Wednesday, November 20, 2013

Keerthivasan

சுவாமி ஐயப்பனின் திவ்ய கதை 1

கம்பன் , ரம்பன் என்று இரு அசுரர்கள் வாழ்ந்து வந்தார்கள் .ரம்பனின் புத்திரன் மகிஷாசூரன். பிரம்மனை நோக்கி கடுமையான தவம் செய்தான் மகிஷசூரன்.பிரம்மா அவன் முன் தோன்றி என்ன வேண்டும் என கேட்டார்

( "குறிப்பு : அவன் இவன் பட வசனமான அவனுக்கு என்ன வேணும்னே தெரியல அவன்லாம் என்ன சாமி என கேட்க வேண்டாம் காரணம் ஒவ்வொரு மனிதனும் தனக்கான வேண்டியதை தானே கேட்டு பெறும்போதுதான் அதன் மீதான பயம் அவனை வழிபடுத்தும்" )

இந்த பூமியில் உள்ள எவராலும் தனக்கு மரணம் நேரக்கூடாது என்று வரத்தை வேண்டினான் அவன் கேட்ட வரத்தை பிரம்மா கொடுத்தார் .

பிரம்மாவிடம் வரம் வாங்கிய பின் மகிஷசூரனின் கொடுமை நாளுக்கு நாள் அதிகரித்தது.அக்கொடுமைகளை பூவுலக மக்களாலும் தேவர்களாலும் தாங்க முடியவில்லை .
மகிஷ சூரனை அழிக்க தேவர்கள் சண்டிகா தேவியை வேண்டினர் மும்மூர்த்திகளின் சக்தியால் உருவாக்கப்பட்ட துர்கையின் அம்சமான சண்டிகா தேவி பூமியில் அவதரித்து மகிஷசூரனை வாதம் செய்தார் .

காலவ மகரிஷியின் மகள் லீலாவதி. அவளது கணவன் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்ட போது மகிஷ முகியாக பிறக்க கடவாய் என்று கணவன் சாபமிட்டான்.அதன் விளைவாக கரம்பனின் மகள் மகிஷியாக பிறந்தாள்




தன் சகோதரன் மகிஷசூரன் அழிவுக்கு காரணமான தேவர்களை பழி வாங்க , பிரம்மனை நோக்கி மகிஷி கடும் தவம் செய்தாள்.பிரம்மா அவள் முன் தோன்றி என்ன வரம் வேண்டும் என கேட்டார். தனக்கு மரணமே ஏற்படக்கூடாது என்பதற்காக புத்திசாலி தனமாக , பின்வருமாறு மகிஷி வரம் கேட்டாள் "என்னை வாதம் செய்பவன் ஹரிக்கும் ஹரனுக்கும் புத்திரனாய் பிறந்திருக்க வேண்டும்.பன்னிரண்டு ஆண்டுகள் பிரம்மசரிய விரதம் பூண்டு , பூமியில் மனிதனுக்கு சேவை புரிந்து வாழ்ந்தவனாக இருக்க வேண்டும் .அத்தகைய ஒருவன் என் உடல் மீது நர்த்தனம் ஆடும்போதுதான் எனக்கு மரணம் சம்பவிக்க வேண்டும் "

பிரம்மாவும் கேட்ட வரத்தை கொடுத்தார் தன்னை யாம் கொள்ள முடியாது என்ற ஆணவத்தோடு மகிஷி தேவலோகம் சென்று தேவர்களுக்கு இன்னல்கள் இழைத்தாள் ,  மக்களை தாங்க முடியாத அளவிற்கு கொடுமை படுத்தினாள்


 துர்வாசரின் சாபத்தால் ,இந்திரன் மற்றும் தேவர்களுக்கு நரை , திரை (தோள் சுருக்கம்), மூப்பு ஏற்பட்டது .பாற்கடலை கடைந்து கிடைக்கும் அமுதத்தை உண்டால் மட்டுமே சாப விமோசனம் கிடைக்கும் என்பதால் தேவர்கள் மகா விஷ்ணுவின் ஆலோசனையின் பேரில் , அசுரர்களுடன் சேர்ந்து தேவர்கள் மகாமேருவை மத்தாகவும் , வாசுகி என்னும் பாம்பை கயிறாகவும் கொண்டு பாற்கடலை கடைந்து அமுதத்தை பெற்றனர்.அசுரர்கள் அமுதத்தை பறித்து கொண்டார்கள். மகா விஷ்ணு மோகினி அவதாரம் எடுத்து அமுதத்தை மீட்டு தேவர்களிடம் கொடுத்தார்

மகா விஷ்ணுவின் மோகினி அவதாரத்தை காண சிவன் அங்கு வந்தார்.மகிஷியை வாதம் செய்து தேவர்களை காப்பதற்காக , ஹரியின் அம்சங்களான கருணையும் சாந்தமும் , ஹரனின் அம்சங்களான தியானமும் , ஞான வைராக்கியமும் ஒருங்கிணைந்து
பங்குனி மாதம் , பௌர்ணமி திதி , உத்திர நட்சத்திரத்தில் ஜோதி சொருபனான ஹரிஹரபுத்திர சுவாமி ஐயப்பன் அவதரித்தார் .சிவன் ஒளிரும் மணிமாலையை சுவாமி அய்யப்பனுக்கு அணிவித்து பம்பா நதிகரையில் விட்டார்

குறிப்பு : பல நாத்திக வியாதிகள் கேள்வி கேட்பது ஆணும் ஆணும் இனைந்து எவ்வாறு குழந்தை பெற்று கொள்ள முடியும் இது ஆபாசம் என்று அவர்களுக்கான பதில்  " மகா விஷ்ணு மோகினியாக ஒரு பெண்ணாக அவதாரம் அதாவது முழு பெண்ணாக அவதாரம் எடுத்தே சிவனுடன் இணைந்தார் ஆணாகவே இல்லை ஆணும் ,பெண்ணும் இணைந்துதான் ஐயனை பெற்றார்கள் " மனிதனுக்கு உடல் பஞ்சபூதங்களால் ஆன தூல உடம்பு .ஆனால் அனைத்துக்கும் மேலான இறைகளுக்கு பஞ்சபூதங்கள் கட்டுப்பட்டவர்கள்.ஆகையால் அவ்விறைவர்களுக்கு இருப்பது சூட்சும உடம்பு.மேலும் உருவம், அருவம், உருவாருவம் என்ற தன்மைகளை கொண்டவர்கள். இச்சை அற்றவர்கள் நம் தெய்வங்கள்.ஆகவே இரு சக்திகள் கருணையால் ஐயப்பனின் பிறப்பு நிகழ்ந்தது.

தொகுப்பு: பாண்டிய மன்னன்

Keerthivasan

About Keerthivasan -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :