Monday, December 22, 2014

Keerthivasan

தேசபிரிவினையின் சோக வரலாறு - 4

Rabindranath Thakur
7 May 1861 - 7 August 1941 (aged 80)


காங்கிரசின் பிழைப்பும் நிதானமாக போய்கொண்டிருந்தது 1900 கள் வரை.  இந்த மாதிரி அமைப்புகளில் இருந்து செயல்படுவோர், பிரிடிஷுக்கு ஆதரவாக இருப்போருக்கு ராவ் பகதூர், திவான் போன்ற பட்டங்கள் கொடுக்கப்பட்டன. ஆனால் இறைவன் நமக்கு சாதகமாகவே என்றும் இருக்கிறன், இருப்பான்,

1902ல் கார்சன் பிரபு நிர்வாக சவுகரியங்களுக்காக வங்காளத்தை மேற்கு கிழக்கு என இரண்டாக பிரிப்பதாக அறிவித்தான்.  உண்மையான எண்ணம் ஹிந்து முஸ்லிம்களை பிரித்து மாநில ரீதியாக இவர்களை தனிமைபடுத்த வேண்டும் என்ற திட்டம். இதை அறிவித்த தன்னுடைய பட்ஜெட் உரையில் ஹிந்துக்கள் மோசமானவர்கள், பித்தலாட்டக்காரர்கள், பொய் சொல்பவர்கள், சுத்தம் கிடையாது என்று சம்பந்தமே இல்லாமல் திட்டி தீர்த்தான்.

கார்சனின் உள்நோக்கம் இவர்களை இப்படி திட்டினால் இவர்களது கோபம் திசை திரும்பும், வங்காளத்தை பிரிப்பதை மறந்து இந்த உரைக்காக கண்டனம் தெரிவிக்க துவங்கி போராடுவார்கள் என்று எண்ணினான்.  இதை எதிர்த்து பல மாநிலங்களில் இது ஒரு தேவையில்லாத பேச்சு என கண்டித்து கூட்டம் போட்டார்கள்.  சேலம் விஜயாகவாசாரியார் 'ஆரிய சரித்ரம்' என்று 700 பக்க புத்தகத்தை வெளியிட்டார். 

மீண்டும் விஷயத்திற்கு வருவோம்.  இறைவன் நம் பக்கம் இருந்ததால் பிரித்தாளும் சூழ்ச்சியின் அடுத்த திட்டம் இது.  இது போல முன்பும் சரி, இன்றும் சரி.  பல மாநிலங்கள் பிரிக்கபட்டுகொண்டுதான் இருக்கின்றன.  இதனால் எதுவும் ஆகிவிடவில்லை.

இதனால் சிந்து, சென்னை, பம்பாய் ராஜதானிக்களில் கூட மிக பெரும் புரட்சி வெடித்தது.  இதை அவன் எதிர்பார்க்கவில்லை.  அரசாங்கம் கட்டுபடுத்த முடியாமல் திணறியது.  காங்கிரசின் எதிர்ப்பை கர்சான் கண்டுகொள்ளவே இல்லை.

ஹிந்துக்களும் முஸ்லிம்களும் தாகூரின் தலைமையில் கங்கை நதிக்கரையில் 50000 கூடி ராக்கி கட்டி நாங்கள் சகோதரர்கள் எங்களை பிரிக்க முடியாது இது போன்ற செயல்களால் என்று கோஷமிட்டனர்.  வந்தே மாதரம், என்ற கோஷங்கள் விண்ணை பிளந்தன.  இதை ஒட்டி காங்கிரசில் மிக பெரிய கலவரம் நிகழ்ந்தது.  முன்னரே காங்கிரசின் செயல்பாடுகளால் திருப்தி அடையாது திலகரும், மகான் அரவிந்தரும், வஉசியும் அவரது கோஷ்டிகளும் எதிர்த்தனர்.  நாற்காலிகள் பறந்தன.  மிதவாதிகள், தீவிரவாதிகள் என்று இரண்டாக காங்கிரஸ் உடைந்தது. ராஷ் பிஹாரி போஸ், கோபலகிருஷ்ண கோகலே மற்றும் அவரது கோஷ்டியினர் மிதவாதிகள். 

ஆக்கம்: ஆனந்த் வெங்கட்

Keerthivasan

About Keerthivasan -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :