Tuesday, January 2, 2018

Keerthivasan

மகாபாரதம் பேசுகிறது - என் பார்வை - 01


தொடங்கும் முன்

சிறு வயது முதல் சோவின் எழுத்துக்களால் கவர்ந்து இழுக்கப்பட்ட பலரில் நானும் ஒருவன். அவர் கைவண்ணத்தில் உருவான மகாபாரதம் பேசுகிறது என்ற நூலை சில வருடங்கள் முன்பு வாசிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இவ்வளவு எளிமையாக சொல்ல முடியுமா என்று நினைத்து நான் அதிசயத்த ஒரு புத்தகம் அது.

புத்தகத்தின் ஆரம்பத்திலேயே வாத பிரதிவாதங்கள் எப்படி எல்லாம் இருக்குமோ அதற்கு எல்லாம் பதில் கொடுத்துவிட்டு ஆரம்பித்திருப்பது இந்த புத்தகத்தின் நடுநிலைத்தன்மையை எடுத்துரைக்கும்.

மொத்த புத்தகத்தையும் உங்களோடு பகிர முடியாது என்றாலும் நான் படித்து ரசித்த பலவற்றை இன்று முதல் மகாபாரதம் பேசுகிறது என்ற தலைப்பிலேயே பகிர நினைக்கிறேன்.

ஒருமுறை படித்து அதை நியாபகப்படுத்தி எழுதும் திறனெல்லாம் எனக்கில்லை என்பதால் புத்தகத்தை வாங்கி ஒரு REFERENCEஆகா வைத்து என் எண்ணங்களையும் அதில் சேர்த்து பகிர நினைக்கிறேன்.

வியாச பாரதம் இந்த நூலுக்கு அடிப்படை அது போல என் இந்த தொடர் பதிவுக்கு மகாபாரதம் பேசுகிறது அடிப்படை அவ்வளவே.

இனி கொஞ்சம் கொஞ்சமாக பார்ப்போம். இந்த புத்தகத்தின் சிறப்பு அம்சமான சோவின் அறிமுக உரைநடையை அப்படியே தருகிறேன். அவரை போல சுவாரஸ்யமாக என்னால் கொடுக்க முடியுமா என தெரியாத காரணத்தால் அதில் பெரிய மாற்றம் இல்லாமல் (சில இடங்களில் மட்டும்) உங்களோடு பகிர்கிறேன்.

வியாசரையும் வணங்கி இந்த பதிவை தொடங்குகிறேன். இதை விடாமல் எழுதும் சூழலை அந்த வியாசரும் அவருக்கு உதவிய விநாயக பெருமானும் எனக்கு அருள வேண்டும்.

அன்புடன் கீர்த்தி...

Keerthivasan

About Keerthivasan -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :