Monday, May 25, 2015

Keerthivasan

ஒரு தத்வார்த்த பயணம் – 10 – ஹிந்து மதத்தில் பல தெய்வ வழிபாடு

ஒரு தத்வார்த்த பயணம் – 11 – பல தெய்வ வழிபாடு




பல தெய்வ வழிபாடு:

இந்த விஷயம் ஒன்றே இதர மதத்தவர்களாலும் இந்த மதத்திலேயே உள்ள பகுத்தறிவுவாதிகள் என்று சொல்லிக் கொள்பவர்களாலும் ஹிந்து மதத்தைப் பற்றி இழிவாகப் பேச ஒரு காரணமாக உள்ளது!

உலகின் இதர பெருமதங்களாக உள்ள கிறிஸ்தவ மதத்திலும் இஸ்லாமிலும் ஒரே கடவுள் வழிபாடு உள்ள சூழலில் ஹிந்து மதத்தில் இவ்வாறு பல கடவுளர் உள்ளது பலராலும் கேலிக்கு ஆளாக்கப் படும் விஷயமாக உள்ளது! இதனுடைய உண்மையான தாத்பர்யம் என்ன என்பதைக் காணுமுன் அவ்வாறான தெய்வங்களின் பட்டியலைப் பற்றிக் காண்போம்!

கிறிஸ்தவ மதத்தில் எசுவன்றி மாதாவை மட்டுமே வழிபாடு செய்கின்றனர்! அதே போல இஸ்லாத்தில் அல்லவன்றி நபிகள் நாயகம் மட்டுமே வணங்கப் படுகிறார்! ஆனால் ஏன் ஹிந்து மதத்தில் இத்தனை தெய்வங்கள்?

ஒரு சிலர் முப்பத்துமூன்று கோடிக் கடவுளர் உள்ளதாகக் கதை விடுகின்றனர்! நமது மதத்தில் முப்பத்து மூன்று கோடி தேவர்கள் உள்ளதாகத்தான் சொல்லியிருக்கிறதே தவிர அவர்களுக்கு பெயரிட்டு வணங்குவதெல்லாம் கிடையாது! ஆனால் யாகங்களில் அனைத்து தேவர்களுக்கும் என்று கூறி ஆகுதி தரும் பழக்கம் மட்டுமே உண்டு!

இதைத் தவிர ஹிந்து மதக் கடவுளர் என்று பார்த்தால் பிரம்மா, விஷ்ணு, சிவன் என்னும் முக்கடவுளர் மற்றும் சரஸ்வதி, லக்ஷ்மி மற்றும் பார்வதி அவர்தம் மனைவியராகவும் சொல்லப் பட்டுள்ளனர். அதே போல பிரம்மனின் மகனாக நாரதரும், சிவபெருமானின் மகன்களாக பிள்ளையாரும் முருகப் பெருமானும் சொல்லப் படுகின்றனர்! அதுவன்றி மகாவிஷ்ணுவின் தங்கையாக துர்க்கையும் சக்தியின் கோர வடிவாக காளியும் சொல்லப்படுகின்றனர்! இதுவன்றி விஷ்ணுவின் தசாவதாரக் கடவுளரும் ஹனுமானும் கடவுளராக கோவில்களில் வழிபடப் படுகின்றனர்!

இன்னமும் கிராமங்களில் காவல் தெய்வங்களாக அய்யனாரும் வீரனும் அதேபோல சில கடவுளரும் வணங்கப் படுகின்றனர்!! இந்தக் கடவுளர் அனைவருமே பெரும்பாலும் மதத்திலுள்ள அனைத்துப் பிரிவு மக்களாலும் வணங்கப் படுகின்றனர்!!

பல கடவுள் வழிபாடு எப்படி வந்திருக்கும்? :

இதர மதங்களில் எல்லாம் ஒரு கடவுள் வழிபாடு இருக்க ஹிந்து மதத்தில் மட்டும் பல கடவுளர் வழிபாடு எப்படி வந்திருக்கக் கூடும்? இந்த விஷயம் பற்றிச் சிந்திக்கையில் ஒரே ஒரு சாதாரண விஷயம் மட்டுமே என் மனதில் தென்படுகிறது!!

ஹிந்து மதத்திலும் கூட அறுதிக் கடவுளாக சொல்லப் படும் 'பரப்பிரம்மம்' என்பது ஒரே கடவுள்தான்!! மும்மூர்த்திகள் உள்ளிட்ட இதரக் கடவுளர் அனைவருமே பரப்ப்ரம்மத்தின் விரிவாகத்தான் சொல்லப் படுகின்றனர்!! ஆனால் பரப்பிரம்ம வழிபாடு என்பது நமது மத மக்களுக்கு பெருமளவில் எற்றதாக் இல்லை! இதன் முக்கியக் காரணம் பரப்ரம்மம் என்பது உண்மையில் உருவமற்ற, குணங்களற்ற பிரபஞ்சமுழுதும் விளங்கி நிற்கும் சக்தியே ஆகும்! ஆனால் பரப்ரம்மமே கூட நீங்கள் எல்லாரும் எந்தெந்த வடிவில் எந்தெந்தத் தெய்வங்களை வணங்கினாலும் அது என்னையே வணங்கியதாகும் என்றும் சொல்லும் கருத்தும் ஹிந்து மதத்தில் உள்ளது!! பரப்ரம்ம வழிபாடு என்பது பொதுக்கருத்தாகப் பார்த்தால் மன முதிர்ச்சியடைந்த நிலையில் ஞானம் முதிர்ந்த நிலையிலேயே விரும்பப் படும் என்று கருதுகின்றேன்!

இதன் காரணமாகவே நம் மக்கள் பல கடவுள் வழிபாடுகளை மேற்கொண்டனர்! இன்னமும் பொருத்தமான விஷயம் ஒன்றும் உள்ளது! ஆரம்பக் காலம் முதல் 18 ஆம் நூற்றாண்டு வரையிலும் கூட ஒரு குடும்பத்து மக்கள் ஒரே ஊரிலேயே இருந்து ஒரே தொழிலைக் குடும்பமாக மேற்கொண்டனர்! அவர்களெல்லோரும் ஒரே வீட்டிலேயே கூட்டுக் குடும்பமாக இருந்தனர்! இன்று போலன்றி அந்தக் காலங்களில் ஒரே ஊரில் ஒரே குடும்பத்தை சேர்ந்த உறவினர் வெவ்வேறு வீடுகளில் வசிப்பது கவுரவக் குறைச்சலாகவே கருதப் பட்டது! இது அந்தக் காலத்து அரண்மனை போன்ற வீடமைப்பைப் பார்த்தாலே தெரியும்! ஒரு வீடு என்றால் அங்குள்ள குழந்தைக்கு முப்பாட்டன், பாட்டன்மார்கள், தகப்பன், சிற்றப்பன், பெரியப்பன், மற்றும் அவர்தம் உறவினர்கள், மாமன்கள், தாய், தந்தை, சகோதர சகோதரிகள் கொண்ட பெரும் கும்பலாக அந்தக் காலங்களில் இருந்தது! இதையே அந்தக் கால பாரத மக்கள் விரும்பவும் செய்தனர்!

அதே அடிப்படையில்தான் கடவுளருக்கும் தனித்தனி குணங்கள், பொறுப்புக்கள் தந்து படைத்தல், காத்தல், அழித்தலுக்கு மும்மூர்த்திகள் மற்றும் செல்வத்துக்கு, கல்விக்கு, சக்திக்கு பெண் கடவுளரான லக்ஷ்மி, சரஸ்வதி மற்றும் சக்தி யையும் , ஞானத்துக்கு பிள்ளையாரையும், வீரத்துக்கு முருகப் பெருமானையும் இன்னமும் அதேபோல பலப் பல கடவுளரையும் உண்டாக்கி அவர்களுக்குள் உறவுமுறையும் வைத்து வணங்கும் பழக்கத்தை மேற்கொண்டனர் என்றுதான் கருத இடமுள்ளது!! இந்த பல கடவுளர் வழிபாட்டிற்கு இயற்கை சக்திகளுடன் உள்ள தொடர்பை இன்னொரு பதிவில் சொல்கிறேன்!!

தொடரும்

Keerthivasan

About Keerthivasan -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :