Monday, October 26, 2015

Keerthivasan

ரத்தத்தில் முளைத்த என் தேசம் - 06


Englightened Master


முகம்மது அவர்களே அரேபிய பூர்வீக மதமான பாகன்களின் பலவிதமான வழிபாட்டு முறைகளை பின்பற்றினார், மற்றவர்களை பின்பற்ற வைத்தார் என்பதை பார்த்தோம். ஆகையால் இஸ்லாம் என்பது ஒரு முற்றிலும் மாறுபட்ட‌ மதம் என்பது போலவும், அதில் உள்ளது அனைத்தும் வித்யாசமானது என்பது போலவும் ஒரு தோற்றத்தை உருவாக்க நினைப்பவர்களின் திட்டம் இதன் மூலம் முறியடிக்கப் படுகிறது.

மெக்காவை கைப்பற்றிய பின் முகம்மது அவர்கள் அரேபியாவில் உள்ள பல இடங்களை போரிட்டு பிடிக்கிறார். கிழக்கு அரேபியாவில் உள்ள பல பாகன் கோவில்களை தாக்கி அழிக்கிறார். மேற்கு அரேபியாவிலோ "தைஃப்" என்கிற நகரமே மிஞ்சி இருக்கிறது. அந்த நகரத்தினர் அவரிடம் சரனடைய முன்வந்தாலும், அவர்கள் இஸ்லாமுக்கு மதம் மாறினால் தான் அதை ஏற்றுக் கொள்வேன் என்கிறார். அங்குள்ள பாகன்களின் கோவில்களை அழிக்கவும் அவர் உத்தரவிடுகிறார்.

முகம்மது இதற்கு முன்பு யூதர்கள் வசிக்கும் "கைபரை" கைப்பற்ற தாக்குதல் நடத்தியதாகவும், அங்குள்ள பல கோட்டைகளை பிடித்து பலரை கொடூரமாக கொன்றொழித்தார் என்றும், தன்னுடைய குடும்பம் முழுவதும் கொல்லப்பட்ட நிலையில் ஒரு யூதப் பெண் அவருக்கு உணவு பறிமாறுகையில் ஆட்டிறைச்சியில் விஷம் வைக்கிறார் என்றும் சொல்லப்படுகிறது. அதன் பின் ஒன்றிரண்டு ஆண்டுகளில் முகம்மது அந்த விஷத்தின் வீரியத்தால் நோயுற்று இறப்பதாகவும் கூறுகிறார்கள்... யூத மற்றும் கிறிஸ்துவ அறிஞர்கள் பலர், முகம்மது இறை தூதராக இருந்திருந்தால் விஷம் அருந்தி மரணமடைவாரா ? மேலும் யூதப் பெண் விஷம் வைக்க போகிறாள் என்பதை ஏன் அவர் முன் கூட்டியே யூகிக்கவில்லை ? என்று கேள்வி எழுப்புகின்றன.

முகம்மது நபி அவர்கள் நல்லவரா அல்லது தீயவரா, அவரின் செயல்கள் நியாயமானதா, அநீதியானதா போன்றவை இந்த கட்டுரைக்கு அவசியமில்லாதது. அவர் உண்மையில் இறைதூதரா இல்லையா என்பதும் நமக்கு அவசியமில்லை. அவர் செய்ததாக சொல்லப்படுகிற பல கொடூர செயல்களை பட்டியல் இடுவதும் நம் நோக்கமல்ல. ஆனால் அவரை பின்பற்றுபவர்களாக சொல்லிக் கொண்டவர்கள் எப்படிப்பட்ட தீமையை இந்திய‌ நாட்டுக்கு ஏற்படுத்தினார்கள் என்பதே இந்த கட்டுரைக்கு மிக அவசிய‌மாகிறது. முகம்மதை பின்பற்றியவர்கள் அவரின் வாழ்வில் இருந்து பல செய்திகளையும், அவரின் போதனைகள் என்று சில கோட்பாடுகளையும் பின்பற்றினர். அதுதான் உலகின் வரலாற்றை மிக கொடூரமாக மாற்றியது அவற்றை குறித்து பார்ப்போம்.

Keerthivasan

About Keerthivasan -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :