Sunday, July 12, 2015

Keerthivasan

திருமழபாடி – திருநாவுக்கரசர் தேவாரம் – பாடல் 6 மற்றும் 7

திருமழபாடி திருத்தலத்து இறைவன் மீது திருநாவுக்கரசு ஸ்வாமிகள் பாடிய பதிகப் பாடல்களை ஒவ்வொன்றாக அர்த்தத்துடன் அனுபவிப்போம்.


 பாடல் எண் : 6

தாமரையான் தன்தலையைச் சாய்த்தான் கண்டாய்
    தகவுடையார் நெஞ்சிருக்கை கொண்டான் கண்டாய்
பூமலரான் ஏத்தும் புனிதன் கண்டாய்
    புணர்ச்சிப் பொருளாகி நின்றான் கண்டாய்
ஏமருவு வெஞ்சிலையொன் றேந்தி கண்டாய்
    இருளார்ந்த கண்டத் திறைவன் கண்டாய்
மாமருவுங் கலைகையி லேந்தி கண்டாய்
    மழபாடி மன்னு மணாளன் றானே.

பொழிப்புரை :
மழபாடி மன்னும் மணாளன், பிரமனுடைய தலை ஒன்றனை நீக்கி நற்பண்புடையவர்கள் நெஞ்சினைத் தன் இருப்பிடமாகக் கொண்டு பூத்த மலர்களால் எல்லோராலும் வழிபடப்படும் தூயவனாய், எல்லோரும் சார்தற்குரிய பொருளாய் இருப்பவனாய், அம்புகள் பொருந்தக் கொடிய வில்லை ஏந்தியவனாய், நீலகண்டத் தெய்வமாய் விலங்குத் தன்மை பொருந்திய மானைக் கையில் ஏந்தியவனாய் உள்ளான்.



பாடல் எண் : 7

நீராகி நெடுவரைக ளானான் கண்டாய்
    நிழலாகி நீள்விசும்பு மானான் கண்டாய்
பாராகிப் பௌவமே ழானான் கண்டாய்
    பகலாகி வானாகி நின்றான் கண்டாய்
ஆரேனுந் தன்னடியார்க் கன்பன் கண்டாய்
    அணுவாகி ஆதியாய் நின்றான் கண்டாய்
வாரார்ந்த வனமுலையாள் பங்கன் கண்டாய்
    மழபாடி மன்னு மணாளன் றானே.
பொழிப்புரை:
மழபாடி மன்னும் மணாளன். நீராகவும் பெரிய மலைகளாகவும் ஆகி, ஒளியாகி, ஆகாயமும் ஆகி, நிலமாகி, ஏழ் கடலும் ஆகிச் சூரியனும் மேகமும் ஆகித் தன் அடியவர் எவரிடத்தும் அன்பனாய், நுட்பமான சக்தியாகி உலகுக்கு எல்லாம் காரணமாய்க் கச்சணிந்த அழகிய முலையை உடைய பார்வதி பாகனாய் உள்ளான்.


தொகுப்பு: Arul Sivasankaran

Keerthivasan

About Keerthivasan -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :