Thursday, December 25, 2014

Keerthivasan

ஒரு தத்வார்த்த பயணம் – 2 – ஹிந்து மதம் அன்றும் இன்றும்



ஹிந்து மதம்!! உலகின் மிகத் தொன்மையான தானாகவே இருந்த அநாதியான மதம்!! மதம் என்னும் சொல் எப்போது வந்ததெனத் தெரியவில்லை!! ஆனால் இது உண்மையில் ‘ஹிந்து தர்மம்’ தான்!! இன்னமும் இதன் பெயர் சனாதன தர்மம் என்று வழங்கப்படுகிறது! தமிழில் இதன் பொருள் வாழும் வழி என்பதாம்!! ஆக வாழும் வழிகளைச் சொன்ன ஒரு இயக்கமே ஹிந்து மதம் என்னும் பெயரில் மருவிப் போனது!! சரி வாழும் வழி என்றால் என்ன? என்னென்ன முறைகளில் வாழ்ந்தால் வாழ்க்கை பயனுள்ளதாக, நீண்டதாக, நோய்நொடிகள் அற்றதாக, புண்ணியம் தருவதாக, தர்மத்தின் வழியில் வீடுபேறு நோக்கி அழைத்துச் செல்வதாக இருக்கிறதோ அதுவே வாழும் வழியாகச் சொல்லப் பட்டது! அந்த அடிப்படையில் பார்த்தால் இதன் பெயரை வாழும் வழி அல்லது ‘நல்வழி’ என்றும் கூடக் கொள்ளலாம்!!

ஹிந்து தர்மத்தின் நிலை அன்று இன்றும் எந்த நிலையில் உள்ளது? இதன் பெயரே வாழும் வழி என்பதால் வாழ்வியலுக்குத் தேவையான எல்லா விஷயங்களும் இந்த தர்மத்தில் வேதங்கள், உபநிஷதங்கள் மூலமும், சாஸ்திரங்கள், சம்பிரதாயங்கள், புராணங்கள், இதிஹாசங்கள் மற்றும் பல்வேறு ஆலயங்களின் சிறப்புக்களைச் சொல்லும் வரலாறுகள் மூலமாகவும் உரைக்கப் பட்டுள்ளது!! இவற்றைப் பல ரிஷிகள், முனிவர்கள், ஞானிகள், ஆச்சார்யார்கள் ஆகியோர் தத்தமது வழியில் மக்களுக்கு எடுத்துரைத்து உள்ளனர்!! வாழ்வியலின் பல அம்சங்களான சாஸ்திரம், தர்மங்கள், சோதிடம், விஞ்ஞானம், வானசாஸ்திரம், ராஜநீதி, தண்டநீதி, நுண்கலைகள், சமஸ்கிருதம், நீதிக் கதைகள், ஆயுர்வேதம், போர்முறைகள், காமசாஸ்திரம், தர்க்கசாஸ்திரம் போன்ற பல விஷயங்களை உள்ளடக்கியதே சனாதன தர்மம்! முக்கியமான விஷயமாக  இவையெல்லாம் தவிர மனிதனைத் தான் யார் ஏன் உலகில் பிறந்தோம், நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம், இறந்த பின் என்ன ஆவோம், இறந்த பின் எங்கு செல்வோம், அவ்வாறு இறந்த பின் நமது வாழ்வின் செயல்கள் எல்லாம் ஒரு தராசில் நிறுக்கப் பட்டு நமது கர்மவினைகளின் அடிப்படையில் நமக்கு வீடுபேறு கிடைக்குமென்றால் அவ்வாறான வீடுபேறு என்னும் ‘பிறவாத நிலையை’ அடைய நாம் என்ன செய்ய வேண்டும் என்று சிந்திக்க வைக்கும் ‘ஞானக் கல்விதான்’ இந்தத் தர்மத்தின் முக்கியச் சிறப்பே!!  

அவ்வாறான சிறப்புக்களைப் பெற்ற மதத்தின் இன்றைய நிலை எப்படி உள்ளது? இந்திய நாட்டில் ஹிந்து தர்மம் எந்தளவில் பேணப் படுகிறது? இதைச் சிந்தித்துப் பார்த்தால் உயர்நிலையில் இருந்த ஹிந்து தர்மம் முகலாயப் படையெடுப்பாலும், வெள்ளையர் ஆக்கிரமிப்பாலும் சீர்குலைக்கப் பட்டு இப்போது விடுதலைக்குப் பின் பல ஞானிகள், மத ஆர்வலர்கள் மூலம் மீண்டும் புத்துயிர் பெற்று வரும் நிலையில் உள்ளது!!
        

இன்றுள்ள சூழலில் மதம் இந்த ஹிந்து மத மக்களுக்கு கோவிலுக்கு அடிக்கடிச் சென்று வரும் நிகழ்வாக ஆகிவிட்டது!! இரண்டாவது ‘பகுத்தறிவு’ என்னும் பெயரில் ஹிந்து மத தர்மம் பற்றி நன்கு தெரிந்து கொண்ட ஈ.வெ.ராமசாமி போன்ற சிலர் அதை அப்படியே திருப்பிப் போட்டு ஹிந்து தர்மம் பற்றி இடைவிடாத விஷப் பிரச்சாரம் செய்த காரணத்தால் நாட்டில் (முக்கியமாகத் தமிழ்நாட்டில்) இளைஞர்களுக்கு மத ஆர்வம் குன்றி விட்டது!!

இவர்கள் எல்லாரும் ஹிந்து மதத்தை அதன் சாஸ்திரங்கள் எல்லாம் பொய் என்றும் ஹிந்து மதம் என்பது உண்மையில் பல்வேறு முரண்பாடுகளைக் கொண்ட மதமாகவும், அதனால் இந்த விஷயங்கள் எல்லாமே பொய் என்ற அடிப்படையில் பிரச்சாரம் செய்ய ஆரம்பித்து விட்டனர்!! இது இளைஞர்கள் மனதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி மதப் பற்றைக் குலைத்து விட்டது! இது ஒரு இடியாப்பச் சிக்கலான முரண்பாடுகளைக் கொண்ட மதமாக வர்ணிக்கப் பட்டு அதனால் இளைஞர்களும் ‘ஆமாம் அவர்கள் சொல்வதெல்லாம் நிஜம் போலதானே இருக்கிறது?’ என்கிற ரீதியில் சிந்திக்க ஆரம்பித்து விட்டனர்! இது அவர்களை தர்மத்தின் வழியில் இருந்து பிறழ வைத்து விட்டது!!

ஹிந்து மதத்தின் பல விஷயங்கள் பற்றிய அறிவை தெளிவை ஏற்படுத்திக் கொள்ளும் பட்சத்தில் இந்த திராவிட மாயைகள் எல்லாம் தாமாகவே இளைஞர்கள் மனதில் இருந்து விலகி ஓடி அவர்கள் மதம் மாறுவது போன்ற செயல்கள் எல்லாம் தாமாகவே நின்று போய் விடும்!


Keerthivasan

About Keerthivasan -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :