Tuesday, May 26, 2015

Keerthivasan

ஒரு தத்வார்த்த பயணம் – 12 – கடவுளை மனிதன் படைத்தானா?

ஒரு தத்வார்த்த பயணம் – 12 – கடவுளை மனிதன் படைத்தானா?





 இந்தப் பதிவு பகுத்தறிவு ரீதியில் கடவுளைப் பற்றிச் சிந்திக்கும் பதிவென்று கொள்ளலாம்! 'பகுத்தறிவு' என்றால் ஏதோ வேண்டாத விஷயமல்ல! நான் சொல்லும் பகுத்தறிவு நம்ப ஊர் பகுத்தறிவு போல அல்லாது சிந்தனைகளின் அடிப்படையில் உள்ள விஷயம்! ஹிந்து மதத்தில் பகுத்தறிவும் ஒரு பிரிவாகவே உள்ளது!! ( ஹிந்து மதப் பகுத்தறிவாளர்களை ஜாபாலிஸ்டுகள் என்று அழைப்பர்!!

நாம் யாரும் இந்தக் கலியுகத்தில் கடவுளைக் கண்டிருக்க வாய்ப்பில்லை! சிலர் உணர்ந்திருக்கலாம் அனுபவங்களின் மூலம்! ஆனால் பகுத்தறிவு ரீதியில் கடவுள் என்னும் சக்தி ஒன்று கிடையாது அதனை மனிதன்தான் படைத்தான் என்னும் வாதம் உள்ளது! அந்த அடிப்படையிலும் மனோதத்துவ அடிப்படையிலும் இதைப் பற்றிச் சிந்திப்போம்!

மனிதன் வெளியில் பெரிய பலசாலி போலவும் எதற்கும் அஞ்சாதவன் போலவும் காண்பித்துக் கொள்கிறானே தவிர உண்மையில் அவன் வாழ்வில் பலப்பல முறைகள் பயந்து நடுங்கவே செய்கிறான்! அவனுக்கு மட்டுமே ஆறறிவு உள்ளது!! ஆறறிவற்ற மிருகங்களுக்கு பிறப்பு இறப்பு பற்றிய எந்த சிந்தனைகளும் கிடையாது!!ஆனால் ஆறறிவு உள்ள ஒரே ஜீவனாக உள்ள மனிதன் மட்டும் பிறந்தது முதலே மரணத்தைக் கண்டு பயப்படும் தன்மை உள்ளவனாகிப் போனான்! இதன் முக்கியக் காரணம் அவனுக்கு மரணத்துக்குப் பின் தான் என்ன ஆவோம் என்பது தெரியாததே!!

இரண்டாவது அவன் மனத்தால் உடலால் பலகீனமாக உணரும்போதெல்லாம் அவனை பயம் சூழ்ந்து கொள்கிறது!! அவன் கடும் நோயால் பாதிக்கப் படும் போதெல்லாம் இறந்து விடுவோமோ என்று அஞ்சி நடுங்குகிறான்!! அதனாலேயே அவனுக்கு தான் துன்பங்களாலும் நோய்களாலும் பாதிக்கப் படும்போது தன்னை விட அதிக சக்தி கொண்ட இயற்கையை விடவும் அதிக சக்தி மிக்க இயற்கையையும் கட்டுப்படுத்தும் வல்லமையுள்ள ஒரு அரவணைக்கும் சக்தி வேண்டும் என்று விரும்புகிறான்!! ( HE ALWAYS WANTS A SAVIOUR FOR HIM TO HAVE THE POWER TO REDUCE HIS SORROWS AND TO SHOW HIS GRACE ON HIM) அந்த சக்தியைத் தான் துதித்தால் அது தன்னை அரவணைத்து துன்பங்களில் இருந்தும் நோய்களில் இருந்தும் காக்கும் என்று நம்புகிறான்!! அது இயல்பாகவே பெரும் சக்தியும் அதே நேரம் கருணை வடிவுடனும் இருக்க வேண்டுமென்று கருதுகிறான்!! அதற்குக் 'கடவுள்' என்கிற பெயரிட்டு அதை வணங்கினால் தனக்கு இறப்புக்குப் பின்னால் நன்மைகள் கிடைக்கும் என்றும் நம்புகிறான்!!

இவ்வாறுதான் கடவுளின் அடிப்படையை பகுத்தறிவு மற்றும் மனோதத்துவ ரீதியிலான சிந்தனைகள் சொல்கின்றன!! கடவுள் பற்றிய ஆன்மீக ரீதியிலான சிந்தனையை அடுத்த பதிவில் சொல்கிறேன்!!

தொடரும்

Keerthivasan

About Keerthivasan -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :