Thursday, October 24, 2013

Keerthivasan

தமிழும் சமஸ்கிருதமும்


தமிழும் சமஸ்கிருதமும் என் இரு கண்கள்.




தமிழ் மொழியில் உள்ள பலருக்கும் தெரியாத, கருத்தாழமிக்க பாடல்களை குறித்து ஒரு கட்டுரை எழுதினால் என்ன என்று யோசித்தேன். ஆனால் அதை விட சமஸ்கிருதத்தை குறித்து எழுதுவதே இப்போதைக்கு காலத்தின் கட்டாயமாக உணர்ந்தேன். அதற்கு முன் தமிழ் மற்றும் சமஸ்க்ருதத்தின் பினைப்பு, மற்றும் அதை பிரிப்பதற்கான சூழ்ச்சியை குறித்துப் பார்ப்போம்.

சமஸ்கிருதத்தை இன்று நம்மில் இருந்து பிரித்தெடுக்க பெரும் சூழ்ச்சி நடைபெறுகிறது. தமிழனுக்கு சமஸ்கிருதம் என்பது ஏதோ ஒரு அன்னிய மொழி என்பது போலும், அது ஒரு தமிழை அழிக்க தோன்றிய மொழி என்றும் பல தேச விரோத கும்பல்களால் மிக செம்மையாக திட்டமிடப்பட்டு பரப்ப படுகிறது.

எதற்காக அவர்கள் சமஸ்கிருதத்தை அழிக்க முற்பட வேண்டும் ? அதை அவ்வாறு செய்து என்ன சாதித்து விடப் போகிறார்கள் என்ற கேள்வி எழலாம் ?

ஒரு மொழி என்பது வெறும் தொடர்பு படுத்தும் ஊடகமல்ல. அது ஒரு தேசத்தின், ஒரு சமூகத்தின் ஜீவன். ஒரு நாகரீகத்தின் ஆதாரம். நம் சனாதன தர்மத்தின் மேன்மைகள் பலவும் சமஸ்க்ருதத்தில் கொட்டிக் கிடக்கின்றன. உலகில் இன்றைய அளவும் எல்லா மொழிகளிலும் எழுதப்பட்டுள்ள‌ புத்தகங்களை எண்ண முடிந்தால் சமஸ்கிருத புத்தகங்களே அதிகமாய் இருக்கும். சொல்லப்போனால் சமஸ்க்ருதத்தில் இப்போது அதிக அளவில் புத்தகங்கள் எழுதப் படுவது இல்லை. ஆனால் நம் முன்னோர்கள், சமஸ்க்ருதத்தில் கோடிக் கணக்கான புத்தகங்களை எழுதி குவித்துள்ளார்கள். அதைப் போல தமிழின் தொன்மையும், செம்மையும் நாம் தமிழர்களுக்கு சொல்ல தேவையில்லை.

ஆக சனாதன தர்மத்தின் மிகத் தொன்மையான‌ சமய நூல்கள் பல்லாயிரக்கணக்கில் இடம் பெற்றுள்ளது இரு மொழிகளில் மட்டுமே என்பது என் கருத்து. ஒன்று சமஸ்க்ருதம் மற்றது தமிழ். நம் பாரதத்தின் சமய நூல்களின் ஆதாரமாய் இந்த இரு மொழி நூல்களும் உள்ளன. மற்ற மொழிகளில் பல சமய நூல்கள் இருப்பினும் அவை அத்தனை தொன்மையானது என்று சொல்ல இயலாது.

இந்த இரு மொழிகள்தான் நம் சனாதன தர்மத்தின் ஆதாரமாய் உள்ளது. இந்த இரு மொழிகளையும் ஒன்றோடொன்று மோதவிட்டால் யாருக்கு லாபம் ? யாருக்கு நஷ்டம் ?

இருமொழிகளுக்கும் நஷ்டம் இல்லை, ஒவ்வொரு உண்மையான இந்தியனுக்கும் நஷ்டம். ஏனேனில் இரு மொழிகளுமே பின்னிப் பினைந்தது ? இரு கண்களுக்கு இடையில் எந்த கண் வேண்டும் என்று யாராவது கேட்டால் எவ்வளவு முட்டாள்தனம் ? தமிழில் இன்றைய அளவில் பல்லாயிரக் கணக்கான சமஸ்க்ருத சொற்களை நாம் பார்க்கலாம். சில சொற்கள் உண்மையில் எந்த மொழியின் வேர் சொல் என்று கண்டுப்பிடிப்பதே கடிணமாக இருக்கிறது. இரண்டு மொழிகளுக்குமே ஒன்றுதான் ஆதாரம், அது சமயம். சமயத்தில் இருந்து இந்த இரண்டு மொழிகளையுமே பிரித்தால், இம்மொழிகளில் ஜீவன் போய்விடும்.

ஆனால் இன்று என்ன நடக்கிறது. மிக நுட்பமாக திட்டமிட்டு, தமிழ் என்பதை சமஸ்க்ருதத்திற்கு எதிரியாக சித்தரிப்பதில் கிட்டத்தட்ட வெற்றி பெற்று வருகிறார்கள் சதிகாரர்கள். வெள்ளையனால் தொடங்கப்பட்ட அச்சூழ்ச்சியை இன்று வெள்ளையனின் வேர்களை பிடித்துக் கொண்டவர்களும், கொள்ளையனின் கொள்கையை சார்ந்தவர்களும் மிக அதிகமாக செய்கிறார்கள். இந்த இனையில்லா இரு பெரும் மொழிகளை பிரித்து விட்டால் தாங்கள் தம் அந்நிய சித்தாந்தங்களை சிரமமில்லாமல் செய்து விட முடியும் என்று நினைக்கிறார்கள்.

இன்றைய காலகட்டத்தில், தமிழை மெல்ல ஹிந்து சமயத்தில் இருந்து நகர்த்தி, அது ஒரு தனி கலாச்சாரம் என்றும், ஏனைய இந்திய கலாச்சாரத்தில் இருந்து அது மாறுபட்டது என்பது போன்றும் ஒரு நிஜமில்லாத மாயையை கிட்டத்தட்ட உருவாக்கி விட்டார்கள்.

எனக்கு தெரிந்து பண்டைய பாரத வ‌ரலாற்றில் மொழியின் பெயரில் எந்த போரும் நடந்ததில்லை. சனாதன தர்மமே பாரதத்தின் ஆதாரமாய் இருந்தது. நம் நாடு மொழியை சார்ந்து இருக்கவில்லை, தர்மத்தை சார்ந்தே இருந்தது. சனாதன தர்மத்தை எடுத்து செல்லும் ஊடகங்களாகவே மொழிகள் இருந்தன, அப்படி செய்கின்ற காரணத்தால் மேலும் செம்மை அடைந்தன.

ஆனால் "ஹிந்தி எதிர்ப்பு போராட்டம்" என்கிற பெயரில் தொடங்கிய சில போலி நாத்திக கும்பல்கள், தமிழின் ஆதாரமான சமயத்தை அதிலிருந்து பிடுங்க திட்டமிட்டு, கிட்டத்தட்ட அறுபது ஆண்டுகளாய் பல சூழ்ச்சிகளை செய்துள்ளனர். வெள்ளைர்களின் இரத்தமும், கொள்ளையர்களின் இரத்தமும் பாயும் சில கோடாரிகள் இதற்கு உடந்தையாக உள்ளனர்.

தமிழ் என்பதை தனியான ஒரு கலாச்சாரமாக சித்தரிப்பதால், மக்களை தேசியத்திலிருந்து பிரித்து அவர்களை பரம்பரை பரம்பரையாக ஆள முடியும் என்பது அரசியல் நரிகளின் சூழ்ச்சி. தமிழில் இருந்து ஹிந்து சமயத்தை அகற்றி விட்டால், தம் பாலைவன, பாவாடை சித்தாந்தங்களை அதில் உட்புகுத்தி விட முடியும் என்பது அந்நிய அடிமைகளின் சூழ்ச்சி.
இப்படி ஒரு ஹிந்து விரோத கும்பல்களின் சூழ்ச்சி வலையில், அப்பாவி தமிழ் மக்கள் சிக்கித் தவிப்பது தான் கொடுமை.

உண்மையில் சனாதன தர்மத்தை ஆதாரமாய் கொண்ட, தமிழையும் சமஸ்க்ருதத்தையும் பிரித்து விட முடியுமா ? .

Keerthivasan

About Keerthivasan -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :