Saturday, December 20, 2014

Keerthivasan

தேசபிரிவினையின் சோக வரலாறு - 3


"அது ஒரு பிச்சைகாரர்களின் அமைப்பு. அது மரியாதைக்குரிய அமைப்பும் அல்ல. அது நமக்கு சுதந்திரத்தை பெற்றும் தராது

அது வெறும் petition making body"

- காங்கரஸ் பற்றி சுவாமி விவேகானந்தர்...


Allan Octavian Hume (1829–1912)
One of the Founder of Indian National Congress | Image wikipedia




மன்னர் யாரென்று தெரியாமல் கிளர்ச்சியின் முடிவில் என்ன செய்வது என்று தெரியாமல் பல குழப்பங்களுடன் நடந்த போர்தான் சிப்பாய் புரட்சி.  ஆனால், அது கிளர்ச்சி அல்ல மாபெரும் எழுச்சி என்று பிரிடிஷார் அறிவார்கள். 

சுதந்திர போராட்டத்தின் வரலாற்றை தெரிந்து கொள்ள இரண்டு இயக்கங்களின் வரலாற்றை தெரிந்து கொள்ள வேண்டும். ஒன்று இந்திய தேசிய காங்கிரஸ். மற்றொன்று முஸ்லிம் லீக்.
1885 ஆண்டு ஆல்லன் ஆக்டேவியன் ஹ்யும் என்பவன் பிரிட்டிஷ் அரசாங்கத்தின் அதிகாரி. அவனுக்கு சில சில்லறை தொந்தரவுகள் அரசோடு இருந்ததினால் மன உளைச்சல் காரணமாக தாற்காலிகமாக பணி விடுப்பு பெற்று இருந்தான்.  அப்போது இந்த 1857 போர் விவரங்களை பற்றி ஆய்வு செய்ய எண்ணினான்.  அரசும் அனுமதித்தது.  ஆய்வின் அறிக்கையை தாக்கல் செய்தான்.

ஆய்வுஅறிக்கையில் அவன் தெரிவித்தது
1857 போரில் நாம் வென்றது முழுவதும் அதிர்ஷ்டமே.  இந்தியர்களே நம் படையில் அதிகம்.  அவர்கள் மட்டும் ஒன்று சேர்ந்திருந்தால் நம்மில் ஒருவன் கூட மிஞ்சி இருந்திருக்க மாட்டான்.  இந்த முறை கடவுள் அருளால் தப்பித்து விட்டோம்.  ஆனால் ஒன்னொரு முறை இது போல நடக்க நிறையவே வாய்ப்பிருக்கிறது. அப்படி நடந்தால் பிரிட்டிஷ் அரசு அடுத்த நொடியே தூக்கி எறியப்படும், இதில் சந்தேகமே வேண்டாம் என்றான்.  ஏனென்றால் இவர்கள் மொழிவாரியாக, சாதிவாரியாக, இனம் வாரியாக, உணவு பழக்கவழக்க ரீதியாக, மத ரீதியாக பிரிந்திருக்கிறார்கள், இவர்கள் என்றுமே ஒன்று சேர மாட்டார்கள் என்று நாம் எண்ணினோம்.  ஆனால் அதையெல்லாம் மீறி இவர்கள் ஒன்று சேர்ந்து திட்டம் தீட்டி நம்மை எதிர்த்து இவ்வளவு பெரிய போராட்டம் நடத்த முடிந்திருக்கிறது என்பது பெரிய ஆச்சரியமே.  இவர்களுக்கென்று டெலிகிராப் தபால் முறைகள் இல்லை, போர் கருவிகள் இல்லை, ஆனால் பல நாட்கள் திட்டமிட்டு இதை நிறைவேற்ற துணிந்துள்ளார்கள்.  இன்னமும் நாம் இவர்களை கொண்டுதான் இவர்களை ஆள்கிறோம்.  நிலை உணர்ந்து தலை நிமிர்ந்தால் நாம் தீர்ந்தோம்என்றான். 

இதை ஏற்ற பிரிட்டிஷ் அரசாங்கம் அதற்கான தீர்வை ஹீமிடமே கேட்டது அதற்கு ஹீம் சொன்ன பதில்...

மக்கள் பிரிட்டிஷ் அரசாங்கத்தின் மீது தீரா கோபத்துடன் இருக்கிறார்கள், அவர்களுக்கென்று எந்த நன்மையையும் பிரிட்டிஷ் அரசு செய்யவில்லை, செய்த ஓரிரு நன்மைகள் கூட நாம் இந்த நாட்டை சுரண்டி இங்கிலாந்துக்கு அனுப்பி நம்மை வளப்படுத்திக்கொள்ளதானே தவிர இவர்களுக்கென்று எந்த நன்மையையும் செய்யவில்லை.

திலகர், பங்கிம் சந்திர சட்டர்ஜி போன்றவர்கள் காலூண்ருகிறார்கள், மக்களுக்கு தேசபக்தி மீண்டும் கொழுந்துவிட்டு எரிய தொடங்கியுள்ளது, ஆகவே இவர்களது கோபத்தை, வெறுப்பை  தணிக்க ஏதாவது அமைப்பை நாமே உருவாக்கி கொடுக்கவேண்டும்.  அது ஆங்கிலம் பேசும் ஆங்கிலேயர்கள் மீது மரியாதையும் மோகமும் பெருமையும் கொண்டுள்ள இந்தியர்களாக இருக்க வேண்டும்.

இவர்கள் அவ்வபோது கூட்டம் போடுவார்கள், மக்களுக்கு என்ன தேவையோ (உ) இந்த இடத்தில சாலை செப்பனிடுதல், விளக்கு எரியவில்லை, இங்கே திருட்டு பயம் அதிகமாக, இது போன்ற விஷயங்களை தீர்த்து வைப்போம்.  அவர்களுக்கும் நமது குறைகளை சொல்ல, கேட்க ஒரு அமைப்பு இருக்கிறது என்று ஒரு எண்ணம் பிறக்கும்.  இதுவே அவர்களது கோபத்திற்கு ஒரு வடிகாலாக அமையும் என்றார்.

இது அரசுக்கு மிகவும் பிடித்து போய்விட்டது.  உடனே செய்துவிடுவோம் என்றனர்.  செய்தும் விட்டனர்.

அப்படி பிறந்ததுதான் “காங்கரஸ் மஹாபாவி இயக்கம்”

ஆக்கம்: ஆனந்த் வெங்கட்

Keerthivasan

About Keerthivasan -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :