Thursday, November 28, 2013

Keerthivasan

காலம் என்பது மாயையா


காலம் என்பது மாயையா


காலம் என்பது ஒரு நிலையானது அல்ல, அது ஒப்பீடுகளால் அறியப்படுவது என்று பார்த்தோம் "Time is relative" என்றார் ஐன்ஸ்டியன். காலம் எப்படி மாறுபடும் என்று நீங்கள் கேட்கலாம். காலம் பார்ப்பவரின் அனுபவத்தை ஒத்து மாறுகிறது. 

முதலில் காலத்தை குறித்து விஞ்ஞானத்தின் விளக்கத்தை பார்ப்போம். காலம் வேகம் (Velocity) மற்றும் புவியீர்ப்பு விசையை (Gravity) ஒத்திருக்கிறது. உதாரணத்திற்கு புவியீர்ப்பு விசை எவ்வளுக்கு எவ்வளவு அதிகமாக உள்ளதோ, அவ்வளவுக்கு அவ்வளவு காலம் மெல்ல செல்கிறது. ஒரே உடல்நிலையை உடைய இரட்டையர்களில் ஒருவர் ஒரு மலை அடிவாரத்தில் இருக்கிறார் என்றும், மற்றவர் ஒரு மலை உச்சியில் இருக்கிறார் என்றும் வைத்துக் கொண்டால், அடிவாரத்தில் இருப்பவரின் வயதாகும் செயல்பாடு மற்றவரை விட மெல்லவே ஏற்படும் என்கிறது இந்த விதி.

இதை சோதனை செய்ய விஞ்ஞானிகள் அணு கடிகாரங்களை பயன்படுத்திப்பார்த்தார்கள். அணு கடிகாரங்கள் என்பவை மிக துள்ளியமானவை. அதிலும் சிசியம் அணுக்கள் மிக மிக துள்ளியமானவை. இவை அணுக்களுக்குள் ஏற்படும் நியூக்கிளியஸ் மற்றும் எலக்ட்ராண்களின் செயல்பாடுகளை கொண்டு காலத்தை கணிக்க உதவுபவை. இந்த அணு கடிகாரங்களை விண் வெளியில் அனுப்பி விஞ்ஞானிகள் பூமியில் உள்ள அதே அணு கடிகாரங்களுடன் ஒப்பிட்டு பார்த்து சோதனை நடத்தினர். அப்போது அவர்களுக்கு விண்வெளியில் சென்று

திரும்பிய அணுக்கடிகாரம் நேரத்தை சற்று குறைவாக காட்டியது தெரிந்தது. அது ராக்கெட்டில் மிக வேகமாக விண்வெளியில் சென்றதால் அதன் வேக வளர்ச்சியால் (acceleration) காலம் குறைகிறது என்பது தெரிந்தது. அதாவது வேக வளர்சியும், புவி ஈர்ப்பு விசைக்கு ஒப்பான ஒரு தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அதாவது எளிமையாக சொல்ல வேண்டும் என்றால், நீங்கள் எவ்வளவுக்கு எவ்வளவு வேகமாக செல்கிறீரோ அவ்வளவுக்கு அவ்வளவு காலத்தின் வேகம் குறைகிறது. நாம் ஒளியின் வேகத்தில் செல்ல முடிந்தால், காலம் நகராமல் நிற்கும் என்பது ஐன்ஸ்டியனின் விதி.

இப்போது காலம் என்பதை நாம் நம்முடைய உடல் மற்றும் அனுபவ‌ ரீதியாக பார்ப்போம். சுடும் நெருப்பில் நீங்கள் விரலை வைத்துப் பாருங்கள். ஒவ்வொரு நேனோ விநாடிகளை (விணாடியின் நூறு கோடியில் ஒரு பாகம்) நீங்கள் உணர்வீர்கள். அதாவது இரண்டு விநாடிகள் நீங்கள் நெருப்பில் விரலை வைத்திருந்தால் அந்த தருணத்தில் பெரிய கால அவகாசமாய் அது தெரியும். ஆனால் நாம் இன்பத்தில் இருக்கையிலோ காலம் மிக வேகமாய் செல்வதாக உணர்கிறோம். உங்களுக்கு பிடித்த நெருங்கிய உறவினர் வருகையில் அவர்களோடு நீங்கள் இருந்த காலம் மிக வேகமாக சென்றுவிடுவதை பார்க்கலாம். காதலன், காதலி இருக்கும் போது நேரம் வேகமாக ஓடி விடுவதையும், அவள் இல்லாது இருக்கையில் ஒவ்வொரு விநாடியும் நகராமல் இருப்பதாக சொல்வது நிதர்சண‌ம். ஆக காலம் என்பது மனதை ஒத்தது.

ஒரு மிகச்சிறந்த யோகி எப்போதும் கடந்து செல்லும் அந்த கணப் பொழுதில் மட்டுமே உணர்வோடு இருக்கிறார். கணப் பொழுது என்பது என்ன என்று நீங்கள் கேட்கலாம். அது உங்கள் விழிப்புணர்வு நிலையை பொறுத்தது. யோகிகளால் பிக்கோ விநாடிகளில் (pico second) [அதாவது ஒரு விநாடியை ட்ரில்லியனில் வகுத்தால் (1/10000000000000) ] கூட விழிப்புணர்வோடு இருக்க இயலும். உதாரணத்திற்கு கௌதம புத்தர் தன் உடலில் நடைப்பெறும் மிக நுண்ணிய மாற்றங்களை தெளிவாக எடுத்துரைத்தார். ஆக காலம் என்பதே ஒருவரின் விழிப்புணர்வு நிலையை பொறுத்ததுதான். சமாதி நிலையில் இருக்கும் ஒரு யோகிக்கு காலம் நகர்வது இல்லை.

நன்றி: Sarvam Krishnarpanam

Keerthivasan

About Keerthivasan -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :