Wednesday, November 20, 2013

Keerthivasan

சுவாமி ஐயப்பனின் திவ்ய கதை 2

முந்தைய பகுதி: http://ypyk.blogspot.in/2013/11/1.html

பந்தள நாட்டை பாண்டிய வம்சத்தில் தோன்றிய ராஜசேகர பாண்டியன் சிறப்பாக ஆண்டு வந்தார் , தனக்கு பின் நாட்டை ஆள வாரிசு இல்லையே என்ற கவலையில் அவர் மூழ்கி இருந்தார்.மன்னனும் , ராணியும் தங்களுக்கு ஆண் வாரிசு ஒன்று வேண்டுமென அனுதினமும் சிவா பெருமானை வழிபட்டனர்

அரசன் ராஜசேகர பாண்டியன் பம்பா நதி சார்ந்த வனபகுதியில் வேட்டையாட தான் பரிவாரங்களுடன் வந்தார். அப்போது குழந்தையின் அழுகுரல் கேட்டு , குரல் ஒலித்த இடம் நோக்கி சென்றார் .அழகிய வதனத்துடனும் , ஒளிவீசும் மணி மாலையிடனும் குழந்தையொன்றை கண்டார் .புத்திர பேறு அமையாத தனக்கு இறைவன் கொடுத்த பரிசாக எண்ணினார். அப்போது அங்கு ஒரு சன்னியாசி தோன்றி இக் குழந்தை அனைத்து துன்பங்களையும் போக்கும் சக்தி கொண்டவன். கழுத்தில் மணி மாலையுடன் உள்ள இவனுக்கு "மணிகண்டன் " என்று பெயர் சூட்டுங்கள். குழந்தைக்கு 12 வயது நிறையும்போது அவனுடைய மகிமையை நீங்கள் அறிவீர்கள் என்று கூறி மறைந்தார்.

பந்தள மன்னன் மட்டில்லா மகிழ்ச்சியோடு அக்குழந்தையை கையில் ஏந்தி பரிவாரங்கள் சூழ அரண்மனையை அடைந்தார்.ராணியிடம் நடந்த விபரங்களை கூறினார்.குழந்தை பாக்கியத்துக்காக என்கி தவித்திருந்த ராணி பெருமகிழ்வுற்றாள்.பந்தள மன்னனும் ராணியும் மணிகண்டனை சீராட்டி, பாராட்டி வளர்த்தனர். மணிகண்டன் வரவால் பந்தளநாடு வளம் ,நலம், பலம் பெற்று சிறந்து விளங்கியது , வேத சாஸ்திரங்களையும் , அஸ்திர (வில் ,அம்பு சார்ந்த ) சஸ்திர (கத்தி போன்ற வகை ) வித்தைகளையும் கற்க மணிகண்டன் குருகுலத்திற்கு அனுப்பப்பட்டார். மணிகண்டனின் அறிவையும் , ஆற்றலையும் கண்டு வியந்த குரு அவரது அளப்பரிய தெய்வீக தன்மையை புரிந்து கொண்டார். குரு தட்சணையாக என்ன கொடுக்க வேண்டும் என்று மணிகண்டன் கேட்ட போது பார்வையற்ற, ஊமையான தன் மகனை குனபடுத்த வேண்டும் என்று குரு வேண்டினார். குருவின் மகனுக்கு பார்வையும், பேசும் திறனையும் தன் தெய்வீக ஆற்றலால் வழங்கினார்.
பந்தள ராணியும் கருவுற்று ஆண் குழந்தை ஒன்றை பெற்றெடுத்தாள். ராஜ ராஜன் என்று பெயர் சூட்டினார். மணிகண்டன் நேர்மையும் வீரமும் நிறைந்தவராக வளர்ந்தார்.நட்டு மக்கள் மணிகண்டனை தங்கள் கண்ணின் மணியாக கருதி அன்பை பொழிந்தனர்.சகல திறமைகளை கொண்ட மணிகண்டனே தான் வாரிசு என பந்தள மன்னன் முடிவு செய்த, யுவராஜாவாக முடிசூட்டி விழாவிற்கு ஏற்பாடு செய்யும்படி மந்திரிக்கு ஆணையிட்டார்.

மணிகண்டன் அரசனாவதில் மந்திரிக்கு விருப்பம் இல்லை. மணிகண்டன் அழிக்கப்பட்டு ராஜராஜன் அரசனானால், ராஜ ராஜனை பெயருக்கு மட்டும் அமர்த்தி ஆட்சி செலுத்தும் அதிகாரத்தை அவன் கைப்பற்ற எண்ணினான்.
எனவே மணிகண்டனை அழிக்க அவன் சதி திட்டம் தீட்டி , தன் இல்லத்தில் விருந்து வைத்து விஷம் கலந்த உணவை மணிகண்டன் உண்ணும்படி செய்தான். விஷ உணவால் சிவ பெருமான் அருள் பெற்ற தெய்வீக சக்தி கொண்ட ஹரி ஹர சுதனை மாய்க்க முடியவில்லை
ராஜ ராஜன் மீது அதிக ப்ரியம் இருப்பது போல , ராணியின் மீது பரிவு இருப்பது போலவும் மந்திரி நடித்து, ராஜ ராஜனே பந்தள நாட்டின் உண்மையான வாரிசு என்றும் மணிகண்டன் அழிக்கப்பட வேண்டும் எனவும் தான் தீட்டிய திட்டத்திற்கு ராணியையும் உடன்பட வைத்தான். மந்திரியின் துர் ஆலோசனையின் பேரில் தீராத தலை வலியில் துடிப்பது போல ராணி நாடகமாடினாள்.மந்திரியின் சூழ்ச்சியால் அரண்மனை வைத்தியன் புலி பாலால் மட்டுமே தலை வலியை போக்க முடியும் என பொய் உரைத்தான்.பந்தள நாட்டை சார்ந்த யாராலும் புலிப்பால் கொணர முடியவில்லை. தாயின் துயரை காப்பது தன் கடமை என்று மணிகண்டன் எண்ணினார் பந்தள மன்னன் மணிகண்டனை கானகத்திற்கு அனுப்ப உடன்படவில்லை .மணிகண்டன் புலிப்பால் கொண்டு வருவதில் உறுதியாக இருந்தார். இதனால் பந்தள மன்னன் இறுதியில் அரைமனதாக விடை கொடுத்தார். குல தெய்வமாகிய சிவனே துணைக்கு வருவது போல முக்கண்ணுடுய தேங்காயும் , உணவு பொருட்களையும் இரு முடியாக கட்டி , வில்லும் ,அம்பும் ஏந்தி ஐயப்பன் கல்லும் முள்ளும் நிறைந்த கானகம் சென்றார். புலி பாலை தேடி சுவாமி ஐயப்பன் சென்ற வழியே பெரு வழி பாதை என்று அழைக்க படுகிறது. 

தொகுப்பு: பாண்டிய மன்னன்

Keerthivasan

About Keerthivasan -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :