Saturday, August 1, 2015

Keerthivasan

நாதுராம் கோட்சே வாக்குமூலம் – குற்றப்பத்திரிகைகான மறுமொழி – 8

நாதுராம் கோட்சே வாக்குமூலம் – குற்றப்பத்திரிகைகான மறுமொழி – 8

Dead and wounded after the 'Direct Action Day'
which developed into pitched battles as Muslim and Hindu
mobs rioted across Calcutta in 1946, the year before independence

கோட்சே வாக்குமூலம் – 8

37. ஆனால் இந்த ஆர்ப்பாட்டம் பற்றிய அறிக்கயை வீர சவர்க்கர் படித்தபோது, எங்கள் முயற்சியைப் பாராட்டுவதற்க்குப் பதிலாக, என்னைத் தனியாக அழைத்து, ஒழுங்கீனமான இத் திட்டத்துக்காக என்னைக் குறை கூறினார். இவ்வளவுக்கும் இந்தப் போராட்டம் அமைதியாகத்தான் நடந்தது. அவர் சொன்னார்" உங்களுடைய கட்சிக் கூட்டங்களிலும் தேர்தல் சாவடிகளிலும் ஒழுங்கீனமான நடத்தையினால் காங்கிரஸார் புகுந்து குழப்புவதை நான் கண்டிப்பதைப் போலவே, இந்து சங்கத்தார் செய்யும் ஜனநாயகமற்ற நடத்தையையும் நான் கண்டித்தாக வேண்டும். இந்து எதிர்ப்புப் போதனைகளை காந்திஜி அவருடைய பிரார்த்தனைக் கூட்டங்களில் போதித்தார் என்றால் நீங்கள் உங்கள் கட்சிக் கூட்டங்கள் நடத்தி அவருடைய போதனைகளை கண்டிக்க வேண்டும். நமக்குள்ளாக வேறுபட்ட எல்லாக் கட்சியினரும் பிரச்சாரத்தை சட்டதிட்டங்களின் படியே கண்டிப்பாக நிகழ்த்த வேண்டும்."

38. இதற்கு பின்னர், இந்தியாவின் பிரிவினை உண்மையாகவே முடிவு செய்யப்பட்டபோது, இரண்டாவது முனைப்பான நிகழ்ச்சி இடம் பெற்றது. இந்து மகாசபையின் ஒரு குழுவினர், புதிய நாட்டில் உறுதியாக அரசுப் பொறுப்பேற்க இருக்கும் காங்கிரஸ் அரசின் மீது இந்து மகாசபையின் மனப்பான்மை எப்படி இருக்க வேண்டும் என்பதை அறிந்து கொள்ள விரும்பினர். இந்தியாவின் மீதியிருக்கும் பகுதியைப் பற்றி கவலை கொள்ளவில்லை. வீரசவர்க்கரும், இந்துமகாசபையின் மற்ற உயர்நிலைத் தலைவர்களும் உடனடியாகவும், அழுத்தமாகவும் மறுமொழி கூறினர். விடுதலை பெற்ற இந்திய நாட்டை ஆட்சிசெய்ய அமைக்கப்பட்ட எந்த இந்திய அரசும் ஒரு கட்சியின் அரசாகக் கண்ணோட்டமிடப்படக் கூடாது. ஒரு காங்கிரஸ் அரசாங்கம் என்று கருதாமல், இந்துஸ்தானின் தேசிய அரசாகக் கருதி, மதித்து, கீழ்ப்படிய வேண்டும். பாக்கிஸ்தான் உருவாவதற்கு எவ்வளவுதான் வருத்தம் தெரிவித்தபோதும், அவர்களுடைய எதிர்கால நோக்கம், புதிதாகப் பிறந்துள்ள விடுதலை பெற்ற இந்திய அரசுக்கு உண்மையான, முழுமையான ஆதரவு அளிப்பதேயாகும். புதிதாக வென்ற சுதந்திரத்தை இம்முறையில் மட்டுமே பாதுகாத்துக் கொள்ள முடியும். இந்திய அரசைக் கீழறுக்க முயலும் எந்த முயற்சியும் உள்நாட்டுப் போரைத் தோற்றுவித்து, இந்தியா முழுவதையும் பாகிஸ்தானாக்க எண்ணும் முஸ்லிம்களின் பாவகரமான இரகசிய நோக்கத்தை ஈடேறச் செய்துவிடும்.

39. என்னுடைய நண்பர்களும், நானும் எதையும் ஏற்றுக் கொள்ள இயலாமல் திரும்பினோம். அப்போது எங்கள் நெஞ்சமெல்லாம் நிறைந்த உணர்வுகளின் படி வீர சவர்க்கரின் தலைமைக்கு விடைபெறவேண்டிய தருணம் வந்துவிட்டதையும், எங்கள் எதிர்காலக் கொள்கை, செயல்த்திட்டங்களில் அவரை கலந்தாலோசிப்பதை நிறுத்த வேண்டும் என்பதையும், எங்கள் எதிர்காலத் திட்டங்கள் பற்றி இனி அவரிடம் பேசவே கூடாது என்பதையும் உணர்ந்தோம்.

40. அதற்கு சற்றுப் பின்னால், பஞ்சாபிலும், இந்தியாவின் மற்ற பகுதிகளிலும் முஸ்லீம் மதக் கலவரம் பயங்கரமாக வெடித்தெழுந்தது. காங்கிரஸ் அரசாங்கம் அடக்குமுறையையும், வழக்குப் போடுவதையும் தொடங்கியது; பீகார், கல்கத்தா, பஞ்சாப், இதர பகுதிகளில் முஸ்லீம் வன்முறையை எதிர்க்கத் துணிந்த இந்துக்கள் மீதே துப்பாக்கிச்சூடும் நடத்தியது. எங்கள் மோசமான அச்சமெல்லாம் உண்மையாகி விட்டதாகத் தோன்றியது. என்றாலும், 1947 ஆகஸ்ட் 15 ஒளி வெள்ளத்திலும், திருவிழாக் கோலத்திலும் கொண்டாடப் படுவதைக் காண எங்களுக்கு எவ்வளவு வேதனையாகவும், வெட்கக் கேடாகவும் இருந்தது! பஞ்சாப் முழுவதும் முஸ்லிம்களால் பற்றி எரிந்து கொண்டிருந்தது; இந்துக்களின் குருதி ஆறுகளாக ஓடிக்கொண்டிருந்தது. என்னுடைய தூண்டுதலால், இந்து மகாசபையினர், திருவிழாக் கோலத்தையும், காங்கிரஸ் அரசையும் புறக்கணிக்க முடிவு செய்து, முஸ்லீம் தாக்குதலைத் தடுத்து நிறுத்த ஒரு போராட்டத் திட்டத்தை செயற்படுத்த முடிவு செய்தனர்.

41. இந்து மஹாசபையின் செயற்குழுக் கூட்டமும், அகில இந்திய இந்து பேரவைக் கூட்டமும் டெல்லியில் 1947 ஆகஸ்ட் 9 வாக்கில் நடத்தப்பட்டன. வீர சாவர்கர் தலைமை வகித்தார். ஆப்தேயும், மற்ற நண்பர்களும், நானும் கடைசி முயற்சி மேற்கொள்ள விரும்பினோம். மகாசபையையும், அதன் அனுபவம் மிக்க தலைவர்களான வீர சாவர்க்கர், டாக்டர். முகர்ஜி, எல்.பி.போபட்கர் போன்றோரையும், மற்றவர்களையும் எங்கள் கருத்துக்கு இணங்கச்செய்து ஒரு போராட்டத் தீர்மானத்தை நிறைவேற்ற முயன்றோம். மகாசபையின் செயற்குழு, எங்கள் ஆலோசனைகளின் படி, ஹைதராபாத்துக்கு எதிராக நடவடிக்கைக் குழு நியமிப்பதையோ, பிளவுபட்ட இந்தியாவில் உருவாக்கப்படும் புதிய நாட்டை ஆளவிருந்த காங்கிரஸ் அரசைப் புறக்கணிப்பதையோ ஏற்றுக்கொள்ளவில்லை. என் மனத்தின் படி பிளவுபட்ட இந்திய நாட்டை அங்கீகரிப்பது, சபிக்கப்பட்ட இந்தியாவின் சித்திரவதைக்கு உடந்தையாய் இருப்பதை ஒப்பாகும். ஆனால் அதற்குப் பதிலாக செயற்குழு ஒரு சாரமற்ற தீர்மானத்தை நிறைவேற்றியது. 1947 ஆகஸ்ட் 15 அன்று மக்கள் எல்லோரும் தங்கள் வீடுகளில் "பகவா"க்கொடியை ஏற்றுமாறு கேட்டுக் கொண்டது. வீர சாவர்க்கர் மேலும் ஒரு படி சென்று, சக்கரத்துடன் கூடிய மூவண்ணக்கொடி தேசியக்கொடியாக அங்கீகரிக்கப்பட வேண்டும் என்று உண்மையில் வற்புறுத்தினார். நாங்கள் அவருடைய மனப்போக்கை வெளிப்படையாக எதிர்த்தோம்.

Keerthivasan

About Keerthivasan -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :