவவதில்லை. இவர்கள் சதா சர்வ காலமும் கத்தும் மனித உரிமைகள் துளியும் இல்லை, தனி மனித சுதந்திரம் ஏட்டளவில் கூட அனுமதியில்லை. அது சைனாவோ வடக் கொரியாவோ எங்கு எல்லாம் கம்யூனிசம் இருக்கிறது அங்கு எல்லாம் அந்த நாட்டின் மக்கள் உயிரை கையில் பிடித்துதான் வாழ வேண்டும்...

கொட்டம் பட்டியை தாண்டாத அல்லது மார்க்ஸ், பிடல், ஸ்டாலின் என்ற பேய்களின் திரித்த் பொன்னுலக கனவு புத்தகங்களை அரைகுறையாக படித்த ஜந்துக்கள் தென் கொரியாவின் கிம் என்ற ராட்சசனை புகழ்வதை நான் பார்க்கவும் நேர்ந்தது.

உண்மையில் வடகொரியா என்பது இஸ்லாமிய ஜிஹாதிகள் போன்ற ஒரு மோசமான நாடு... இதை பற்றி அந்த நாட்டிலிருந்து தப்பித்த ஒரு சிறுமியின் விடியோ வாக்குமூலத்தை தமிழில் பதிகிறேன். நானே நேரடியாக சந்திக்க நேரிட்ட ஒன்றிணைந்த கொரியாவை விரும்பும் தென் கொரிய பிரஜையின் தகவல்களை அடுத்த பதிவுகளில் கொடுக்க முயல்கிறேன்...

இனி விடியோவின் தமிழாக்கம்...

இதை நான் சொல்லியே ஆக வேண்டும், இது நான் பேசுவது என்று மட்டும் ஆகாது எங்களது மக்கள் உலகிற்கு சொல்ல விரும்பும் செய்தியாக இது இருக்க வேண்டும்.

வடகொரியா உங்கள் கற்பனைக்கு எட்டாத நிலையில் இருக்கும் ஒரு நாடு.

அங்கு ஒரே ஒரு தொலைக்காட்சி சேனல் மட்டுமே உண்டு. அங்கு மக்கள் பயன்பாட்டிற்கு இணைய சேவையே கிடையாது.

எங்களுக்கு பிடித்த பாடலை பாடவோ, பிடித்த உடையை உடுத்தவோ அல்லது பேச்சுரிமையோ கிடையாது.

அனுமதியில்லாமல் வெளிநாடிற்கு தொலைபேசியில் பேசியவர்களுக்கு உலகத்திலேயே மரண தண்டனை கொடுக்கும் நாடு வடகொரியாதான்.

வடகொரியர்கள் இன்று தீவிரவாதப்பிடியில் இருக்கிறார்கள். நான் வடகொரியாவில் வளர்ந்த பொழுது ஆணுக்கும் பெண்ணுக்குமான காதல் கதைகளை கேட்டதோ, படித்ததோ, பார்த்ததோ இல்லை. ஒரு திரைப்படம் கூட இதை பற்றி இருந்ததில்லை.

புத்தகங்கள், திரைப்படங்கள், பாடல்கள் என எல்லாமே கிம் சர்வாதிகாரத்தை ஏற்க வைக்கும் மூளை சளவை மட்டுமே...

நான் பிறந்தது 1993ல்... சுதந்திரம், மனித உரிமை போன்ற வார்த்தைகளை நான் கேள்விப்படும் முன்னமே நான் கடத்தப்பட்டேன்...

வடகொரிய மக்கள் அனைவருக்கும் இதில் இருந்து சுதந்திரம் வேண்டும். அதற்காக மக்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

எனக்கு ஒன்பது வயது இருக்கும் பொழுது என் கண் முன்னே பொது மக்கள் முன்னிலையில் என் தோழியின் அம்மாவை கொன்றார்கள். அவர் செய்த குற்றம் என்ன தெரியுமா? ஹாலிவுட்டில் தயாரான ஒரு திரைப்படத்தை பார்ததுதான்...

சைனாவிற்கு தப்பி ஓடியபின் என் அப்பா உயிரழந்தார். உயிரழந்த அவரின் உடலை யாருக்கும் தெரியாமல் விடியற்காலை 3 மணிக்கு புதைக்க வேண்டிய சூழல். அப்பொழுது எனக்கு வயது 14. எனக்கு அழ கூட முடியவில்லை காரணம் எங்கே நம்மை திரும்பவும் வடகொரியாவிற்கு அனுப்பிவிடுவார்களோ என்ற அச்சம்...

நான் வடகொரியாவை விட்டு தப்பிய நாளில் என் கண் முன்னே என் தாய் கற்பழிக்கப்பட்டார். இதை செய்தது ஒரு சைனா புரோக்கர். அவனின் குறி உண்மையில் நானாக இருந்தேன் அப்பொழுது எனக்கு 13 வயது.

வடகொரியாவில் ஒரு சொல்லாடல் உண்டு...
"Women are weak,
But Mothers are Strong!"

தன்னை கற்பழிக்க அனுமதித்து என்னை காப்பாற்றினார் என் தாய்...

சைனாவில் 3,00,000 வடகொரிய அகதிகள் இருக்கிறார்கள் இதில் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் 70% பெண்களும், பருவமடைந்த பெண்களும் அங்கு $200 டாலருக்கு விற்பனை செய்யப்படுகிறார்கள்.

உயிரை கையில் பிடித்துக் கொண்டு திசைகாட்டியை வைத்துக் கொண்டு கோபி பாலைவனத்தை கடந்து மங்கோலியா செல்ல ஆயுத்தம் ஆனோம்...

கையில் இருக்கும் திசைக்காட்டி வேலை செய்யாமல் போனால் எங்கள் சுதந்திரத்திற்காக நட்சத்திரங்களை நம்பி சென்றோம். இந்த உலகில் நட்சத்திராங்கள் மட்டுமே எங்களுக்கு உதவுவதாக நான் நினைத்ததுண்டு...

மங்கோலியா எங்களது சுதந்திரத்திற்கு வித்திட்டது. மரணம் அல்லது சுந்திர வாழ்க்கை...

கையில் கத்தியை வைத்துக் கொண்டு மீண்டும் எங்களை வடக்கொரியா அனுப்பி வைக்க முடிவு செய்தால் எங்களை நாங்களே மாய்த்துக் கொள்ள தயாரானோம்...

நாங்கள் மனிதர்களாக வாழ மட்டுமே ஆசைப்படுகிறோம்...

இதற்கு மேல் பதிந்தால் படிக்க முடியாது...
என் வலைதளத்தில் இதோடு அந்த பெண் பேசிய விடியோவையும் பதிக்கிறேன்...

Keerthivasan

About Keerthivasan -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :