Thursday, December 25, 2014

Keerthivasan

தேசபிரிவினையின் சோக வரலாறு - 7

ஆகா கான் என்றொரு முஸ்லிம் தலைவர் இருந்தார்.  அவருக்கு நிறைய கடன் இருந்தது.  சலுகை வட்டியிலோ அல்லது இனாமாக ஒரு லட்ச ரூபாய் தருகிறேன்  முஸ்லிம் லீக் என்றொரு அமைப்பை நீங்கள் துவங்க வேண்டும் என்றார்கள்.  இது நடந்தது 1906ல்.  முஸ்லிம்களின் நலனை காக்க அமைப்பே இல்லை.  ஆகவே இது முஸ்லிம்களின் நலனுக்காக போராடும் என்று சொல்லி துவக்கப்பட்டது.  இதை வைத்து முஸ்லிம்களை காங்கிரசிலிருந்து வளைக்க திட்டமிட்டான் நம்ம வங்கதேச பிரிவினையின் ஹீரோ ஹீம்.  இந்த அமைப்பே ஒரு மிக கொடிய நோயாகி தேசத்தையே துண்டாடியது பின்னாளில்.

1915 ஆண்டு மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி இந்தியாவுக்கு திரும்பினார்.  தென் ஆப்பிரிக்காவில் நிறைய பணம் சம்பாதித்து கொடி கட்டி பறந்தவர்.  அங்கே மக்களின் சம உரிமைக்காக ஹிந்து முஸ்லிம் கிறிஸ்தவர் அனைவரையும் இணைத்து போராடி பெரும் புரட்சியை ஏற்படுத்தியவர்.  அஹிம்சா முறையினால் எதிரியின் மனதையும் வென்றவர் என்ற புகழுடன் பாரதம் திரும்பினார்.

இவரை பற்றி பலர் பலவிதமாக அவதூறுகள் சொல்லலாம்.  சுதந்திர போராட்டத்திற்காக பெருமளவில் பாடுபட்டதை தவிர அவரிடம் தெளிவான பல திட்டங்கள் இருந்தன.  அஹிம்சை போராட்டம், குருகுல கல்வி முறை, சுதேசி பொருட்களையே வாங்கவேண்டும், தன்னிறைவு பெற்ற கிராமங்கள், பசு வதை தடுப்பு, மதமாற்றத்திற்கு எதிர்ப்பு, ஒரே இணைப்பு மொழி, புகை, புலால், மது வெறுத்தல், இயற்கையோடு இணைந்த வாழ்கை, எது செய்தாலும் தர்மத்தை காணுதல், நேரம் தவறாமை, ஆடம்பரமின்மை, இறை பக்தி என்று பல.  சுதந்திரம் கிடைத்தால் போதாது  அது கிடைத்தவுடன் நாம் என்ன செய்யவேண்டும் என்று மக்களை தயார் செய்ய முனைந்தார்.   சுதந்திர போராட்டத்தை கிராம அளவிற்கு கொண்டு சென்ற பெருமை இவரை மட்டுமே சேரும்.

செல்லுமிடமெல்லாம் ராம பஜனை ஏற்பாடு செய்வார்.  பஜனையின் உச்சத்தில் சட்டென்று அதை நிறுத்தி பேச ஆரம்பிப்பார்.  பின் மீண்டும் பஜன்.  பாரத மாதாவின் திரு உருவ சிலையை வடிவமைத்து அதை சங்கிலியால் பிணைத்து மாட்டு வண்டியில் கட்டி வீதிதோறும் ஊர்வலம் கொண்டு செல்வார்.  அப்பாவி கிராம மக்கள் இது யாரென்று கேட்கும்போது இதுதான் உன் நாடு, உன் தாய், உன் பாரத தாய்.  இவள் கையில் இருக்கும் விலங்கை உடைக்க வேண்டாமா என்பார்.  இது மெகா ஹிட் திட்டம்.

வருத்தமான விஷயம் என்னவென்றால் இவ்வளவு செய்த இந்த காந்தி மிகவும் பிடிவாதமாக இருந்தார், தன்னிஷ்டப்படியே செய்தார், எதிரியின் ராஜ தந்திரத்தை புரிந்து கொள்ள முடியாத அப்பாவியாக இருந்தார்.  அவரை சுற்றி இருந்த கூட்டத்தையும், (உள்ளே கேட்குமாம் ஒரு குரல், அது என்ன குரலோ!!) அந்த மனசாட்சியையும் பெரிதும் நம்பினார்.  பிரிடிஷார் மற்றும் முஸ்லிம்களின் வலையில் லட்டு போல வீழ்ந்தார்.

ஒரு சுவாரஸ்யமான தகவல் என்னவென்றால் இந்த முஸ்லிம்களை திருப்தி படுத்துவதை காந்தி ஆரம்பிக்கவில்லை அதற்கு முன்பே இருந்தது இந்த மனோபாவம்.  ஆனால் சின்ன பொறியாக இருந்ததை ஒரு காட்டு தீயாக மாற்றியது காந்திஜி.  தன்னை நம்பும் மக்களையும், தன்னையும் நம்பாமல் இவன் வந்தால்தான் ஆச்சு, அவன் வந்தால்தான் ஆச்சு என்று அதற்காக என்ன விலையேனும் கொடுப்பது என்று முடிவேடுத்தாரே, அதுதான் பிரச்சனையானது.  தென் ஆப்ரிக்காவில் இந்தியர்கள் அனைவரும் வெளிநாட்டுகாரர்கள்,  அங்கே அனைவரும் அவமதிக்கப்பட்டோம்.  அதனால் பேதமின்றி இணைய முடிந்தது.  இங்கு அப்படி அல்ல.  இந்த சிறிய விஷயத்தை புரிந்து கொள்ளாததால் நாடே பெரும் விலையை கொடுக்க வேண்டி வந்தது.  அன்றும் சரி இன்றும் சரி நாம் பிரிந்துதான் இருக்கிறோம்.

Keerthivasan

About Keerthivasan -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :