Sunday, July 12, 2015

Keerthivasan

பெண்ணால் முடியும் தம்பி தம்பி...

பெண்ணால் முடியும் தம்பி தம்பி... 

Kalyan Raman​




ஏனோ இந்த சமுதாயத்தில் காதலித்தே ஆகவேண்டும் என ஒரு வியாதி தொற்றிக்கொண்டு இருக்கும் அளவுக்கு நல்ல உறவுகளை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்ற உந்துதல் இல்லை...

தன்னைப் பார்த்தால் காதல், பின்னால் திரிந்தால் காதல் என நினைக்கும் பெண்கள், அவனிடம் நல்ல குணநலன்கள் வேண்டும் என்ற அடிப்படை விதிமுறையை தளர்த்தி எதையும் பிறகு பார்த்துக்கொள்ளலாம், சரி செய்து கொள்ளலாம் என்ற சமரசப் போக்கை கடை பிடிக்கின்றனர். அதன் விளைவு திருமணத்திற்குப்பின் மோதல்கள்...

காதலில் எதிர்ப்பார்ப்புகள் அதிகம் அதனால் ஏமாற்றங்களும் அதிகம் என்பதே ஒரு பொதுப்படையான படிப்பினை. மாறாக குடும்பங்களால் ஏற்பாடு செய்யப்படும் திருமணங்களில் அடிப்படை எதிர்ப்பார்ப்புகள் இருந்தாலும் புதிய உறவை புரிந்துகொள்ளும் முயற்சிகள் அதிகமாக இருப்பதால் எதிர்ப்பார்ப்புகள்-ஏமாற்றங்களின் அளவி குறைவே...

அதன் விளைவாகவே பெரும்பான்மை காதல்கள்(?!) தோற்றுப் போகின்றன, ஆச்சரியமான விதத்தில் குடும்பம் ஏற்பாடு செய்யும் திருமணங்கள் வெற்றி பெருகின்றன... இதைப் பார்க்கும்போது சதவிகிதத்தை நாம் பார்க்க வேண்டும் என்பது எனது வேண்டுகோள்.

ஏதோ நான் காதலுக்கு எதிரானவன் என உடனடியாக முடிவு செய்துவிட வேண்டாம். இது ஒரு சமூக அலசல் அல்லது வழிகாட்டி சிந்தனை அவ்வளவே...

காசு, வெளித்தோற்றத்தில் அழகு, பகட்டு, படாடோபம், சம்பளம் இவைகள் தான் இன்றைய காதலை நிர்ணயிப்பது காதல் என்ற வார்த்தைக்கு அவமானம் ஆனால் அதே இன்றைய காதலிம் நிதர்சனம்.

மாறாக வீரம், நேர்மை, சமரசமின்மை, சமூக அக்கறை, சிந்தனையில் தெளிவு இவற்றை தனது அடிப்படைகளாக கொண்ட இளைஞனை மணப்பேன் என பெண்க்ள் முடிவு செய்தால் அது ஒரு புதிய சமுதாய மறுமலர்ச்சிக்கு வழி வகுக்கும்...

பெண்மையின் எதிர்பார்ப்புக்காக மானைத் தேடி ஓடி இதிகாசங்களை உருவாக்கிய சமுதாயம் இது... புதிய சரித்திரங்களை பெண்களால், பெண்களால் மட்டுமே, பெண்களின் வரும்காலம் பற்றிய கற்பனை மற்றும் எதிர்பார்ப்புகளால் மட்டுமே படைக்க முடியும்

Keerthivasan

About Keerthivasan -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :