Wednesday, October 16, 2013

Keerthivasan

மோடியின் நாமா... (1)

மோடியின் நாமா...
ஆக்கம்: மது பூர்ணிமா கிஷ்வார்
http://en.wikipedia.org/wiki/Madhu_Kishwar

மொழி பெயர்ப்பு: கீர்த்திவாசன்

தொடங்கும் முன்: என் சிற்றறிவுக்கு எட்டியவரை இதை மொழியாக்கம் செய்துள்ளேன். தவறுகள் சுட்டி காட்டினால் திருத்தப்படும். இது ஒரு ஆய்வுக் கட்டுரையாக ஆங்கிலத்தில் வந்தது. இதில் வரும் அனைத்தும் இதை எழுதிய எழுத்தாளரின் படைப்பு மட்டுமே. அனைவருக்கும் இது சேர வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த மொழி பெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது. இங்கு நான் என்று குறிப்பிடுவது இந்த கட்டுரை எழுதுபவரையே குறிக்கும். உங்களின் மேலான கருத்துக்கள் வரவேற்க்கப்படுகிறது. உங்களின் கருத்துக்களே ஊக்கமளிக்கும் என்பதை இங்கு நான் தெரிவித்துக் கொள்கிறேன்.
- கீர்த்திவாசன்...

நரேந்திர மோடி குஜராத் முஸ்லிம்கள் மற்றும் கிருஸ்த்துவர்கள் பார்வையில்... (1)

பிப்ரவரி 2002ல் அனைவரின் கவனமும் குஜராத் கலவரத்தின் மீது இருந்த சமயம். தேசிய ஊடகங்களின் மற்றும் என்னுடய சக நண்பர்களின் தவல்களால் மோதிதான் இதற்க்கு காரணமாக இருந்திருக்க வேண்டும் என்று நினைத்த பலரில் நானும் ஒருவன் ஆதலால், நானும் பல நேரங்களில் மோதிக்கு எதிரான மனுக்களில் கையெழுத்து வாங்க உதவிகள் செய்திருக்கிறேன். பாதிக்கப்பட்டவர்களுக்கு நன்கொடை வசூலித்து தந்திருக்கிறேன் ஆனால், அதை பற்றி விரிவாக என் சொந்த கருத்துக்களை நான் எழுதியதில்லை காரணம் குஜராத்தில் என்ன நடந்தது என்று என்னால் நேரில் சென்று விசாரிக்க முடியாத நிலையில் நான் இருந்ததே காரணம். என்னோடய பழைய அனுபவங்களில் இது போன்ற கலவர நிகழ்வுகள் ஊடகங்களின் வாயிலாக சரிவர உண்மையை அறிந்துக் கொள்ள முடியாது என்ற படிப்பினையை நான் உணர்ந்திருந்தேன் அது காஷ்மீர் கலவரமோ அல்லது பஞ்சாப் கலவரமோ அதை எழுதும் எழுத்தாளரின் IdeIdeological மட்டுமே முதன்மையாக பளிச்சிடும் அதை ஒட்டியே அச்செய்தி இருக்கும் என்பதை என் படிப்பினை எனக்கு கற்றுகொடுத்த காரணத்தினாலும், குஜராத் கலவரம் பற்றி நான் என் கருத்துக்களை சொல்வதை தவிர்த்தேன்.o

1984 சீக்கியர்கள் படுகொலை, தொடர் மீரட் கலவரங்கள், 1980ல் மல்லியானா, 1993 மும்பாய் (அன்றைய பம்பாய்), 1989ல் ஜம்மு போன்ற மிக பெரிய கலவரங்களை மட்டுமல்லாது பிஹார்ஷரிஃப், பிவாண்டி, ஜம்ஷெத்பூர் மற்றும் தொடர் கலவரங்களான அஹமதாபாத், சூரத் (மோடி பதவிக்கு முன்) ஆகிய கலவரங்களை ஆராய்ந்த அனுபவங்கள் எனக்கு உண்டு. தில்லியில் 1984ம் ஆண்டு நடந்ததை தவிர்த்து மீதம் உள்ள அனைத்திற்க்கும் காங்கரஸ் மற்றும் பி ஜே பியின் பங்கு அதில் இருந்திருக்கிறது. பாபர் மசூதி இடிப்பில் வந்த கலவரத்திற்க்கு பி ஜே பியின் பங்குக்கு இணையான பங்கு காங்கரஸுக்கு உண்டு என்பதை என் பல விசாரனைக்கு பின் நான் அறிந்தேன்.

காங்கரஸ் கட்சியின் மிக பெரிய பலம் அது மஹாத்மா காந்தி அவர்களால் முன் மொழியப்பட்ட ஒரு இயக்கம் என்பதே. இந்த ஒரு பார்வையே பாரதத்தின் மூளை முடுக்கெல்லாம் அனைவரும் அந்த இயக்கத்தை பற்றி அறிய செய்தது. படித்த மற்றும் கலவரத்தை நன்குணர்ந்த குஜராத்திகள் என்னிடம் சொன்னது கலவரத்தின் போது சில காங்கரஸ்காரர்களும் கலவரக்காரர்களோடு இணைந்து செயல்பட்டார்கள் என்பதே. அதோடு அதற்க்கு பிறகு கலவரத்தை விசாரித்த அறிக்கையிலும் குறிப்பிட்டுள்ள மற்றொரு விடயம். முஸ்லீம்களும் பலர் ஹிந்துக்களை தாக்கினார்கள் என்பது இதனால் பல ஹிந்துக்களும் அகதிகள் முகாமில் தஞ்சமடைந்தார்கள் என்பது.
ஆதலால் பி ஜே பியையும் குறிப்பாக மோடியையும் குறிவைத்து ஒரு கலவரத்திற்க்கு காரணமாக சொல்லப்படுவது இதுவரை சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் யாருக்கும் நடக்காத ஒன்று என்று சொன்னால் அது மிகையல்ல. இந்த சூழல் மோடிக்கு எதிராகவும் அவரை வெறுக்கும் நிலைக்கும் சாதாரண மக்களை கொண்டு சென்றது. பல வருடங்களாக NGOs, சமூக சேவகர்கள், பத்திரிக்கையாளர்கள், படித்தவர்கள் என்று அனைத்து தரப்பிலும் இந்த எண்ணங்கள் அவரை அழிக்க பயன்படுத்தப்பட்டு வருகிறது. சிலர் இந்த பொய் பிராச்சரத்திற்க்கு மிக பெரிய பொருளாதர உதவிகளை காங்கரஸிடம் இருந்து பெற்றுள்ளனர்.

1984 சீக்கியர்கள் கலவரத்தில் வட இந்தியாவில் தவரு செய்த்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்று உரக்க குரல் கொடுக்கப்பட்டது. இதில் பிரதம மந்திரி திரு. ராஜிவ் காந்தி, உள் துறை அமைச்சர் திரு. நரசிம்ம ராவ், தில்லி கவர்னர் P. G. காவாய் குற்றம் சாட்டப்பட்டார்கள் அனால் பிரதம மந்திரியோ அல்லது உள்துரை அமைச்சரோ அல்லது தில்லி கவர்னரோ தனி மனித குற்றச்சாட்டுக்கு ஆளாகவில்லை (அல்லது ஆக்கப்படவில்லை) ஆனால், 2002 குஜராத் கலவரத்தில் மட்டும் மொத்த குற்றச்சாட்டும் ஒரு தனி மனிதனின் பெயரில் சொல்லப்படுவது எவ்வளவு அபத்தம்?

மிக சமீபத்திய என்னுடன் ஒரு நேர்காணலில் திரைக்கதை எழுத்தாளர் திரு சலீம் கான் ஒரு அருமையான விவாதத்தை சொன்னார். “மும்பை கலவரம் நடந்தபோது அதுவும் 2002 குஜராத் கலவரத்தைவிட கொடுமையான கலவரம் நடந்தபோது மஹாராஸ்ட்டிராவின் முதலமைச்சர் யார் என்று யாருக்காவது நினைவிருக்கிறதா? உ. பி. யில் நடந்த மல்லியானா மற்றும் மீரத் கலவரத்தின் போது அதன் முதலமைச்சார் யாரென்று சொல்ல முடியுமா? அல்லது பகல்ப்பூர் அல்லது ஜம்ஷத்பூர் கலவரம் நடந்த போது அதுவும் காங்கரஸ் ஆட்சியில் பீஹாரின் முதலமைச்சர் யாரென்று சொல்ல முடியுமா? சுதந்திர இந்தியாவில் குஜராத்தில் நடந்த நூற்றுக்கும் மேற்பட்ட கலவரங்கள் நடந்தபோது யார் யார் ஆண்டார்கள் என்று சொல்ல முடியுமா? குஜராத்தில் நடந்த இந்த கலவரங்களில் சில மிகவும் மோசமான 2002 கலவரத்தை விட மிகவும் கொடுரமான கலவரங்கள். குஜராத்தை பொருத்தவரை மாதத்திற்க்கு இரண்டு கலவரங்களை சந்திக்கும் மாநிலம். தலைநகர் தில்லியில் நடந்த சீக்கியர்கள் கலவரத்தின் போது யாரின் கட்டுப்பாட்டில் தில்லியின் பாதுக்காப்பு பொருப்பு இருந்தது என்று யாராவது நினைவுக்கூற முடியுமா? எப்படி மோடியை மட்டும் 2002 கலவரத்தில் தனி மனிதனாக அனைத்து கொலைகளுக்கும் குற்றவாளியாக சொல்ல முடிகிறது?

ஏன் ஒரே ஒரு கலவரம் மட்டும் மீண்டும் மீண்டும் பேசப்படுகிறது? ஜூலை 2012 ல் நடந்த அஸ்ஸாம் கலவரத்தில் போடொக்களும், இஸ்லாமியர்களும் அவர்களின் உடமைகள் எரிக்கப்பட்டதால் சுமார் 400 கிராமங்களில் இருந்து 270 நிவாரண முகாம்களில் தஞ்சமடைந்தார்கள். 8 ஆகஸ்ட் 2012 நிலவரப்படி 400,000க்கும் மேலான மக்கள் இந்த முகாம்களில் தஞ்சமடைந்தார்கள். அஸ்ஸாம் முதல் மந்திரி தயாரக இருந்த ராணுவத்தினரை 4 நாட்கள் கடத்திதான் களத்தில் இறக்கினார். இன்னும் ஆயிரத்திற்க்கும் மேலானவர்கள் இந்த முகாமில்தான் இருக்கின்றனர் ஆனால் ஏன் இந்த கலவரத்தின் கோர முகத்தை நாம் மறந்தோம்?”

நான் ஒரு வினோதமான ஒரு நிகழ்வை கவனித்தேன் அதாவது மோடியை எதிர்க்கும் குழுவில் உள்ள இஸ்லாமியர்கள் குஜராத்வாசிகளே இல்லை என்பதுதான். எப்போதெல்லாம் குஜராத் முஸ்லீம்கள் இதற்க்கு நேர்மாறாக குரல் கொடுக்கிறார்களோ அப்போதெல்லாம் அவர்கள் தாக்கப்படுகிறார்கள் இதன் கடுமையால் பேசியவர் வாயடைத்து போகிறார். மிக உயர்ந்த நிலையில் மதிக்கத்தக்க மனிதராக இஸ்லாமியர்களால் போற்றப்பட்ட திரு. மௌலானா வாஸ்தன்வி தான் வகித்து வந்த தியொபந்தின் Vice Chancellor பதவியிலிருந்து கட்டாயமாக விலக்கப்பட்டார். அவர் சொன்னது இதுதான் “குஜராத் இஸ்லாமியர்களும் மோடி அரசின் வளர்ச்சி கொள்கைகளினால் பயனடைகிறார்கள்” ஷாஹாத் ஷித்திக், “டெய்லி உருது” என்கிற தினப் பத்திரிக்கையின் ஆசிரியர் தொடர்ச்சியாக தாக்கப்பட்டு இன்று அவர் மோடிக்கு எதிரான நடவடிக்கையில் தொலைக்காட்சியில் இருக்கிறார்! அவர் செய்த குற்றம் மோடி தன் அரசு எடுத்த நடவடிக்கைகளில் தவறில்லை என்று சொன்ன பேட்டியை அவர் பிரசுரித்தது.

இன்றய அரசியலை மோடி பயம் ஆட்டிவைக்கிறது. நல்ல சாலை வசதிகள், 24 மணிநேர மின்சாரம், சிறந்த ஆளுமை போன்றவற்றை நீங்கள் எடுத்துரைத்தாலும். நீங்கள் பாசிச கொள்கையாளர் என்று முத்திரை குத்தப்படுவீர்கள். இன்றய அரசியலில் காஷ்மீர் பிரிவினைவாதிகலுக்காகவும், பாகிஸ்தான் பல தீவிரவாதிகளை உள்ளே அனுப்பினாலும் அதனுடன் நட்பு பாரட்டவும், மாவோயிஸ்ட்டுகளை வருமையின் பிடியில் விளைந்தது என்று காரணங்களை அடுக்கவும் செய்யாமல் ஒரு நல்ல அரசைப் பற்றி ஒரு வார்த்தை பாராட்டிவிட்டால் அரசியலில் நீங்கள் தீண்டதகாதவர் என்ற முத்திரை குத்தப்படுவீர்கள். அதொடு நீங்கள் ஒரு பாசிச வெறியர் என்ற வர்ணம் பூசப்படுவீர்கள்.
 
என் தேடல்கள் தொடரும்...

Keerthivasan

About Keerthivasan -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :