Friday, December 26, 2014

Keerthivasan

கீதையின் முத்துக்கள் - 2

3. தத்தமது கடமையை ஆற்ற வேண்டியது அனைவருக்கும் அவசியமாகிறது. கடமையின் அடிப்படை என்ன?

எந்த ஒரு கடமையிலும், நான்கு குணாதிசயங்கள் அவசியமாகிறது.
1. கடமையை சிறப்புடனும், கடமை உணர்ச்சியுடனும் செய்தல்.
2. கடமை முழுவதையும் இறைவனுக்குச் சமர்ப்பித்தல்.
3. சமுதாயத்தில் உள்ள எளியோருக்கு சேவை புரிதல்.
4. சுய கட்டுப்பாடோடும், ஒழுக்கத்தோடும் தினசரி வாழ்க்கையில் இருத்தல்.
5. கடமைக்கு அடிப்படையான காரணிகள் எவை?

எந்த ஒரு செயலுக்கும் மூன்று அடிப்படை காரணிகள் தேவைப்படுகின்றன. அவை,
• அந்த செயல் குறித்த பூரண ஞானம்.
• அந்த செயலின் அவசியம்.
• செயலை ஆற்றும் கர்த்தா.

உதாரணமாக போருக்கு,

• போர்ப் பயிற்சியும், போர் குறித்த ஞானமும்.
• போரின் அவசியமும்
• போர் வீரனும் அவசியமாகும்.

ஒரு செயல் வெற்றிகரமாக முடிய, அதைச் செய்பவர், அதை ஆற்றும் வழிமுறைகளையும், செயலின் தன்மையையும் நன்கு அறிந்தவராயும் இருக்க வேண்டும்.


5. ஒரு கடமைக்கு அடிப்படை காரணி ஞானம் எனப்படும் அறிவு ஆகும். அத்தகைய முறையான அறிவை ஒருவர் எவ்வாறு தெரிவு செய்வது?
ஞானம் என்ற அறிவு மூன்று வகைப்படும்.


1. சத்வம் என்கிற முழுமையான சிறப்புற்ற அறிவு.
2. ரஜஸ் என்கிற அரைகுறை ஞானம்.
3. தமஸ் எனப்படும் தவறான அறிவு.

சர்வ வல்லமை பொருந்திய பரமாத்மா எங்கும் வியாபித்திருக்கிறார் என்ற உண்மையை உனர்ந்தவர்கள், அனைத்தும் பரமாத்மாவின் ஸ்வரூபம் என்ற சத்தியத்தை நம்புபவர்கள் சத்வம் என்ற முழுமையான அறிவைப் பெற்று சரியான செயல்களையே செய்கின்றனர்.

ஆன்மீக நம்பிக்கையும், இறைவன் மேல் பக்தியும் கொண்டவர்கள், இறைவன் எங்கும் இருக்கிறான், அனைவரும் இறைவனின் அம்சமே என்ற சத்தியத்தை உணராதவர்கள் பூரண ஞானம் அற்றவராகின்றனர். இவர்களின் செயல்கள் பூரணத்துவம் பெறுவதில்லை.

மிகவும் சாதாரண வாழ்க்கையை வாழ்ந்து இறைவனின் சர்வ வியாபித்தலை உணராது வாழ்பவர் முறையற்ற அறிவைக் கொண்டு தவறான செயல்களைச் செய்பவராகிறார்.
ரஜஸ், தமஸ் அறிவு கொண்டவர்களால் சமுதாயம் பயனடைவதில்லை. சத்வ குணம் பொருந்தியவர்கள் சமுதாயத்தின் ஆக்கம் குறித்த சிந்தனமே கொண்டிருப்பர்.

ஆக்கம்: விஷ்வலிங்க சூர்யா

Keerthivasan

About Keerthivasan -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :