Monday, December 29, 2014

Keerthivasan

பிரம்மத்தை நோக்கி... - 1

சனாதன தர்மத்தில் உள்ள விசயங்கள் இந்த வரிசை கிராம படி எடுத்து கொள்ளப்படும்... முதல் நிலை இறுதியானது.. மாறாதது மற்றும் உறுதியானது... அதற்க்கு கீழே உள்ள விஷயங்கள், ஒரு நிலை மேலே உள்ள விஷயங்களோடு மறுதலித்தால், கீழே உள்ள விஷயங்கள் நிராகரிக்க படவேண்டியது...





1. வேதம்
2. உபநிஷத்துக்கள்
3. ஸ்ருதி
4. ஸ்மிருதி
5. புராணங்கள்
6. இதிகாசங்கள்


1. வேதங்கள்
அறிவு ஞானம் எனும் ''வித்" எனும் வேதச் சொல்லிருந்து வேதம் வந்தது. முக்கிய வேதங்கள் 4. ரிக், யஜுர், சாம, அதர்வணம் ஆகியவையாகும்.
ரிக், யஜுர், சாம வேதங்கள் பழமையானது இதனை ''தரை வித்யா" என அழைப்பர். அதர்வண வேதம் இறுதியில் வந்தது.

2. உப நிஷங்கள்
அருகில் இருந்து கற்றவை அறிந்தவை எனப் பொருள். அறியாமையை அகற்றக் கூடியது என மற்றொரு பொருளுமுண்டு. இந்திய வரலாற்றுப் படி 200க்கும் அதிகமான உபநிஷங்கள் உண்டு. இருப்பினும் நடப்பில் உள்ளவை 10 அல்லது 18 ஆகும். உபநிஷங்களுக்கு வேதாந்தம் என்றும் பொருண்டு. தத்துவங்களைக் கூறும் உப நிஷங்களும் உள்ளன. வேதங்களுக்கு பின் தோன்றியவைகளே வேதாந்தம் எனும் இந்த உப நிஷங்கள்.

3. ஸ்ருதி
ஸ்ருதி என்றால் கேட்கப்பட்டு, உணரப்பட்டு, புரியப்பட்டது அல்லது அருளப்பட்டது, மிகப் பழமையான பிரசித்தி பெற்றது ஆகும்.

4. ஸ்மிருதி
ஸ்ருதி போல் புனிதம் வாய்ந்ததல்ல இருப்பினும் இந்துக்களால் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. "ஸ்மிருதி" என்றால் ஞாபகங்கள் அல்லது நினைவூட்டல்கள். இந்து இலக்கியங்கள் புரிந்து கொள்ள மிக எளிதானது. ஏனெனில் அவை உலகின் உண்மைகளை குறிப்பால் உணர்த்துகிறது. ஸ்மிருதி இறைவனிடம் இருந்து வந்த புனிதத் தன்மையின்றி இருந்தாலும் மனிதன் வாழ்வில் கடைபிடிக்கக் கூடிய அனைத்து வழிமுறைகளையும் கூறுகிறது. சமுதாயத்தில் நிலவும் ஒவ்வொரு செயலுக்கும் விதி முறைகளை கூறுகிறது.

5. புராணங்கள்
வேத, உபநிஷங்களுக்குப் பின் இந்துக்ளின் புனிதமாக கருதப்படுவது புராணங்கள் ஆகும். உலகம் படைக்கப்பட்டது, முந்தய ஆரியர்களின் வரலாறு, தெய்வங்கள் பற்றிய குறிப்புகளை புராணங்கள் கூறுகின்றன. இவை நூல் வடிவில் அருளப்பட்டதாக கூறுவர். மகாரிஷி வியாசர் புராணங்களை 18 பாகங்களாய் பிரித்தார். அவற்றிக்கு பொருத்தமான தலைப்புகள் இட்டனர். பகவத் கீதை (மகாபாரதம்) இவரது எழுத்துத்திறனால் வெளிப்பட்ட புராணமே. புராணங்களில் முதன்மையானது பவிஷ்ய புராணம். எதிர்கால நிகழ்வுகளை எடுத்துக் கூறுவதால் இதற்கு இப்பெயர் வந்தது. இதனை இந்துக்கள் கடவுளின் வார்த்தை எனக் கூறுவர். மகாரிஷி வியாசர் இந்நூலை தொகுத்தவர் ஆவார்.

6. இதிகாசங்களில் தர்ம போதனைகள் நிறய உண்டு... வாழ்வியல் முறை மற்றும் சூழ்நிலை விஷயங்கள் சொல்ல பட்டன.



காமிய கர்மம் என்பது இம்மையில் தனக்குப் பட்டம், புகழ், பேர், புத்திர பாக்கியம், செல்வம், தீர்க்காயுள், ஆரோக்கியம் முதலியன அமையவேண்டுமென்று ஆசைப்படுவதும், மறுமையில் சுவர்க்காதி பதவிகள் வேண்டுமென்று விரும்புவதுமாம். இத்தகைய ஆசைகளை ஒழிப்பது சந்நியாசம்.

இது சில ஞானியர்கள் கருத்து. வேறு சில ஞானிகள் நித்திய, நைமித்திய, காமியமாகிய எல்லாக் கர்மங்களின் பயனை விட்டுவிடுவதே தியாகம் என்கின்றனர். சந்நியாசம் என்பதும் தியாகம் என்பதும் ஒரே கருத்தைத்தான் விளக்குகின்றன. அற்றது பற்று எனில் உற்றது வீடு. இது விஷயத்தில் பேரறிஞர்களுக்கிடையில் அபிப்பிராய வித்தியாசமில்லை. 

தனது முன்னேற்றத்துக்கு இடைஞ்சலா யிருப்பவைகளை யெல்லாம் துறந்துவிட வேண்டும். காமிய கர்மங்கள் புதிய பந்தங்களை உண்டுபண்ணுகின்றன. அவைகளை நிறைவேற்றுதற்குப் புதிய பிறவிகள் எடுத்தாகவேண்டும். பிறவிப்பிணி வேண்டாமென்கிற விவேகிகள் அதற்குப் புதிய வித்துக்களை விதைக்கலாகாது. ஏற்கனவே முளைத்து வளர்ந்திருக்கும் விருக்ஷத்துக்கு ஒப்பான இவ்வுடல் வாழ்க்கை தானாகப் பட்டுப்போம் பரியந்தம் அதைத் தன் போக்கில் விட்டுவிடுவது முறை என்பது சில ஞானிகளின் கோட்பாடு.

வேறு சிலர் புதிய மரத்துக்கு விதையும் நடவேண்டாம், பழைய மரத்தை விட்டும் வைக்கவேண்டாம் என்கின்றனர். அனைத்தையும் வேரறக் களைதல் வேண்டும் என்பது அவர்களது கோட்பாடு. கர்மத்தை அறவே ஒழித்துவிடவேண்டுமாம்

ஆக்கம்: கிருஷ்ணபரமாத்மா

Keerthivasan

About Keerthivasan -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :