Sunday, July 12, 2015

Keerthivasan

சைவ சித்தாந்தம்: நான் புரிந்து கொண்டது. – 9

திருச்சிற்றம்பலம்.

மனம்.வாக்கு,காயம் மூன்றையும் இறைவனுக்குத் தொண்டு செய்யும் அடிமையாக்கச் சித்தாந்தம் நான்கு நெறிகளைக் கூறும்.


 இறைவனுக்கு மனமுவந்து
1. உடலால் தொண்டு செய்தல் - சரியை
2. வாயாலும் உடலாலும் செய்தல் - கிரியை
3. அந்தக்கரணங்களால் செய்தல் - யோகம்
4. சிந்தித்து தெளிந்து மெய்ப்பொருள் காண்பது - ஞானம் 


இப்பதிவில் சரியையைப் பற்றி காண்போம்.

சரியை:

மனமுவந்து, உடலால் செய்யும் தொண்டுகள் காலத்திற்கும் சூழ்நிலைக்கும் இடத்திற்கும் தக்கவாறே அமையும்.பண்டைய காலத்தில் திருக்கோவிலைக் கூட்டிப்பெருக்கிச் சாணத்தால் மெழுகுதல்,பூந்தோட்டம் அமைத்தல்,மலர் மாலை கட்டுதல்,திருவிளக்கு ஏற்றல், பூசைக்கு வேண்டிய பொருள்களைச் சேகரித்து கொடுத்தல்,துதிப்பாடல் பாடுதல்,சிவனடியார்களுக்குப் பணிவிடை செய்தல் ஆகியவை சரியை எனக்கருதினர்.இன்றைய சூழ்நிலைக்கும் வாழ்க்கை முறைக்கும் இது எந்தளவு பொருந்தும் என்பதை நாம் சிந்திக்க வேண்டும்.
இக்காலத்தில் நம்மால் முடிந்த வகையில், கோயில் துப்புரவு பணியாட்கள், ஓதுவார்கள், குருக்கள் கவலையின்றி வாழ உதவ வேண்டும். திருக்கோயில்களை அசுத்தப்படுத்தாது இருத்தல் வேண்டும்.
சரியை தொண்டில் உயிரினங்களுக்கு உதவுதல் சிறந்தது என்று திருமூலர் கூறுகிறார்.

படமாடும் கோயில் பகவர்க்கு ஒன்று ஈயில்
நடமாடும் கோயில் நம்பர்க்கு அங்கு ஆகா
நடமாடும் கோயில் நம்பர்க்கு ஒன்று ஈயில்
படமாடும் கோயில் பகவர்க்கு அது ஆமே
(திருமந்திரம்-1857)
திருநீலகண்ட குயவனார் திருவோடு செய்தும்,திருக்குறிப்புத்தொண்டர் சலவைச் செய்தும்,அமர்நீதி நாயனார் துணிகள் கொடுத்தும் இளையான்குடிமாறனார் உண்டி கொடுத்தும் சரியை செயல் மூலம் பேரின்ப நிலை எய்தினர்.

அடுத்த பதிவில் கிரியையைப் பற்றிச் சிந்திப்போம்.

திருச்சிற்றம்பலம்.

பதிவை பற்றிய உங்கள் கருத்துக்களுக்கு: Janarthanam Karthik

Keerthivasan

About Keerthivasan -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :