Saturday, November 21, 2015

Keerthivasan

ரத்தத்தில் முளைத்த என் தேசம் - 09

ரத்தத்தில் முளைத்த என் தேசம் - 09

Englightened Master


உலகெங்கும் இஸ்லாம் பரவத் தொடங்கியதும், அந்த‌ நாடுகள் கீழ் கண்ட வகையில் பிரிக்கப்பட்டன ? தொடர்கிறது

தர் அல் ஹர்ப் - இதன் படி ஒரு நாட்டில் முஸ்லீம்கள் சிறுபான்மையாக இருக்கின்ற நிலையில் அந்த நாடு தூய்மை இழந்ததாக கருதப்படுகிற‌து. ஆகையால் அந்த நாட்டு மக்களை (முஸ்லீம் அல்லாதவரை) மதம் மாற்ற வேண்டும் அல்லது கொல்லப்பட வேண்டும். ஆனால் அந்த நாட்டை சேர்ந்த புனித நூலை பின்பற்றும் மக்கள் விரும்பினால் அந்த முஸ்லீம் அல்லாதோர் மீது "ஜிஸ்யா" எனப்படும் வரியை கட்டவைத்து அவர்களை சகித்துக் கொள்ளலாம்.

தர் அல் அம்ன் - மூஸ்லீம்கள் அதிகம் இல்லாத நாடுகளில், தங்கள் மதத்தை முஸ்லீம்கள் பின்பற்றும் உரிமையை இது குறிக்கிறது.

தர் அல் தாவா - முஸ்லீம்களே இல்லாத ஒரு நாட்டில் புதியதாக இஸ்லாமை கொண்டு செல்வது.

இப்படி ஒரு நாட்டில் முஸ்லீம்களின் எண்ணிக்கையை பொறுத்தே தங்கள் அனுகுமுறையை மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப் பட்டார்கள். பெரும்பாலும் பிற‌ மத சகிப்புத்தன்மை என்பது முகமதிற்கு பின் வந்தவர்களுக்கு ஒரு யுக்தி ரீதியான அனுகுமுறையே தவிர, உள்ளத்திலிருந்து ஏற்படும் ஒரு உணர்வாக இல்லை. இதற்கும் முகமது அவர்களே முன்னோடியாக இருந்தார் என சிலர் குறிப்பிடுகிறார்கள்.

முகம்மது அவர்கள் மெக்காவை சேர்ந்த வெகு சில சீடர்களுடன் மெதினாவுக்கு செல்கிறார். மெதினாவில் உள்ள பழங்குடியினர் அவரை எதிர்க்கவில்லை. மெதினாவில் உள்ள பழங்குடி மக்கள் பலதரப்பட்ட பின்புலத்தை கொண்டவர்களாக இருக்கிறார்கள். சிலர் யூதர்கள், வேறு சிலரோ அரேபிய பாகன் சமுதாயத்தை சேர்ந்தவர்கள். வேறு சிலர் வேறு பல பழக்க வழக்கங்களை கொண்டவர்கள். முகம்மது இவர்கள் அனைவரையும் ஒன்றினைக்கிறார். இந்த ஒருங்கினைப்பை அவர் "உம்மா" என்று அழைக்கிறார். அவரவர் அவரவரின் விருப்பம் போல நம்பிக்கைகளை பின் தொடரலாம் என்கிற சட்ட அமைப்பையும் ஏற்படுத்துகிறார். இந்த சட்ட அமைப்பின் மூலம் பல்வேறு மத நம்பிக்கை உள்ளவர்களும் தங்களை பரஸ்பரம் பாதுகாத்துக் கொள்ளவும், ஒருங்கினைப்பை ஏற்படுத்திக் கொள்ளவும் வழி வகை செய்கிறார். அது போலவே தங்களை போலவே பழைய ஏற்பாட்டினை பின்பற்றும் ஆப்ரகாமிய மதத்தவர்களுக்கு (யூத, கிறிஸ்துவ பழங்குடிகள்). அல்லாவும், முகம்மதும், சிறப்பு பாதுகாப்பை தருவார்கள் எனும் வகையில் "திம்மா கான்ட்ராக்ட்" ( dhimmah contract) என்கிற ஒரு ஒப்புதலை தருகிறார். இந்த திம்மா கான்ட்ராக்ட் தான் இஸ்லாமியர்களுக்கும், இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கும் ஒரு பாலமாக இருந்ததாக சொல்கிறார்கள்.

இந்த திம்மா ஒப்புதல்படி இஸ்லாமியர்களுக்கும் மற்ற மதத்தினருக்கும் சமமான உரிமைகளே அளிக்கப்படுகிறது. ஆனால் அதன்பின் மெக்காவின் மீது நடந்த போரில் வெற்றிப் பெற்று முகம்மது அவர்களின் படை பலம் பெற்ற பின் மாற்று மதத்தினரோடு அவர் ஏற்படுத்திய ஒப்பந்தங்களில், பல மாறுதல்கள் செய்யப்பட்டன. இஸ்லாமிய வழக்கப்படி மாற்று மதத்தினரும் "ஜகத்" எனும் வரியை செலுத்தியாக வேண்டும் என்று நிர்பந்திக்க‌ப்படுகிறது.

மெதினாவில் முகம்மது "உம்மா" என்று குறிப்பிட்டது அனைத்து மதத்தவரையும் அரவனைத்துக் கொள்ளும் "ஒன்றினப்பு குழுவாக" இருக்கிறது. இதில் பல மத பழங்குடியினரும் அடங்குவார்கள். ஆனால் மெக்காவை கைப்பற்றி குரோஷியர் பலரை முஸ்லீம்களாக மாற்றிய பின் உம்மாவில் சேர வேண்டும் என்றால் "கட்டாயம் முஸ்லீமாக மாறுவேன்" என்கிற உறுதி மொழி தர வேண்டும் என்று மாற்றி அமைக்கிறார் முகம்மது. இவ்விடத்தில் இஸ்லாம் என்பது பாகன்களிடம் இருந்து வேறுபடுவது மட்டும் அல்ல, அது யூத மற்றும் கிறிஸ்துவ மதங்களிடம் இருந்து வேறுபடும் தனித்துவமான ஒரு மக்கள் கூட்டம் என்பதை காட்டுகிறார் முகம்மது. அதாவது ஒரு நாட்டில் முஸ்லீம்களின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க‌ சட்டதிட்டங்களும் மாறும் என்பதை இது உணர்த்துவதாக ஆய்வாளர்கள் சொல்கிறார்கள்.

மேலும் பார்ப்போம்.


Keerthivasan

About Keerthivasan -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :