Wednesday, November 20, 2013

Keerthivasan

சுவாமி ஐயப்பனின் திவ்ய கதை 3

முந்திய பகுதி: http://ypyk.blogspot.in/2013/11/hindhisumswamiaiyappanindivyakadhaigal2.html

 


மணிகண்டன் வரவை எதிர்பார்த்து இந்திரனும் தேவர்களும் , முனிவர்களும் பொன்னம்பல மேட்டில் காத்திருந்தனர்.தேவலோக மலர்களால் அய்யனின் திருவடிகளை அர்ச்சித்தனர்.கொடுமணம் படைத்த மகிஷியால் தேவர்கள் படும் துன்பத்தை எடுத்து உரைத்தனர்.தேவர்களை காத்திடுமாரும் வேண்டினர். மகிஷியிடம் இருந்து தேவர்களையும் , மக்களையும் காக்கும் பொருட்டு தேவலோகம் சென்றார் ஐயப்பன்.மகிஷியை தேவலோகத்திலிரிந்து பூமிக்கு தள்ள , அழுதா நதிக்கரையில் அவள் விழுந்தாள் சுவாமி ஐயப்பன் மகிஷி மீது நர்த்தனம் ஆடி அவளை வாதம் செய்தார். மகிஷி வாதத்தை மகாவிஷ்ணுவும் ,சிவனும் காளைகட்டி என்ற இடத்தில் இருந்து பார்த்தார்கள் ஹரிஹரசுதனின் ஸ்பரிசத்தால் மகிஷிக்கு சாப விமோசனம் ஏற்பட்டது.எருமை உருவம் நீங்கி அழகிய மங்கை வடிவம் பெற்றால். தன்னை மனிவியாக ஏற்றுக்கொள்ளுமாறு பிரமச்சாரியான அய்யபனிடம் மன்றாடினாள். ஐயப்பன் மறுத்தார். பிரம்மச்சரியத்தின் சிறப்பை எடுத்துரைத்தார். எந்த வருடம் சபரி மலைக்கு ஒரு கன்னி சாமி கூட வரவில்லையோ அன்று அவளது கோரிக்கையை பரிசளிபதாக சுவாமி ஐயப்பன் கூறினார். எனவே மகிஷி சபரிமலையில் மாளிகை புறத்து அம்மனாக, மஞ்சள் மாதாவாக கோவில் கொண்டு காத்திருக்கிறார்
மகிஷி வதத்தால் மன மகிழ்ந்து கூப்பிய கரத்துடன் நிற்கும் இந்திரனை நோக்கி சுவாமி ஐயப்பன் "தேவேந்திரா என் தாய் தலை வழியால் வருந்துகிறார்.அவரைக் குணபடுத்த புலிப்பால் வேண்டும். ஆவன செய்வாயாக "என்று கூறினார். தேவேந்திரன் ஆண் புலியாகவும் , தேவலோக பெண்கள் பெண் புலிகளாகவும் , தேவர்கள் புலி குட்டிகலாகவும் உருமாற மணிகண்டன் ஆண் புலி மீது அமர்ந்து பந்தள தேசம் திரும்பினார்.

மணிகண்டன் காட்டிற்கு சென்ற பின்னர் , பனிரெண்டு வருடங்களுக்கு முன் பம்பா நதிக்கரையில் பந்தள மன்னன் கண்ட அதே சன்னியாசி மன்னனை காண அரண்மனைக்கு வந்தார். மணிகண்டன் யார் என்ற விவரத்தை மன்னனுக்கு தெரிவித்தார். மந்திரியும் ராணியும் நடத்திய கபட நாடகத்தை பந்தள அரசன் அறிந்து கடும் சினம் கொண்டார். ஆயினும் தெய்வமே மகனாக வாய்த்த பேற்றை எண்ணி மனம் மகிழ்ந்தார். இதற்கிடையில் புலி கூட்டத்துடன் வந்த மணிகண்டனை பார்த்து மக்கள் பயந்து நடுங்கினர். மன்னன் மணிகண்டனை எதிர்கொண்டு வரவேற்றார். மந்திரியும், ராணியும் தவறை உணர்ந்து தங்களை மன்னிக்கும்படி மணிகண்டனிடம் கெஞ்சினர் . "எமது அவதார நோக்கத்தின் கருவிகளே நீங்கள் " என்று கூறி அவர்களை மணிகண்டன் தேற்றினார். மணிகண்டன் ஆணையிட்டதும் புலிக்கூட்டம் வனம் திரும்பியது.

தன் அவதார நோக்கம் நிறைவேறி விட்டதால் தனக்கு விடை தருமாறு தந்தையை ஐயப்பன் வேண்டினார்.தன் நாட்டிலேயே ஒரு திருக்கோவில் அமைத்து அங்கு இயன் மணிகண்டன் எழுந்தருள வேண்டும் என பந்தளராஜன் வேண்டினார்.

ஐயப்பன் தந்தையிடம் " நான் தொடுக்கும் அம்பு (சரம் ) எங்கு விழுகிறதோ அங்கு திருக்கோவிலை நிர்மாணம் செய்யுங்கள். என் பிரிவிற்கு வருந்த வேண்டாம் " என்று கூறினார்.

ஐயப்பனின் அம்பு தைத்த இடம் சரங்குத்தி ஆல் என்று அழைக்க படுகிறது.


தன் உருவச்சிலை எப்படி அமைய வேண்டும் என்று விளக்கும் வகையில் சுவாமி ஐயப்பன் பந்தள ராஜனுக்கு பொன்னம்பல மேட்டில் காட்சியளித்தார்.
முழங்காலுக்கும் இடுப்புக்கும் யோகா பட்டயம் அணிந்த நிலையில், ஒன்றுடன் ஒன்று இணைந்த திருவடிகளுடன் அமர்ந்த நிலையில் ,சின்முத்திரையுடன் கூடிய வலது கரத்துடனும் யோகா மூர்த்தியாக ஸ்வாமி ஐயப்பன் காட்சியளித்தார்.


சுவாமியே சரணம் ஐயப்பா !
சுவாமியே சரணம் ஐயப்பா !
சுவாமியே சரணம் ஐயப்பா
!

 
பரசுராமர் உதவியுடன் அவர் கைகளால் மூலவிக்ரகம் பிரதிஷ்டை செயப்பட்டது

பதினெட்டு படிகளிலும் பதினெட்டு தேவர்களை ஆவாஹனம்(எழுந்தருள ) செய்தார்

முக்தி தரும் தளங்களில் சபரிமலையும் ஒன்று

சுவாமியே சரணம் ஐயப்பா !
சுவாமியே சரணம் ஐயப்பா !
சுவாமியே சரணம் ஐயப்பா
!


தொகுப்பு: பாண்டிய மன்னன் 

Keerthivasan

About Keerthivasan -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :