Monday, October 26, 2015

Keerthivasan

ரத்தத்தில் முளைத்த என் தேசம் - 05

Englightened Master


 முகம்மது அவர்களின் போதனைகள் பலவும் பல மதங்களின் கலவையாக இருக்கிறது. யூதர்களின் பழைய ஏற்பாட்டை முகம்மது அவர்கள் தன்னுடைய மார்கத்திற்கு முன்னோடியாக வைத்தது அனைவரும் அறிந்ததே, ஆனால் அரேபியாவின் பூர்விக மதமான பாகன்களின் பழக்க வழக்கங்கள் மற்றும் சடங்குகள் மிகத் தெளிவாக இஸ்லாத்தில் பின்பற்றப் படுகின்றன என்பது பலரும் அறியாதது. வஹாபிய கூட்டங்களால் பெரிதும் மறைக்கப்படுகின்ற உண்மை இது.. அவற்றை சற்று விரிவாக பார்ப்போம்.

அரேபிய பாகன்கள் ரமலான் மாதத்தன்று உணவருந்த மாட்டார்கள், தண்ணீர் குடிக்க மாட்டார்கள், உடலுறவு வைத்துக் கொள்ள மாட்டார்கள். அதை சிறு மாற்றங்களுடன் பின்பற்ற வைத்தார் முகம்மது.

அரேபிய பாகன்கள் அல்லாவின் மகளான அல்ல‌த் ஐ தான் கருஞ்சதுர கல்லாக பாகன்கள் வழிபட்டார்கள். இந்த அல்லத்தின் உருவம் முதலில் அரேபியாவில் உள்ள தைஃப் எனும் இடத்தில் தான் வழிபடப்பட்டு வந்த‌து. இப்ன்-அல்-கல்பி (ibn-Al-Kalbi 819 CE) தன்னுடைய ‘The book of Idols’ எனும் புத்தகத்தில் இதை குறித்து தெளிவாக குறிப்பிடுகிறார். "அல்லத் தைஃப் நகரில் இருந்தது. அது ஒரு க்யூப் வடிவத்தில் இருந்த கல், அதற்கு யூதர்கள் பார்லி கஞ்சியை படைப்ப‌து வழக்கம். அந்த கருஞ்சதுர கல்லை "இப்ன் மலீக்" என்பவரின் பாதுகாப்பில் இருந்தது" இந்த கருஞ்சதுர கல் தான் பின்னர் தைஃபில் இருந்து மெக்காவில் நிறுவப்படுகிறது.

ஆனால் இது எப்படி புனைக்கப்பட்டது என்றால், ஆதாம் ஏவால் காலத்தில் சுவர்கத்தில் இருந்து ஒரு வெள்ளைக் கல் கீழே விழுந்ததாகவும், அது மனிதர்களின் பாவத்தை சுமந்து கருப்பாக மாறி விட்டதாகவும் சொல்லப்பட்டது. அதோடு இந்த காபாவானது ஆப்பிரகாம் மற்றும் இஸ்மாயிலால் கட்டப்பட்டது என்று "அல்லா சொன்னதாக" குரானில் குறிப்பிடுகிறார் முகம்மது, ஆனால் அவரே 'ஷாஹி புகாரி'யில் வேறு விதமாக குறிப்பிட்டதாக 'அபு தார்' தெரிவிக்கிறார். உண்மையில் பாகன்களால் வழிபடப்பட்ட அந்த அல்லத் சிலைதான் இன்று காபாவாக உள்ளது என்பது பல அரேபிய வரலாற்று ஆய்வாளர்கள் ஒத்துக் கொள்ளும் ஒன்று.

காபாவுக்கும். ஆப்பிரகாம் மற்றும் இஸ்மாயிலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அது பாகன்களின் பாரம்பரிய சின்னம் என்று அரேபிய வரலாற்றை ஆய்வு செய்த எகிப்திய பேராசிரியர் டாக்டர் தஹா ஹுசைன் ( Dr. Taha Husayn) தெரிவிக்கிறார். முகம்மது அவர்களே காபா பாகன்களின் பாரம்பரிய சின்னம் என்பதால் அதை இடிக்க நினைத்ததாக ஒரு "ஹடித்" தெரிவிக்கிறது (Sahih Bukhari 1:3:128)

அடுத்து ஐந்து நேர தொழுகை சடங்கு எங்கிருந்து வந்தது என்றால் அதுவும் பாகன்களிடம் இருந்துதான். பாகன்கள் மெக்காவை நோக்கி ஐந்து முறை தொழுதார்கள். அது போலவே பாரசீக ஜொராஸ்ட்ரிய பழங்குடியினரோ ஐந்து முறை சூரியனை நோக்கி தொழுதார்கள். தொழுவதற்கு முன் அவர்கள் தங்களை சுத்தப்படுத்திக் கொள்வார்கள். இதை அப்படியே நடை முறை படுத்தினார் முகம்மது நபி. சூரியனுக்கு பதில் இங்கே மெக்காவின் திசை வைக்கப்பட்டது.

அரேபிய பாகன்களின் முக்கிய கடவுளான ஹபல் (Hubal) சந்திர பிறையால் குறிக்கப்பட்டார். (படம் பார்க்க) அது முகம்மது அவர்கள் உருவாக்கிய‌ இஸ்லாமில் எத்தனை முக்கியத்துவம் வாய்ந்தது என்பது அனைவரும் அறிந்ததே.

மேலும் காபா கல்லை ஏழு முறை சுற்றுவது பாகன்களின் சடங்குதான். இது உருவ வழிபாட்டை பின்பற்றும் இந்துக்கள் , பௌத்தர்கள் மற்றும் சமனர்களிடமும் உள்ளது. ஆனால் அருவ வழிபாட்டை போதிக்கும் முகம்மது ஏன் ஏழு முறை சுற்ற சொல்ல வேண்டும் ? ஏனென்றால் அவரே இந்த பாகன் நடைமுறையை பின்பற்றி வந்தார் என்பதே உண்மை.

இதை குறித்து அடுத்த பாகத்தில் மேலும் ஆராய்வோம்.

Keerthivasan

About Keerthivasan -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :