Friday, December 26, 2014

Keerthivasan

தேச பிரிவினையின் சோக வரலாறு - 8

1916 இல், லக்னோவில் காங்கிரசால் ஒரு மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டது.  அதே நாளில் அங்கே முஸ்லிம் லீகும் மாநாடு ஏற்பாடு செய்தது.  முஸ்லிம்களை எப்படியாவது ஒன்றிணைக்க வேண்டும் இந்த சுதந்திர போராட்டத்தில் என்று முனைந்தவர்களில் திலகரும் ஒருவர்.  அப்போது திலகர் சொன்னார் நமது கூட்டம் ஏற்பாடு செய்யப்படும் இடம் லக்னோ அல்ல, IT IS lUCK NOW அதாவது அதிர்ஷ்டம் இங்கே இருக்கிறது என்றார்.

இவ்வளவு பெரிய போராளி.  இருந்தாலும் பெரிய அளவில் சறுக்கியது முஸ்லிம்களோடு சேர்ந்துதான் நாம் போராடவேண்டும் என்று எண்ணியது.  முஸ்லிம்களை சேர்க்கலாம், முயற்சிக்கலாம்.  நிறைய நல்லவர்கள் முஸ்லிம்களிலும் இருக்கிறார்கள்.  ஆனால் வரமாட்டேன் என்று சொல்பவரை கையை பிடித்து ஏன் இழுக்க வேண்டும்?  ஏன் சலுகை தந்தால்தான் வருவேன் என்று அவனும் சொல்லவேண்டும்?  தேசிய நீரோட்டத்தில் முஸ்லிம்களை இணைக்க காங்கிரஸ் படாதபாடு பட்டது.  பிரிடிஷார் ஏதாவது சலுகை வழங்குவார்கள்.  அவர்களுக்கு போட்டியாக காங்கிரசும் சலுகைகளை அறிவிக்க ஆரம்பித்தது. பிரிட்டிஷாரின் வலையில் விழ ஆரம்பித்தது.

1918 க்கு முன்னால் லால லஜ்பத் ராய், பிபின் சந்திர பால், பால கங்காதர் திலகர் இவர்களுடைய வழிகாட்டுதலில்தான் போராட்டம் கொடி கட்டி பறந்தது.  மிக குறுகிய இடைவெளியில் இந்த மூவரும் இறந்துவிட்டார்கள்.  இந்த அணியையே லால் - பால் - பால் என்று அன்புடன் அழைப்பர் மக்கள்.

அதன் பின் மொத்த அதிகாரமும் காந்திஜியின் கீழ் வந்தது.  1919 ஆம் ஆண்டு முதல் உலக யுத்தம் முடிவுக்கு வந்தது.  துருக்கிய சுல்தான் பேரரசை பிரிடிஷ்காரன் துண்டுதுண்டாக ஆக்கி உடைப்பதாக அறிவித்தான்.  கலீபா முறையையும் முடிவுக்கு கொண்டுவந்தான்.  அதன் வரை இஸ்ரேல், சிரியா, ஜோர்டான், இரான், இராக், துருக்கி, மத்திய கிழக்கு நாடுகள் என்று மாபெரும் சாம்ராஜ்யமாக இருந்ததை தூள் தூளாக உடைத்தான்.  இவர்கள் ஜெர்மனியோடு சேர்ந்து போரிட்ட்தின் கோபம் அவனுக்கு.

இதனால் அந்த நாடுகளுக்கு கோபம் வரவில்லை.  உலக நாடுகள் இதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.  ஆனால் இங்கிருக்கும் ஒண்ணும் அறியாத வெறி மட்டுமே கொண்ட முஸ்லிம்களுக்கு கோபம் வந்துவிட்டது.  இதை சும்மா விடகூடாது.  இவர்களை யாரென்று கூட அந்த கலீபாவுக்கு தெரியாது.  இவன் ஜாதி என்ன ஒன்றும் தெரியாது.  ஆனால் இவன் அவர்களை அப்படி தலையில் தூக்கி வைத்து கொண்டாடினான்.  உள்ளூர்காரன் கோபப்பட்டான்.  இதற்கு காங்கிரசின் உதவியை நாடினார்கள்.  நாங்கள் தனியாக போராட முடியாது.  நீங்களும் துணைக்கு வாருங்கள்.  நீங்கள் வந்தால் அதன் மதிப்பே தனி என்று காந்திஜிக்கு சாம்பிராணி போட்டார்கள்.  அவர்களாக நம்மை நாடி வந்து உதவி கேட்கிறார்கள்.  இது ஒரு நல்ல வாய்ப்பு என்றார் காந்திஜி. 

ஜின்னா இதை கடுமையாக எதிர்த்தார்.  இது துருக்கியின் பிரச்னை, நமக்கு சம்பந்தமே இல்லை என்று வாதிட்டார்.  காங்கிரஸ்காரர்கள் எதையும் கேட்கும் நிலையில் இல்லை.  காந்திஜியின் வாக்கே வேதம் என்று எண்ணினார்கள்.   அப்போது வானளாவிய அதிகாரம் தரும் கொடுமையான ரௌலட் சட்டம் அமலில் இருந்தது.  சில நாட்கள் முன்புதான் ஜாலியன்வாலா பாகில் ஜெனரல் டையர் அப்பாவி பொது மக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தி இருந்தான்.  ஒரு சிறிய சந்து மட்டுமே அதனுள் போக வழி.  வெளியே போக முடியாது அதை அடைத்தால்.  அவன் கொண்டு வந்த பீரங்கி உள்ளே நுழையவில்லை.  ஆகவே, தான் அழைத்து வந்திருந்த 2 ரெஜிமெண்டை சேர்ந்த 50 ராணுவ வீரர்களை உள்ளே போக சொன்னான்.  TAKE  POSITIONS  என்றான்.  25 பேர் நின்றார்கள், 25 பேர் அமர்ந்தார்கள்.  FIRE என்றான்.  நிறுத்தாமல் சுட்டார்கள்.  அரசாங்க கணக்குப்படி இறந்தது 400 சொச்சம்.  உண்மையான கணக்கு 1500 க்கு அதிகம். 



1940 மார்ச் 13 – ஏறக்குறைய இருபது ஆண்டுகள் – சரியாக ஒரு மாத காலகட்ட இடைவெளி. காக்ஸ்டன் ஹாலில் கிழக்கு இந்திய அசோசியேஷன் மற்றும் ராயல் சென்ட்ரல் ஏஷியன் சொசைட்டி ஆகியவற்றின் கூட்டத்தில் பங்கு பெற வந்திருந்த சீமான்களில் முக்கியமானவனாக வந்திருந்தான் டயர். கூட்டத்தில் கையில் ஒரு புத்தகத்துடன் உதம் சிங். புத்தகத்துக்குள் கச்சிதமாக வெட்டப்பட்ட பக்கங்களுக்குள் 0.45 ஸ்மித் வெல்ஸன் கைத்துப்பாக்கி.

பஞ்சாபில் தாம் செய்த செயலுக்காகத் (ஜாலியன் வாலாபாத் படுகொலை)  தாம் சிறிதளவும் வருத்தப்படவில்லை என்றும் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் நீடித்த வாழ்வுக்காக பஞ்சாபில் தாம் செய்ததை ஆப்பிரிக்காவிலும் தாம் வாய்ப்பு கிடைத்தால் அரங்கேற்றச் சித்தமாக இருப்பதாகவும் தன் பேச்சில் டயர் குறிப்பிட்டான்.

இத்தருணத்தில் கூட்டத்தில் இருந்த உத்தம் சிங் எழுந்தார். “அந்த வாய்ப்பு உமக்கு கிடைக்கப்போவதில்லை சர். மைக்கேல் டயர் அவர்களே” எனக் கூறியபடி துப்பாக்கியை எடுத்தார். உதம் சிங்கின் குறி தவறவில்லை முதல் குண்டு அவன் மார்பையும் இரண்டாம் குண்டு அவனது சிறுநீரகத்தையும் சிதைக்க, தாக்கப்பட்ட மைக்கேல் டயர் அங்கேயே மரணம் அடைந்தான். இந்திய அரசு செக்ரட்டரியான செட்லாண்ட் காயமடைந்தார். லாமிங்டன் என்கிற பிரிட்டிஷ் பிரபுவின் கை சிதறிப் போனது.

சிரித்த முகத்துடன் கைதானார் உதம் சிங். காவல் நிலைய விசாரணையில் உதம் சிங் தமது பெயராக “ராம் முகமது சிங் ஆஸாத்” என கூறினார். குறுகிய மதவாதம் நாட்டை உலுக்கியபடி இருந்த காலகட்டத்தில் அவரது இந்த பெயரே குறுகிய எல்லைகளைக் கடந்த பாரதிய தேசியம் எழும்புவதைக் கட்டியம் கூறுவதாக அமைந்தது.

உதம் சிங்கின் செயல் இந்திய மக்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால் விடுதலைப் போராட்டத்தை அகிம்சைவழியில் கொண்டு செல்ல உறுதியேற்றிருந்த மகாத்மா மற்றும் பண்டித நேரு ஆகியோர் இதைக் கண்டித்தனர். “பைத்தியகாரத்தனமான செயல்” என்று கூறினார் காந்தியடிகள்.

பண்டித நேரு, மகாத்மா காந்தி ஆகிய இருவருமே இச்செயலினால் தமது இயக்கம் பிரிட்டிஷ் அரசிடம் நடத்திக்கொண்டிருக்கும் அரசியல் பேச்சுவார்த்தைகளுக்கு பங்கம் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தனர். ஆனால் பொதுக்கூட்டங்களில் மக்களிடையே உதம் சிங்கின் செயல் பெருமதிப்போடு பேசப்பட்டது. “தேசத்தின் மீதிருந்த களங்கம் துடைக்கப்பட்டுவிட்டது” என்பதே மக்கள் மனதின் கீதமாக இருந்தது. பல வெளிநாட்டுப் பத்திரிகைகள் உத்தம்சிங்கின் தீரச்செயலைப் பாராட்டின.

1940ம் ஆண்டு ஜாலியன்வாலாபாக் படுகொலை நினைவு தினத்தன்று உதம் சிங் ஜிந்தாபாத் எனும் கோஷம் எழுப்பப்பட்டது. அதே நேரம் பஞ்சாப் காங்கிரஸ் அரசு உதம் சிங்கின் செயலைக் கண்டித்தும் ஜெனரல் டயரின் மனைவிக்கு ஆறுதல் தெரிவித்தும் தீர்மானம் இயற்றியது. இந்நிலையில் காங்கிரஸ் பிதாமகர்களால் ஓரங்கட்டப்பட்டு அதனை விட்டு விலகிச் சென்று பாரத விடுதலைக்குப் போராடத் தீர்மானித்திருந்த நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் மட்டுமே உதம் சிங்கை வெளிப்படையாகப் பாராட்டினார்.

ஆக்கம்: ஆனந்த் வெங்கட்
உத்தம் சிங்கின் தகவல்கள்: தமிழ் ஹிந்து டாட் காம் 

Keerthivasan

About Keerthivasan -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :