நாதுராம் கோட்சே வாக்குமூலம் – குற்றப்பத்திரிகைகான மறுமொழி – 6
![]() |
Veer Savarkar |
கோட்சே வாக்குமூலம் – 6
26. பக்தி நிறைந்த ஒரு பிராமணக் குடும்பத்தில் பிறந்த நான், உணர்வால் இந்து
மதத்தையும், இந்து வரலாற்றையும், இந்துப் பண்பாட்டையும் போற்றி
வந்தேன். இந்துத்துவம் முழுமைக்காகவும் நான் உண்ர்ச்சிப்பூர்வமான கர்வம்
கொண்டிருந்தேன். இருந்தபோதும் நான் வளர்ந்தபின்னர் அரசியல் அல்லது மதம்
சார்ந்த எந்தக் கொள்கைக்கும் மூடத்தனமான பற்றுவைத்துத் தலையிட்டுக்
கொள்ளாமல் சுதந்திரமாக சிந்திக்கும் போக்கை வளர்த்துக் கொண்டேன். அதனால்
தான் நான் தீண்டாமை, பிறப்புசார்ந்த சாதி அமைப்பு ஆகியவற்றை ஒழிப்பதற்கு
தீவிரமாக பணியாற்றினேன். நான் வெளிப்படையாக சாதி எதிர்ப்பு இயக்கத்தில்
சேர்ந்து, எல்லா இந்துக்களும் சமூக, மத உரிமைகளில் சமநிலையில் நடத்தப்பட
வேண்டும் என்றும், ஒரு குறிப்பிட்ட சாதியில் அல்லது தொழிலில் எதேச்சையாக
பிறந்ததற்காக அல்லாமல், அவர்களுடைய தகுதிய அடிப்படையில் மட்டும் உயர்வாகவோ, தாழ்வாகவோ கருதப்படல் வேண்டும் என்றும் கூறிவந்தேன்.
ஆயிரக்கணக்கான
இந்துக்களும்,
பிராமணர்களும், க்ஷத்திரியர்களும், வைசியர்களும், சமரர்களும், பங்கிகளும் சாதி
விதிகளை உடைத்துவிட்டு மற்றவர்களோடு ஒன்றாக உணவருந்த ஏற்ப்படுத்திய சாதி
எதிர்ப்பு விருந்துகளில் நான் பகிரங்கமாக பங்கு கொண்டேன்.
27. தாதாபாய் நௌரோஜி, விவேகானந்தர், கோகலே, திலகர்
ஆகியோரின் நூல்களையும், இந்தியாவின் பண்டைய வரலாறு, நவீன வரலாறு, உலக
நாடுகளில் பிரபலமான நாடுகளான இங்கிலாந்து, பிரான்சு, அமெரிக்கா, ரஷ்யா போன்ற
நாடுகளின் வரலாற்று நூல்கள் ஆகிய எல்லாவற்றையும் நான்
படித்தேன். அதுமட்டுமின்றி, சோஷலிசம், கம்யூனிசம் ஆகியவற்றின் நடப்பு
சித்தாந்தங்களையும் பொறுமையுடன் நன்றாக படித்தேன். ஆனால் எல்லாவற்றுக்கும்
மேலாக, வீரசவர்க்கரும், காந்திஜியும் என்னவெல்லாம் எழுதினார்களோ, பேசினார்களோ
அவற்றையெல்லாம் கூர்ந்து படித்தேன். என் மனதில் இந்த இரு சித்தாங்களும்
கடந்த 50 ஆண்டுகளாக வேறு எந்தவொரு காரணியும் செய்ததைவிட அதிகமாக நவீன
இந்தியாவின் எண்ணத்தையும், செயலையும் வடிவமைப்பதில் தம் பங்களிப்பைச்
செய்துள்ளன.
28. இத்தகைய படிப்பும், சிந்தனையும், எனது முதல் கடமை எல்லாவற்றுக்கும் மேலாக
இந்துத்துவத்துக்கும், இந்து மக்களுக்கும் ஒரு நாட்டுப்பற்றாளனாக, மனித
இரக்கம் உடையவனாகத் தொண்டாற்ற வேண்டுவதுதான் என்று நம்ப வைத்தன. 30 கோடி
இந்துக்களுக்கு விடுதலை பெறுவதும், அவர்களுடைய நியாயமான நலன்களைக் காத்து
நிற்பதும், மனித இனத்தின் ஐந்தில் ஒரு பங்குக்கு சுதந்திரமும், நல்வாழ்வும்
அளிப்பதாக அமையும் என்பது உண்மையல்லவா? இந்த உறுதிப்பாடு என்னைப் புதிய
இந்து சங்கத்தார் சித்தாந்தத்திலும், செயல்திட்டங்களிலும் இயல்பாக ஈடுபட
வைத்தது. என் தாய்நாடான இந்துஸ்தான் தேசிய விடுதலை பெறவும், அதனைப்
பாதுகாக்கவும், மனித சமுதாயத்துக்கு இந்துஸ்தான் உண்மையான சேவை செய்யவும்
இவற்றால் மட்டுமே இயலும் என்று நான் நம்பினேன்.
29. நான்
ஆர்.எஸ்.எஸ்.ஸில் பல ஆண்டுகள் பணி செய்திருக்கிறேன். பின்னர் இந்து
மகாசபையில் சேர்ந்து, அதனுடைய தொன்மையான இந்துக் கொடியின் கீழ் ஒரு வீரனாகப்
போராட என்னை ஆட்ப்படுத்திக் கொண்டேன். இந்தச் சமயத்தில் வீர சாவர்க்கர்,
இந்துமகா சபையின் தலைமைக்குத் தேர்ந்தெடுக்கப்படார். அவருடைய காந்த
ஈர்ப்புத் தலைமையிலும், சூறாவளிப் பிரச்சாரத்திலும், இந்து சங்கத்தார்
இயக்கம் முன் எப்போதுமின்றி மிகுந்த மின்னாற்றலும், உயிர்த் துடிப்பும்
பெற்றது. இலட்சக்கணக்கான இந்து சங்கத்தார்கள் அவரை தேர்ந்த
கதாநாயகனாகவும், இந்து செயல் நோக்கத்துக்கு உண்மையான ஆதரவாளராகவும்
பார்த்தனர். நானும் அவர்களில் ஒருவன். மகாசபை நடவடிக்கைகளில் நான்
ஈடுபாட்டோடு இயங்கினேன். ஆகவே சாவர்க்கர் அவர்களிடம் தனிப்பட்ட தொடர்பு
கிடைத்தது.
30. பின்னர் என்னுடைய நண்பரும், இந்து செயல்
நோக்கத்தில் இணைத்தொண்டருமான ஆப்தேயும், நானும் இந்து சங்கத்தார்
இயக்கத்துக்கு அர்ப்பணிப்பதற்காக ஒரு நாளிதழைத் தொடங்க முடிவு
செய்தோம். புகழ்பெற்ற இந்துசங்கத்தார் தலைவர்கள் பலரை நாங்கள் சந்தித்து
அவர்களுடைய ஆதரவையும், நிதியுதவியையும் பெற்றுக்கொண்டு, மகாசபையின் தலைவரான
வீர சவர்க்கரைச் சந்தித்தோம். அவரும் எங்கள் செயல்த்திட்டத்துக்கு ஆதரவு
கூறி, தேவைப்படும் முதலுக்கு அவருடைய பங்காக பதினைந்து ஆயிரம் ரூபாயைக்
கொடுத்து, ஒரு வரையறுத்த நிறுமத்தைக் கூடிய சீக்கிரத்தில் பதிவு
செய்து, அவருடைய முன்பணத்தைப் பங்குகளாக குறிப்பிட்ட எண்ணிக்கையில் மாற்ற
வேண்டும் என்று நிபந்தனை விதித்தார்.
31. அதன்படியே நாங்கள் "டெய்லி அக்ரனி" என்ற மராத்தி நாளிதழைத்
தொடங்கினோம். கொஞ்ச காலம் சென்று ஒரு வரையறுத்த நிறுமம் பதிவு
செய்யப்பட்டது. வீர சவர்க்கரும், மற்றவர்களும் கொடுத்த முன் பணங்கள் ரூ.500
மதிப்புடைய பங்குகளாக மாற்றம் செய்யப்பட்டன. அதன்
இயக்குனர்களும், நன்கொடையாளர்களும் தலைமையான, மதிப்புக்குரிய
கனவான்களாவர். சேத் குலாப் சந்த் (ஸ்ரீமான் சேத் வால்சந்த் ஹீராசந்த்ஜியின்
சகோதரருள் ஒருவர்), ஷிங்ரே (முன்னால் போர் அமைச்சர்), கோலாப்பூர் பட உலகக்
கனவான் ஸ்ரீமான் பால்ஜீ பெந்தார்கர் மற்றும் பலர் அவர்களுள்
அடங்குவர். ஆப்தேயும், நானும் நிறுமத்தின் நிர்வாக இயக்குனர்களாக
இருந்தோம். இதழின் கொள்கைக்கு முற்றிலும் பொறுப்பான ஆசிரியராக நான்
இருந்தேன். பல ஆண்டுகளாக, அரசியல் சட்டத்துக்குக் கட்டாயமாக உட்பட்டு இதழை
நடத்தி வந்தோம். பொதுவாக இந்து சங்கத்தார் கொள்கையை ஆதரித்து வந்தோம்.
நன்றி: சாலிய மஹரிஷி சாலியர்