Thursday, October 17, 2013

Keerthivasan

மகாகவி பாரதியாரின் கீதா உபதேசம் தெளிவுரை - 01

மகாகவி பாரதியாரின் கீதா உபதேசம் தெளிவுரை

மகாகவி பாரதியாரின் கீதா உபதேசம் தெளிவுரை உங்களுக்காக...

“மனிதனுக்குச் சொந்தமாக ஒரு செய்கையும் கிடையாது. செய்யுந் திறமையும் அவனுக்குக் கடவுள் ஏற்படுத்தவில்லை. கர்மப்பயனை அவன் எய்துவதுமில்லை. எல்லாம் இயற்கையின்படி நடக்கிறது.”
(கீதை 5-ஆம் அத்தியாயம். 14-ஆம் சுலோகம்.)
- எனவே. அவன் செய்கைகளில் எவ்வித பொறாமையும் சஞ்சலமும் எய்த வேண்டா. தன் செயல்களுக்கு இடையூறாக நிற்குமென்ற எண்ணத்தால். அவன் பிற உயிர்களுடன் முரண்படுதலும் வேண்டா.

”கல்வியும் விநயமுமுடைய அந்தணனிடத்திலும். மாட்டினிடத்திலும், யானையினிடத்திலும், நாயினிடத்திலும், அதையுண்ணும் சண்டாளனிடத்திலும் அறிஞர் சமமான பார்வையுடயோர்”
(5-ஆம் அத்தியாயம், 18-ஆம் சுலோகம்)
- எனவே, கண்ணபிரான் மனிதருக்குள் ஜாதி வேற்றுமையும், அறிவு வேற்றுமையும் பார்க்கக் கூடாதென்பது மட்டுமேயன்றி எல்லா உயிர்களுக்குள்ளேயும் எவ்வித வேற்றுமையும் பாராதிருத்தலே ஞானிகளுக்கு லக்ஷணமென்று சொல்லுகிறார்.
எல்லாம் கடவுள் மயம் அன்றோ? எவ்வுயிரிலும் விஷ்ணுதானே நிரம்பிருக்கிறான்? ‘ஸர்வமிதம் ப்ரஹமம். பாம்பும் நாராயணன், நரியும் நாராயணன். பார்ப்பனும் கடவுளின் ரூபம், பறையனும் கடவுளின் ரூபம்’.

இப்படியிருக்க ஒரு ஜந்து மற்றொரு ஜந்துவை எக்காரணம் பற்றியும் தாழ்வாக நினைத்தல் அஞ்ஞானத்துக்கு லக்ஷ்ணம். அவ்விதமான ஏற்றத்தாழ்வு பற்றிய நினைவுகளுடையோர் எக்காலத்தும் துக்கங்களிலிருந்து நிவர்தியடைய மாட்டார். வேற்றுமையுள்ள இடத்தில் பயமுண்டு, ஆபத்துண்டு, மரணமுண்டு. எல்லா வேற்றுமைகளும் நீங்கி நிற்பதே ஞானம். அதுவே முக்திக்கு வழி.

இனி அவரின் முன்னுரையுடன் அடுத்த பதிவில் மகாகவி பாரதியாரின் பகவத் கீதையின் தெளிவுரை தொடரும்...

சர்வம் கிருஷ்ணார்ப்பணம்

Keerthivasan

About Keerthivasan -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :