Monday, October 26, 2015

Keerthivasan

ரத்தத்தில் முளைத்த என் தேசம் - 07

Englightened Master



 முகம்மது அவர்களின் மரணத்திற்கு பிறகு நான்கு கலீஃப்கள் அவருக்கு பின் ஆட்சி ஆண்டார்கள். ஒரு இஸ்லாமிய அரசன் "ஜிகாத்" என்கிற புனித போர் செய்து இஸ்லாத்தை, இஸ்லாம் அல்லாதவர்களிடம் கொண்டு செல்வது அல்லாவின் கட்டளை என அவர்கள் நம்பினார்கள். இதனால் ஒவ்வொரு கலீஃபின் ஆட்சியிலும் இஸ்லாம் பல நாடுகளுக்கு பெருகியது. பைஜான்டைன் (Byzantine ) மற்றும் பாரசீக பேரரசுகள் தங்களுக்குள் நெடுங்காலம் போர் புரிந்து அச்சமயத்தில் மிகவும் பலவீனமான நிலையில் இருந்தன. மேலும் பைஜான்டைன் பேரரசு தங்கள் சாம்ராஜ்யத்தில் இருந்த சிரியா மற்றும் எகிப்தின் மீது கிறிஸ்துவத்தை தினித்து வந்தது அம்மக்களுக்கு இடையே வெறுப்பை ஏற்படுத்தி இருந்தன. இதை பயன்படுத்திக் கொண்ட முஸ்லீம் படைகள் ஜிகாத் என்கிற புனிதப் போரை தொடங்கி பாரசீகத்தை தாக்கியது. வெறும் இருபதே வருடங்களில் முஸ்லீம் படைகள் சிரியா, பாரசீகம், எகிப்து என பல நாடுகளை விழுங்கியது.

அதன் பின் மூன்றாம் கலீஃபின் உறவினரான "முவையா"வின் (Muawiyah) ஜிகாதிய போர்களினால் "உமாயத் பேரரசு" என சிரியாவின் டெமாஸ்கஸை தலைநகராக கொண்டு அது விரிந்தது. வட ஆப்ரிக்கா, ஐரோப்பிய நாடுகளான ஸ்பெயின் மற்றும் தென் மேற்கு பிரான்ஸ் வரை அது விரிந்தது. மற்றொரு புறம் பண்டைய பாரதத்தின் ஒரு பிரதேசமாக இருந்த ஆப்கான் மற்றும் சிந்து பிரதேசத்தை நோக்கியும் அது விரியத் தொடங்கியது.

முஸ்லீம் படை இத்தனை வேகமாக விரியக் கூடியதற்கு் முக்கிய காரணமாக ஜிகாத் இருந்தது என்கிறார்கள் ஆய்வாளர்கள். ஜிகாத் ஒரு மத ரீதியான நிர்பந்தத்தை ஏற்படுத்துகிறது. இறைவனின் கட்டளை எனும் பெயரில் போர் புரியும் போது ஒரு பெறும் உந்து சக்தி கிடைக்கிறது. மேலும் மதம் மாறிய மக்களை இது உடனுக்குடன் ஒன்றினைக்கிறது. மேலும் இப்படி போர் புரிவதினால் இறந்த பிறகு மறுமையில் சுவர்கமும், சுகபோகங்களும் கிடைக்கும் எனும் கோட்பாடு பலரை இதில் ஈடுபட தூண்டுகிறது என்கிறார்கள்.

போர் யுக்திகளில் முகம்மதுக்கு பின் வந்தவர்கள் அவரின் பல யுக்திகளை பின்பற்றுவதாக கூறிக் கொண்டு களம் இறங்கினார்கள். வெற்றியும் பெற்றார்கள். அதில் முக்கியமான சிலவற்றை பார்க்கலாம்.

முகம்மது அவர்களின் வாழ்க்கை நெறிப்ப‌டி போரில் ஏமாற்றுவதில் தவறில்லை என்று சில வஹாபிய மதகுருக்கள் "அல் தக்கியாவை" முன்வைக்கிறார்கள். முகம்மது அரேபியாவில் பொது ஆண்டு 627ல் "ட்ரெண்ச்" (Battle of the Trench) என்கிற போருக்கு ஆயத்தமாகிறார். "அல் அஹ்சப்" என்கிற பழங்குடியினர் அவருக்கு எதிராக அணிதிரள்கின்றனர். அதில் உள்ள "நைம் இப்ன் மசூத்" (Na'im ibn Mas'ud ) என்கிற ஒரு பழங்குடி நபர் மட்டும் முகம்மதோடு சேர்ந்து முஸ்லீமாக மதம் மாறுகிறார். இது அவரின் அல் அஹ்சப் பழங்குடியனருக்கு தெரியாது. முகம்மது, மசூதிடம், "மதமாறியதை நீங்கள் வெளிப்படுத்தாதீர்கள், அதை மறைத்துக் கொண்டு பழகுங்கள், எதிரிகளை பிரித்து துண்டாடுங்கள்" என்று அறிவுரை கூறுகிறாராம். அவர் பேச்சை கேட்டு மசூத், அந்த பழங்குடியினருக்கு தவறான அறிவுரைகளை கொடுத்து, எதிரிக‌ளுக்கு இடையே பகைமையையும், நம்பிக்கை இன்மையையும் வளர்த்து, அவர்களின் வளர்ச்சியை குன்ற செய்கிறாராம்.

மேலும் பார்ப்போம்.

Keerthivasan

About Keerthivasan -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :