Wednesday, April 10, 2019

Keerthivasan

National Herald - புரட்சிகரமான நமக்கு நாமே திட்டம்


https://cdn-live.theprint.in/wp-content/uploads/2018/09/2018_9img22_Sep_2018_PTI9_22_2018_000067B-e1544532517456-696x437.jpg

National Herald விவகாரத்தில்..வரி ஏய்ப்பு என்று 100 கோடி ரூபாய் அபராதம் கட்டுமாறு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது. இதை எதிர்த்து .. நீதிமன்றத்திலும் வழக்கு நடக்கிறது. 'வழக்கம் போல' ப.சி.யும் வாதாடினார். இவ்வழக்கில் சோனியா& ராகுலுக்கு ஜாமீன் கொடுக்கப் பட்டிருக்கிறது.

இந்த National Herald விவாகரம் தான் என்ன ? நீதிமன்ற வழக்கின் அடிப்படைகள் /விபரங்கள் தான் என்னென்ன ? என்று பார்க்கலாம்.

National Herald என்கிற செய்தித்தாள் 1930 களில் நேருவால் தொடங்கப்பட்டது.

ஆனால்..2000-ம் வருடம், 90 கோடி ரூபாய் கடனுடன் படு நஷ்டமடைந்து விட்டதாக அறிவிக்கப் பட்டது. அப்போது அதன் அசையும் சொத்து-அசையா சொத்து உட்பட மொத்த சொத்து மதிப்பு 5000 கோடி ! நஷ்டத்தை முன்னிட்டு ..இதன் இயக்குனர்களான சோனியா, ராகுல், மோதிலால் வோஹ்ரா மூவரும் National Herald-ஐ ..Young India Ltd-க்கு விற்க முடிவு செய்கிறார்கள்.

National Herald-ன் 90 கோடி கடனை அடைப்பதாகவும், பதிலாக அதன் 5000 கோடி சொத்து மதிப்பை ..Young India Ltd பெறுவதாகவும் ஏற்பாடு.

வேடிக்கை என்னவென்றால்..Young India-ன் இயக்குனர்களாக இருப்பவர்களும் அதே சோனியா, ராகுல், மோதிலால் வோஹ்ரா, ஆஸ்கார் பெர்னாண்டஸ் ஆகியோர் தான் ! Young India Ltd-ல் சோனியா-ராகுலுக்கு 36 % பங்கு உரிமை. மீதமுள்ள பங்கு உரிமை ..வோரா-ஆஸ்கார் பெர்னாண்டஸ்
உடையது.

இதற்காக ...National Herald-ன் இயக்குனரான மோதிலால் வோரா ...Young India-ன் இயக்குனரான மோதிலால் வோராவுடன்..அதாவது தன்னுடன் தானே பேச்சு வார்த்தை நடத்துகிறார் ! :D

இதில் இன்னொரு சுவாரசியம் நடக்கிறது.

Natuonal Herald-ன் 90 கோடி கடனை அடைப்பதாக ஏற்றுக் கொண்ட Young India , காங்கிரஸ் கட்சியிடம் 90 கோடியை கடனாக கேட்கிறது. உடனே இது குறித்து பரிசீலிப்பதற்கு காங்கிரஸ் கட்சியின் தலைவர், துணை தலைவர், பொது செயலாளர், பொருளாளர் ஆகியோர் கூடி பேசுகிறார்கள். இவர்களெல்லாம் யார் ? அதே சோனியா, ராகுல், ஆஸ்கார் பெர்னாண்டஸ், மோதிலால் வோரா !

காங்கிரஸ் 90 கோடி ரூபாய் கடன் கொடுக்க அதன் பொருளாளர் மோதிலால் வோரா அனுமதி கொடுக்ககிறார். இது...நமக்கு நாமே -1

அதே மோதிலால் வோரா ..Young India -ன் இயக்குனராக 90 கோடி ரூபாயை கடனாக வாங்கிக் கொள்கிறார்.

அதாவது ..தானே கொடுத்து.. தானே பெற்றுக் கொள்கிறார்! :D

இது...நமக்கு நாமே - 2

அதே மோதிலால் வோரா..National Herald-ன் இயக்குனராக ..90 கோடி ரூபாயை பெற்றுக் கொண்டு..5000 கோடி சொத்துக்களை young India Ltd-க்கு தாரை வார்க்கிறார். அனைத்தையும் ஒரே நபர் செய்கிறார்!

இது...நமக்கு நாமே - 3

இதோடு முடியவில்லை ஊழல் வேடிக்கை.

மறுநாள்..காங்கிரஸ் கட்சியின் உயர் பொறுப்பாளர்களான ..சோனியா, ராகுல், மோதிலால் வோரா, ஆஸ்கார் பெர்னாண்டஸ் ஆகியோர் கூடி..நாட்டின் விடுதலைக்கு National Herald அளித்திருக்கும் பங்களிப்பை பாராட்டி.. அதன் கடனை அடைப்பதற்காக Young India ltd வாங்கிய 90 கோடி ரூபாய் கடனை திரும்ப செலுத்தவேண்டாம் என்று தீர்மானம் போடுகிறார்கள்!

ஆக...National Herald, Young India Ltd காட்டாற்று வெள்ளத்தில்.. கட்சி பணமான 90 கோடி ரூபாயும் சேர்ந்து அடித்துக் கொண்டு சென்றது!

இது...நமக்கு நாமே-4

இதில்..National Herald- ன் 5000 கோடி ரூபாய் மதிப்புள்ள அசையும்-அசையா சொத்துக்களில்..டெல்லி பகதூர் ஷா ஜாபர் மார்க் -ல் உள்ள 11 மாடி அடுக்குமாடி கட்டடமும் அடக்கம். இதில் தான், பாஸ்போர்ட் அலுவலகம் உட்பட பல அலுவலங்கங்கள் வாடகைக்கு இயங்குகின்றன.

இத்தகைய நிலையில்..ராகுல்...''எந்த அடிப்படை நேர்மையில்'' .. விவாதம் பற்றியெல்லாம் பேசிக் கொண்டிருக்கிறார் ????????!!!

இந்தக் கூட்டணி தனக்கு தானே சூட்டிக் கொண்ட பெயர் தான் முற்போக்கு கூட்டணி !! :D

இது நமக்கு நாமே -5

- பானு கோம்ஸ் பேஸ்புக் பதிவில் இருந்து...

Keerthivasan

About Keerthivasan -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :