Tuesday, December 16, 2014

Keerthivasan

நினைத்தேன் பகிர்கிறேன் - பெண்ணியம்

நினைத்தேன் பகிர்கிறேன் - பெண்ணியம்



உலகத்தில் சிறந்த பெண்ணிய நாடுகளில் நடைப்பெறும் பெண்களின் போராட்டங்கள் எப்படி இருக்கும் என்று கேட்டால் நம்மவர்கள் மிகவும் குஷியாகிவிடுவார்கள். எதுக்காக போராட்டம் என்பதல்ல ஆனால் பெண்கள் கலந்துக் கொள்ளும் போராட்டம் என்றால் குறைந்தபட்சம் அரை நிர்வாணப் போராட்டம். அதாவது நான் ஆண் பிள்ளை மேலாடை இல்லாமல் போனால் நீயும் போக முடியுமா என்று வீராப்பாக அவர்களிடம் நீங்கள் கேட்க முடியாது காரனம் கேட்டு முடித்ததும் சட்டையை மட்டுமல்ல இத்தியாதி இத்தியாதிகளையும் கழட்டி மூஞ்சில் வீசிவிடுவார்கள்...


Source: Wikipedia | FEMEN protest in Kiev during the 2010 Ukrainian presidential election


பாரதத்தில் பெண்கள் அடிமையா?

நிச்சயமில்லை. பெண்களுக்கு சுதந்திரம் கொடுத்திருக்கிறார்களே தவிர அங்கு போற்றப்படும் பெண்கள் எத்தனை என்றால் தேடி தேடி தேய்ந்தேனே என்று பாட வேண்டியதுதான். ஆனால், இங்கு? அவர்கள் இல்லாத துறையே இல்லை. இதிகாசங்கள் கூட பெண்களை இழிவுபடுத்துவதோ அல்லது அவர்களை சித்திரவதை செய்வதோ தவறு என்றுதான் சொல்கிறது. பெண்களுக்கு ஆண்களைவிட கட்டுபாடு அதிகம் தான் அதில் மாற்றுக் கருத்தில்லை. இரும்பை விட வைரத்துக்கு பாதுகாப்பு அதிகமாகத்தானே இருக்கும்? பெண்களுக்கு முழு சுதந்திரம் கொடுத்த நாடுகளின் குடிமக்கள் இது என் தந்தை நாடு (FATHER LAND) என்று தான் சொல்வார்கள் ஆனால், இங்கு தாய்நாடு என்றுதானே சொல்கிறோம்?

முக்கியமாக 100% பெண்ணியம் தவழும் அந்த நாட்டில்தான் தாய் இல்லாத, தகப்பன் இல்லாத, குடும்பம் என்ற அமைப்பே இல்லாத சமூகம் இருக்கிறது. காலையில் ஒரு உணவு, மத்தியம் ஒரு உணவு, இரவு ஒரு உணவு என்பது போலத்தான் செக்ஸும் அங்கே. அப்பா யாரு என்று கண்டுபிடிக்கவே அங்கு ஒரு டீவி நிகழ்ச்சி உண்டு.

நாங்கள் அதெல்லாமா கேட்கிறோம் என்று நீங்கள் கேட்பது எனக்கு கேட்கிறது அங்கும் இப்படி தெருவில் முத்தம் ஆடையில் சுதந்திரம் என்று சின்ன சின்னதாக ஆரம்பித்து இன்று சுனாமியாக நிற்கிறது.

Keerthivasan

About Keerthivasan -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :